திண்டுக்கல் குண்டுவீச்சில் கைப்பற்றிய துப்பாக்கி, குண்டுகள் சென்னையில் ஆய்வு : கோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் குண்டுவீச்சில் கைப்பற்றிய துப்பாக்கி, குண்டுகள் சென்னையில் ஆய்வு : கோர்ட் உத்தரவு

Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல் வெடிகுண்டு வீச்சில் கைப்பற்றப்பட்ட குண்டுகள் மற்றும் ரிவால்வர் ஆகியவற்றை சென்னை தடய அறிவியல் ஆய்வுதுறைக்கு அனுப்பி வைத்து அறிக்கை பெற கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் ஒன்றிய(சுயே.,) கவுன்சிலர் முத்துப்பாண்டி, 48. கடந்த மார்ச் 27ல், திண்டுக்கல் கோர்ட்டில் கொலை வழக்கு ஒன்றிற்காக ஆஜராகிவிட்டு வெளியே வந்தார். இவரை கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்ட முயன்றது. இது தொடர்பாக நடராஜன், ராஜா, சுபாஸ்சந்திரகுரு உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். காரில் வெடிகுண்டு, ரிவால்வர் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததற்காக, முத்துப்பாண்டியும் கைது செய்யப்பட்டார். குண்டு வெடித்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள், ஒன்றிய கவுன்சிலர் காரில் இருந்த வெடிக்காத குண்டு, ரிவால்வர் ஆகியவற்றை சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்க அனுமதி வழங்குமாறு, நகர் வடக்கு போலீசார் ஜே.எம்.2 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் அறிவு, இவற்றை சென்னைக்கு அனுப்பி வைத்து அறிக்கை பெற உத்தரவிட்டார்.
---

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை