மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு :"ஏர் இந்தியா' நிறுவன அதிகாரி பரபரப்பு தகவல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் உடல், சிங்கப்பூரில் இருந்து, டில்லிக்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக, "ஏர் இந்தியா' நிறுவன அதிகாரி, குறுக்கு விசாரணையின் போது, கோர்ட்டில், பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.சிங்கப்பூர்டில்லியில், கடந்தாண்டு டிசம்பரில், ஆறு பேர் கும்பலால், மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் இறந்ததை அடுத்து, டிசம்பர், 29ம் தேதி, சிங்கப்பூரிலிருந்து, டில்லிக்கு, ஏர் இந்தியா விமானத்தில், அவரது உடல் எடுத்து வரப்பட்டு, டில்லியில் தகனம் செய்யப்பட்டது. மாணவி பலாத்கார வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள, முகேஷ், அக்ஷய் ஆகியோரின் வக்கீல்கள், சாட்சிகளிடம், நேற்று குறுக்கு விசாரணை நடத்தினர். மாணவியின் உடல், டில்லி எடுத்து வரப்பட்டபோது, விமான நிலையத்தில், சரக்கு கையாளும் பிரிவில் பணியாற்றிய அதிகாரியிடம், குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள், "சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில், மருத்துவ மாணவியின் உடல் எடுத்து வரப்படவில்லை என்பது, எங்கள் வாதம். இதை, உங்களால் மறுக்க முடியுமா?' என, அந்த அதிகாரியிடம் கேட்டனர். அப்போது, அந்த அதிகாரி கூறியதாவது: 140 கிலோ சம்பவத்தன்று, டில்லி விமான நிலையத்தின், சரக்கு கையாளும் பிரிவில், பணியிலிருந்தேன். மாணவியின் உடல் கொண்டுவரப்பட்ட பெட்டி, ஒட்டு மொத்தமாக, 140 கிலோ இருந்தது. அந்த பெட்டி, சீலிடப்பட்டு இருந்தது. பெட்டியை திறந்து, சோதனையிடவில்லை. எக்ஸ்-ரே கருவி இல்லாததால், அந்த பெட்டி, எக்ஸ்-ரேக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே, அந்த பெட்டியில், சடலத்துக்கு பதிலாக, வேறு ஏதாவது இருந்ததா என்பது குறித்து, கருத்து தெரிவிப்பது, சரியாக இருக்காது. ஆவணங்களின் அடிப்படையில், அந்த பெட்டி, மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு, அந்த அதிகாரி, சாட்சியம் அளித்தார்.ஊட்டச்சத்து இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, வினய் சர்மா, "சிறையில், எனக்கு, ஊட்டச் சத்துள்ள உணவுகளை தரும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, கோர்ட்டில், தெரிவித்திருந்தான். இதையடுத்து, அவனுக்கு, ஊட்டச் சத்துள்ள உணவுகள் வழங்கப்படுவதாக, அவனது வக்கீல், பத்திரிகையாளர்களிடம், நேற்று தெரிவித்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arm.Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
04-ஏப்-201319:54:06 IST Report Abuse
Arm.Abdul Kadar ஏன் ஊட்ட சத்து கொடுத்து அடுத்த கற்பழிப்புக்கு தயார்ரக்கவா
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
04-ஏப்-201313:47:24 IST Report Abuse
LAX ஊட்டசத்துள்ள உணவு எதற்கு? இன்னும் புஷ்டியாகி பலரை ________________? ச்சே.... அது வழங்கப்படுவதாக வேறு ஒப்புதல் அளித்துள்ளனர். கேடுகெட்டவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
04-ஏப்-201313:44:38 IST Report Abuse
PRAVEEN ஊட்டச் சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டதா ? இதைவிட கேவலம் வேறே இருக்கா ????
Rate this:
Share this comment
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
04-ஏப்-201312:57:30 IST Report Abuse
N S Sankaran பாலியல் வன் கொடுமை குற்றவாளி "ஊட்டச்சத்துள்ள " உணவு கேட்டானாம், இவர்கள் கொடுத்தார்களாம். எதற்கு? அடுத்த வன்கொடுமைக்கா? கர்மம், கர்மம், நம் நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Prabu - singapore,சிங்கப்பூர்
04-ஏப்-201312:28:58 IST Report Abuse
Prabu அவங்களுக்கு AC கொடுக்க சொல்லுங்க வழக்கறிஞரே. அப்புறம் ரிலீஸ் பண்ணவும் வாதாடுங்க. அவன் திரும்ப வந்து உங்க பேர் மற்றும் IAF பேர் சொல்லி rape பண்ணுவான்.
Rate this:
Share this comment
Cancel
Mr.Zero - Tirunelveli,இந்தியா
04-ஏப்-201311:56:24 IST Report Abuse
Mr.Zero லேகிய வைத்தியர்த்ட கேட்டு நல்லா முந்தரி பாதாம் பிஸ்தா உள்ளதா குடுங்க, அப்பத்தான் அவனுக்கு நல்லா ........ இதான் இந்தியா தீர விசாரிகேன்னு சொல்லிட்டு தீர்ந்து போற அளவுக்கு விசாரிப்பாங்க
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201308:53:14 IST Report Abuse
Susil ம்ம் அப்புறம் என்ன சாட்சிதான் இல்லையே அவங்களை வெளிய விட வேண்டியதுதானே , இல்லையென்றால் நமது சட்டம் கோபித்து கொள்ளும் .
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
04-ஏப்-201305:00:40 IST Report Abuse
Skv எதுக்கு அடுத்து வேற எவளையாவது கற்பழிக்கவா ?????????ஊட்டம் ரொம்பவே தேவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்