Corporation accountant suspend for malpractice | வரித்தொகையில் "வாழ்க்கை' நடத்திய மாநகராட்சி காசாளர்: இதுவரை ரூ.13 லட்சம் "ஸ்வாகா'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரித்தொகையில் "வாழ்க்கை' நடத்திய மாநகராட்சி காசாளர்: இதுவரை ரூ.13 லட்சம் "ஸ்வாகா'

Added : ஏப் 04, 2013 | கருத்துகள் (21)
Advertisement
Corporation accountant suspend for malpractice

மதுரை: மதுரை மாநகராட்சியின் வரி தொகையை வங்கியில் செலுத்தாமல், ரூ.13 லட்சத்தை "பாக்கெட்'டில் பதுக்கிய ஊழியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

மாநகராட்சி மண்டலம் 3ன் கருவூலப்பிரிவின் காசாளர் ராஜேஷ் பிரசன்னா. வசூலாகும் பணத்தை, வங்கியில் செலுத்த வேண்டும். மாறாக, வசூல் பணத்தை இவரே எடுத்துக் கொண்டு, செலுத்தியதாக போலி "சலான்' சமர்ப்பித்து வந்துள்ளார். அதற்காக, அதிகாரிகளின் கையெழுத்தையும் இவரே போலியாகபோட்டுள்ளார். ஒரு கட்டத் தில் வருவாய் கணக்கு இடித்ததால், கண்காணிப்பாளர்(பொறுப்பு) ராஜாராம் விசாரித்தார். இறுதியாக செலுத்திய 2013 மார்ச் 1 முதல் 30 வரையிலான வசூல் பணம், ரூ.1.98 லட்சம் குறித்து வங்கியில் விசாரித்த போது, தொகை அங்கு வராதது தெரியவந்தது.

விசாரணையில், வங்கியில் செலுத்த வேண்டியதொகையை ராஜேஷ் பிரசன்னா கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜாராம் செய்த புகாரின் பேரில், ராஜேஷ் பிரசன்னாவை நிர்வாகம்"சஸ்பெண்ட்'செய்துள்ளது. இது போல், ரூ.13 லட்சம் வரை கையாடல் செய்ததும், தெரியவந்துள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரி, மயான உதவியாளராக நியமிக்கப்பட்டவர். வேலை ஏற்பாட்டின் கீழ், மண்டலம் 3க்கு மாற்றப்பட்டு, அதன் பின் மைய அலுவலக கருவூலத்தில் பணியாற்றினார். பணியில் சேர்ந்த முதல் மாதத்திலேயே ரூ.40 ஆயிரம் கையாடல் செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால், தண்டனை வழங்கப்படாமலேயே, மத்திய வருவாய் பிரிவிற்கு அவரை மாற்றினர். ஆனாலும், அவர் மீதான சர்சைகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், 2012 செப்.,ல் மண்டலம் 3ன் கருவூலப்பிரில் பணி அமர்த்தப்பட்டார். "பணம் புழங்கும் இடத்தில் இவரை பணியமர்த்த வேண்டாம்,' என, தணிக்கை அதிகாரிகள் பலமுறை தெரிவித்திருந்தும், தொடர்ந்து பணம் புழங்கும் இடத்தில் மட்டுமே அவர் பணியமர்த்தப்பட்ட ரகசியம் தெரியவில்லை. "ராஜேஷ் பிரசன்னாவின் ஒட்டுமொத்த பணிகாலத்தையும் ஆய்வில் கொண்டு வந்துள்ளோம். கையாடல் செய்த தொகை, மேலும் அதிகரிக்கலாம்,' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
04-ஏப்-201322:15:07 IST Report Abuse
தஞ்சை மன்னர் அதிகாரிகளை கவனிக்க மறந்து இருப்பார். அதனால் இந்த தண்டனை சஸ்பென்ட் , வேலை சேர்ந்த நாள் முதல் திருடி வந்தானம் இந்த நா அப்போதே கழுத்தை திருகி வேலை நீக்கம் செய்து இருந்தால் இப்போது வேலை சேர்த்த முதல் எவ்வளவு திருடி இருப்பன் என்ற கணக்கு பார்க்க தேவை இல்லையே ?
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
04-ஏப்-201320:35:56 IST Report Abuse
adithyan இது ஒன்றும் பெரிய குற்றமல்ல. கற்களை வெட்டி எடுத்ததில் அழகிரி மகன் செய்த ஊழல் பதினையாயிரம் கோடி. இது அதவிட ஒன்றும் பெரிதல்ல. மக்களை மறுபடியும் கட்ட சொல்ல முடியாது. இதில் அந்த கௌன்சிலருக்கும் பங்கு இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
04-ஏப்-201319:20:13 IST Report Abuse
ravi ramanujam r இவர் அரசியலுக்கு வருவதற்கு அச்சாரமா இந்த முயற்சி. இந்த முயற்சியின் பலன் எதிர்கால மாண்புமிகு ஆக கொண்டு நிறுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-201317:30:37 IST Report Abuse
S.RAJA சரியா சொன்னாரு. விரு விரு விருமாண்டி அண்ணாச்சி.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
04-ஏப்-201316:45:29 IST Report Abuse
தமிழ் குடிமகன் பெரிய திருடன்களை காப்பாற்ற இதுமாதிரி சின்ன திருடன்களை பலிகடவாக்கப்படுகிரார்கள் ,,,,,,,,இவர்களும் சீக்கிரம் வெளியே வந்துவிடுவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
04-ஏப்-201316:42:19 IST Report Abuse
தமிழ் குடிமகன் இதெல்லாம் சின்ன திருட்டுதான் விடுங்க பாஸ் .............பெரிய திமிங்கலமெல்லாம் ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கு .................malaimul
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
04-ஏப்-201316:41:10 IST Report Abuse
தமிழ் குடிமகன் ggood
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
04-ஏப்-201312:13:50 IST Report Abuse
saeikkilaar கையை வெட்டினால் திருட மாட்டமா ??? வாய் இருக்கு , பினாமி இருக்கு ஹாய் ஹாய்
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
04-ஏப்-201311:49:53 IST Report Abuse
Rajasekaran Palaniswamy "பணம் புழங்கும் இடத்தில் இவரை பணியமர்த்த வேண்டாம்,' என, தணிக்கை அதிகாரிகள் பலமுறை தெரிவித்திருந்தும், தொடர்ந்து பணம் புழங்கும் இடத்தில் மட்டுமே அவர் பணியமர்த்தப்பட்ட ரகசியம் தெரியவில்லை"...... அப்படியானால் இவருடன் மற்றவர்களுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும். கொள்ளை அடித்த பணம் நிச்சயம் சின்ன வீட்டிற்குதான் சென்றிருக்கும். நன்கு விசாரித்து மாலை மரியாதையுடன் உயர் பதவி விரைவில் வழங்குங்கள். (இதுவரை எந்த அரசு பணியாளர்/அதிகாரிகள் தண்டிக்கபட்டுல்லார்கள்?)
Rate this:
Share this comment
Cancel
Saravana Kumar Guru Mohana - Kabul,ஆப்கானிஸ்தான்
04-ஏப்-201311:42:53 IST Report Abuse
Saravana Kumar Guru Mohana சஸ்பென்ட ..என அநியாயம் அவன் சொத்த + அவன் சொந்தகாரங்க சொத்து பூராம் அரசாங்கம் முடக்கனும் ..உடனே கைது செஞ்சி வேலை நீக்கம் செய்யணும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை