Advertisement
நான்கு சகோதரிகள் மீது "ஆசிட்' வீச்சு கொடுமை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
01:38
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 01:03

முசாபர்நகர் : உத்தர பிரதேசத்தில், சகோதரிகள் நான்கு பேர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த, இரண்டு பேர், "ஆசிட்' வீசி தாக்கியதில், மூன்று பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த, 20, 23, 25, 26 வயது சகோதரிகள் நான்கு பேர், அப்பகுதியில் உள்ள பள்ளியில், ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்றனர். பள்ளித் தேர்வு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள், நான்கு பேரும், பணி முடிந்து, நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த, அடையாளம் தெரியாத நபர்கள், இரண்டு பேர், சகோதரிகள் மீது, "ஆசிட்' வீசி விட்டு, தப்பி சென்று விட்டனர். உடல் முழுவதும் தீப்பிடித்து, உடைகள் கருகி, அலறித் துடித்த, சகோதரிகள், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மூன்று பேரின் உடல் நிலை மோசமானதால், அவர்கள், மேல் சிகிச்சைக்காக, டில்லியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார், அடையாளம் தெரியாத நபர்களின் மீது, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, நான்கு சகோதரிகள் மீது, "ஆசிட்' வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kanagaraj Velusamy - bangalore,இந்தியா
04-ஏப்-201317:42:43 IST Report Abuse
kanagaraj Velusamy இதற்கு எல்லாம் காரணம் வளர்ப்பு சரியல்ல. முதலில் வீட்டில் வளர்ப்பு சரியாக இறுக்க வேண்டும். இல்லையன்றி நாட்டில் வளர்ப்பு சரியாக இருக்க வேண்டும் கடுமையான தண்டனை மூலம். நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் எங்கு பாதுகாப்பு இருக்கோ அந்த நாட்டுக்கு போங்க. சொந்த நாடு எல்லாம் சொந்த தனி மனிதன் பாதுகாப்புக்கு அப்பறம் தான் நன்றி வாழ்க
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
04-ஏப்-201313:42:01 IST Report Abuse
LAX இன்னும் பலர் சமூக விரோதிகளால் ஆசிட் வீசப்பட்டு சாகட்டும். அரசாங்கம் ஆசிட் முறையற்ற விற்பனைக்கு தடை விதித்து அவசரச் சட்டம் கொண்டுவராமல் வேடிக்கை பார்க்கட்டும். மனித உயிர்கள் மீது அக்கறை இல்லாமல், மனிதாபிமானமே இல்லாத இவர்களெல்லாம், ஆட்சியாளர்களா அல்லது பிணந்தின்னி கழுகுகளா?
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
04-ஏப்-201304:03:52 IST Report Abuse
Skv படுபாவிகளா உழச்சுத்தானே பிளைக்குராங்க வேலை வெட்டி இல்லாம சுத்தற நாயிங்களா அசிட் வீசும் அளவுக்கு அவிக செஞ்ச தப்பு என்ன . இந்த பாவிகளையும் அசிட் வீசியே கொல்லனும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.