| E-paper

 
Advertisement
குஜராத் அரசுக்கு 17 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

காந்திநகர் : குஜராத் சட்டசபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.,) அறிக்கையின் படி, மாநிலத்தில் நிலவிய லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளால், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த, 2009 - 10 மற்றும் 2010 - 11ம் ஆண்டிற்கான, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை, மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த லஞ்சம், ஊழல் முறைகேடுகளால், மாநில கஜானாவுக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளை தடுக்க, மோடி அரசு தவறிவிட்டது என்றும், கணக்கு தணிக்கை அதிகாரி, அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிறந்த நிர்வாகத்தால், பிற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் என்ற பெருமைக்கு நரேந்திர மோடி சொந்தக்காரர். அது போன்ற பல காரணங்களால், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், அவருக்கு பாராட்டு கிடைத்து வரும் நிலையில், சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள், அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agaram - Coimbatore,இந்தியா
24-ஏப்-201310:22:06 IST Report Abuse
Agaram நோ கமெண்ட்ஸ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.