ராமநாதபுரம் சக்கரகோட்டையில் புதிதாக தொழிற்பேட்டை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் சக்கரகோட்டையில் புதிதாக தொழிற்பேட்டை

Added : ஏப் 03, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ""தமிழகத்தில், ராமநாதபுரம் சக்கரகோட்டை உட்பட ஏழு புதிய தொழிற்பேட்டைகள், 2013-14ம் ஆண்டில் உருவாக்கப்படும்,'' என, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் மோகன் கூறினார்.

துறையின் நிதியாண்டு திட்டங்கள் பற்றி, சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு: சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், சிட்கோ மூலம், காட்டு வன்னஞ்சூர் (விழுப்புரம்), பர்வதனஹல்லி, ஈச்சம்பாடி (தருமபுரி), மல்லூர் (அரியலூர்), பெரிய நெசலூர் (கடலூர்), சக்கரக்கோட்டை (ராமநாதபுரம்), வேட்டம்பாடி (நாமக்கல்) ஆகிய இடங்களில் ஏழு தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓசூர், சேலம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகள், விருத்தாசலத்தில் உள்ள பீங்கான் தொழிற்பேட்டை ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகள், 2 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில், 25 லட்சம் ரூபாய் செலவில், பொது வசதி மையம் அமைக்கப்படும். தொழில் வணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, சேலம், தூத்துக்குடி ரசாயன பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
நீலகிரி மாவட்ட தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு மின்னணு தராசுகள் வழங்க, 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு, அமைச்சர் மோகன் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை