Advertisement
பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில் நர்ஸ் ஜெயலட்சுமி ஐக்கியம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
01:05

முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யாவுடன் இணைத்து, பரபரப்பாக பேசப்பட்ட, நர்ஸ் ஜெயலட்சுமி, பி.எஸ்.ஆர்., காங்கிரசில் இணைந்தார். கடந்த, 2009ல், பாரதிய ஜனதாவை சேர்ந்த, எடியூரப்பா தலைமையிலான, கர்நாடகா அமைச்சரவையில், அமைச்சராக பதவி ஏற்க இருந்த நிலையில், ரேணுகாச்சார்யா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறி, அவருடன் நெருக்கமாக இருந்த படங்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத் தியவர், நர்ஸ் ஜெயலட்சுமி."டிவி'க்களில்ரேணுகாச்சார்யா அமைச்சரான பின், அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. பின், தனியார், "டிவி'க்களில் அவ்வப்போது, ஜெயலட்சுமி தலை காட்டி வந்தார். இந்நிலையில், நர்ஸ் ஜெயலட்சுமி நேற்று, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின், பி.எஸ்.ஆர்., காங்கிரசில் இணைந்தார். கட்சித் தலைவர்கள் பலர், ஜெயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜெயலட்சுமி கூறுகையில், ""இப்போதுள்ள கட்சிகளில், பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் மட்டுமே, மக்களின் நலனுக்காக பாடுபடும் கட்சி என அறிந்தேன். தேர்தல் நேரத்தில், பதவியை பெறுவதற்காகவோ, போட்டியிடவோ, கட்சியில் சேரவில்லை. தேர்தலில், ரேணுகாச்சார்யாவை எதிர்த்து போட்டியிடுமாறு, கட்சித்தலைவர் உத்தரவிட்டால் போட்டியிட தயார்,'' என்றார்.தனி கட்சி பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித் தலைவர், ஸ்ரீராமுலு, முதலில், பா.ஜ.,வுடன் இணைந் திருந்தார். பிறகு, சுரங்க முறைகேடு விவகாரத்தில், எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு, தனியாக கட்சி துவக்கி, நடத்தி வருகிறார்.

- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.