Advertisement
"மாஜி' அமைச்சர் குடும்ப சண்டை விவகாரம் :கேரள சட்டசபை அமளியால் ஒத்திவைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

திருவனந்தபுரம் : மனைவியை தாக்கிய, கேரள முன்னாள் அமைச்சர் கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்காத, கேரள காங்., முதல்வர் ராஜினாமா செய்ய கோரி, எதிர்க்கட்சிகள் நேற்றும், மாநில சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்; இதனால், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. ராஜினாமா கேரள வனத்துறை அமைச்சராக இருந்த கணேஷ்குமார், தன்னை பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்துவதாக, அவரது மனைவி யாமினி, முதல்வர் உம்மன் சாண்டியிடம் புகார் அளித்ததை அடுத்து, கணேஷ்குமார் நேற்று முன்தினம் பதவி விலகினார். அவர் ஏற்கனவே பல புகார்களில் சிக்கியுள்ளதால், அவரை முதல்வர், உம்மன் சாண்டி பாதுகாத்து வந்துள்ளதாக கூறி, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. கேரள சட்டசபை நேற்று துவங்கியதும், இடதுசாரி உறுப்பினர்கள் எழுந்து, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, முதல்வர், உம்மன் சாண்டிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்; கணேஷ் குமார் மனைவி அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தனர். கேள்வி நேரத்திலும், இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் அச்”தானந்தன் எழுந்து, இந்த விவகாரத்தை முதலாவதாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து, பின்னர் விவாதிக்கப்படும் என சபாநாயகர், கார்த்திகேயன் உறுதியளித்தார். ஆனால், அதை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்து, கோஷம் போட்டனர்.குழப்பம்இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். கூச்சல் அதிகமாகவே, சபையை ஒத்திவைத்தார். 50 நிமிடத்திற்கு பிறகு, சபை மீண்டும் கூடிய போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்கள் கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தனர். சபாநாயகர் இருக்கை முன் சூழ்ந்து, "உம்மன் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும்' என, கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அமளி நிலவியதால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். கணேஷ் குமார் விவகாரத்தால், தொடர்ந்து இரண்டாவது நாளாக சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கணேஷ்?குமாரிடம் மாநில போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.