காங்கிரஸ் உடன் கூட்டணியா? சரத் யாதவ் திட்டவட்ட மறுப்பு| Dinamalar

காங்கிரஸ் உடன் கூட்டணியா? சரத் யாதவ் திட்டவட்ட மறுப்பு

Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சகர்சா : ""வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை,'' என, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ் கூறினார். ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர்களில் ஒருவரான, நிதிஷ்குமார், பீகார் முதல்வராக உள்ளார். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக, மத்திய அரசுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாக, நிதிஷ் மீண்டும் டில்லி வந்தபோது, அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சாதகமான பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பா.ஜ., சார்பில், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன் நிறுத்தப்பட முஸ்தீபுகள் துவங்கிவிட்டது. இது, நிதிஷுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இவ்வித காரணஙகளால், நிதிஷ் சார்ந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கிளம்பின.இந்நிலையில், பீகாரில் உள்ள, தன் சொந்த தொகுதியான மதேபுராவுக்கு, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் வந்தார்.தே.ஜ.,கூட்டணியின் அமைப்பாளராக உள்ள சரத் யாதவ், கிளப்பிவிடப்படும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூறியதாவது:வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இப்படி நிலை வருமா என்பதை காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை.குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என பா.ஜ., க்குள் தான் கருத்துக்கள் எழுந்துள்ளன. பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டியது தே.ஜ., கூட்டணி தான். இது குறித்து, தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.பா.ஜ., பார்லிமென்ட் போர்டுக்கு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது, உட்கட்சி விவகாரம். இவ்வாறு, சரத் யாதவ் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை