15 நாட்களாக வலம் வந்த போலி துணை மேலாளர் : "உறக்கத்தில்' போக்குவரத்து கழக அதிகாரிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: அரசு போக்குவரத்து கழக சேர்மன் அலுவலக, துணை மேலாளர் எனக் கூறி, ஈரோடு போக்குவரத்து கழக டிப்போக்களில், 15 நாள் வலம் வந்து, சுக போகமாக வாழ்ந்தவர் பிடிபட்டார். "பதவி உயர்வு வாங்கித் தரும்படி கேட்டு, பணம் கொடுக்கும் முன், பிடிபட்டதால் தப்பித்தோம்' என, அலுவலர்கள் தெரிவித்தனர். கடந்த, 15 நாட்களுக்கு முன், சென்னை அரசு போக்குவரத்து கழக சேர்மன் அலுவலக துணை மேலாளர், டெக்னிக்கல் பிரிவு என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், ஈரோடு, பஸ் ஸ்டாண்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு வந்தார்.
தொடர்ந்து, கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்துக்கு சென்று, "அறிவுரை' வழங்கினார்.
சேர்மன் அலுவலக துணை மேலாளர் என்பதால், தங்குவதற்கு லாட்ஜில் ரூம் முதல், பல வசதிகளை, அந்தந்த கிளை அலுவலகத்தில் செய்து கொடுத்தனர். அதிகாரிகள், அலுவலர்கள் என, பலரும், பணி இடமாற்றம், பதவி உயர்வு கோரிக்கை விடுத்தனர். அதற்கான பணத்தையும், தயார் செய்தனர்.
கடந்த, 31ம் தேதி, கவுந்தப்பாடி கிளை அலுவலகத்துக்கு அவர் சென்ற போது, உள்ளே நுழைய, அடையாள அட்டையை காட்டும்படி, டெப்போ காவலர் கேட்டுள்ளார்.
சாதுர்யமாக பேசித் தேடியவர், நைசாக தப்பினார். இது பற்றி, காவலர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்; மற்ற டெப்போக்களுக்கும், தகவல் பறந்தது.
கடந்த, 1ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு, துணை மேலாளர் என, தன்னைக் கூறிக் கொண்டவர், வந்தார். பணியில் இருந்த, இணை கமிஷனர் மனோகரன், பேச்சு கொடுத்து மடக்கி, அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றார்.

இதுகுறித்து மனோகரன் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டுக்கு வந்தவர், வழக்கம் போல வணக்கம் போட்டார். அவரிடம் அடையாள அட்டை கேட்டேன். ஏதோ நம்பருக்கு போன் செய்து, "பேக்ஸ்' செய்யும்படி கூறியவர், தப்பிச் செல்ல முயன்றார். பிடித்து வந்து, அலுவலகத்தில் உட்கார வைத்தோம். பிடிபட்டவர், விழுப்புரம், சாலமேட்டை சேர்ந்த ரவி, 40, என, தெரிய வந்தது.
ஆரம்ப காலத்தில், "வெப்கோ' நிறுவனத்தில் பணியாற்றிய போது, அரசு போக்குவரத்து கழகத்துக்கு உதிரி பாகம் விற்பனை செய்துள்ளார். பின், மனைவியுடன் இணைந்து, "சேப் மோட்டார்' எனும் பெயரில் அலுவலகம் துவங்கி, பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து, பயிற்சி வழங்கியுள்ளார்.
இதனால் போக்குவரத்து கழகம் பற்றி தெரிந்து கொண்டு, குறுக்கு வழியில் ஈடுபட்டு, தற்போது சிக்கினார். அதிகாரிகள் உத்தரவுப்படி, ஈரோடு போலீசாரிடம் ஒப்படைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மண்டல பொது மேலாளர் பெரியசாமி கூறுகையில், ""அதிகாரி என்று கூறி, அலுவலகத்துக்குள் எளிதாக சென்று விட்டார். அவரிடம் அடையாள அட்டை யாரும் கேட்கவில்லை. யாரையும் ஏமாற்றி பணம் பெறவில்லை. புகார் வராததால், முறைப்படி போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்