Advertisement
சமையலராக மாறும் கைதிகள்: சிறையில் "பயிற்சி' துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
00:35

திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு, சமையல் கலை உதவியாளர் பயிற்சி வகுப்பு துவங்கியது. முதல்கட்டமாக, 20 கைதிகள் சமையல் கலை பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.


திருச்சி மத்திய சிறையில், 2,000த்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில், தண்டனைக் கைதிகள் மத்தியில் குற்ற எண்ணங்களை போக்கி, அவர்களை சாதாரண மனநிலைக்கு திரும்பும் வகையில் கல்வி, தொழிற்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள், சிறைத்துறை நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது. திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு கல்வி போதிக்க, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மூலம் கைதிகள், பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சமையல் கலை உதவியாளர், ஓராண்டு பட்டய பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம் துவங்கியது. பயிற்சி வகுப்பில், முதல்கட்டமாக, 20 கைதிகள் பங்கேற்றனர். கைதிகளுக்கான சமையல் கலை பயிற்சி வகுப்பு துவக்க விழாவில், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர், சுவாதி சமுதாய கல்லூரி இயக்குனர், முதல்வர் மற்றும் ஜென்னீஸ் அகடமி இயக்குனர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
04-ஏப்-201316:21:23 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar குற்ற எண்ணங்கள் குறைக்க நடவடிக்கை ஏற்றுகொள்ள கூடியவை ..,அவர்கள் தண்டனைக்கு பிறகு ..,மருத்துவ மன சிகிச்சை பிறகு செய்து அவர்களுக்கு தொழில் பயிற்சி மிகவும் சிறப்பானதாக அமையும் -
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
04-ஏப்-201310:13:55 IST Report Abuse
kumaresan.m சிறை துறை அதிகாரிகள், சிறை கண்கானிப்பாளர்கள் மற்றும் சிறை காவலர்கள் ....நீங்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா ? ஏன்னா இதை போன்று நல்லதையும் செய்யிறீங்க மற்றும் சிறைக்குள் தாராளுமாக போதை பொருட்கள் மற்றும் தொலை பேசி வசதிகள் கிடைக்க செய்யறீங்க ..... எங்களால உங்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.