குட்கா, பான் பராக் பயன்படுத்த தடை சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்'| Dinamalar

குட்கா, பான் பராக் பயன்படுத்த தடை சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்'

Added : ஏப் 04, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : "புகையிலை தொடர்பான பொருட்கள் மற்றும் குட்கா, பான் பராக் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை, எந்த அளவுக்கு பின்பற்றப்படுகிறது' என்பதை, அறிக்கையாக தருமாறு, 23 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று, "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. புற்றுநோயை உண்டாக்குவதாக கூறப்படும், புகையிலை தொடர்பான பொருட்களை, நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என, தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே, "நோட்டீஸ்' அனுப்பியிருந்தது. இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், "மகாராஷ்டிரா, டில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களில், குட்கா விற்பதற்கும், தயாரிப்பதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையுத்தரவை, மாநில அரசுகள் முறையாக பின்பற்றவில்லை' என, கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான, "பெஞ்ச்' நேற்று பிறப்பித்த உத்தரவு: புகையிலை தொடர்பான பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை, எந்த அளவுக்கு பின்பற்றப்படுகிறது என்பதை, 23 மாநிலங்களும், ஐந்து யூனியன் பிரதேசங்களும், அறிக்கையாக, தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்து, இந்த மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், "நோட்டீஸ்' அனுப்ப, உத்தரவிடுகிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-201306:52:33 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் ஆனால் வசதியுள்ளவர்கள் பயன்படுத்தும் சிகரெட்டுக்கு எந்நாளும் தடை வராது பெட்டிகளின் பலம் அப்படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை