பதிவு செய்த நாள் :
கருத்துகள் (9)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மின்தடை பிரச்னை காரணமாக, கோவை தொழில் நிறுவனங்களில் ஆள்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மின் தட்டுப்பாட்டால் ஏற்படும் பணி நேர அதிகரிப்பு, டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தால் ஏற்படும் உற்பத்தி செலவு போன்றவை தொழில் நிறுவனங்களை பெருமளவு பாதித்துள்ளது.


கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களாக லேத், இன்ஜினியரிங், பவுண்டரிகள் உள்ளன. பவுண்டரிகளில் பணியாற்ற எப்போதும் ஆட்கள் தேவை இருக்கும். இந்த பணியில் அதிக வெப்பத்தில் உருக்கப்படும் இரும்பு பட்டறையில் பணியாற்ற வேண்டியதாக இருக்கும். எனவே, பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பணியை எளிதாக செய்கின்றனர். பீகாரிலிருந்து வருவோர், பெரும்பாலும் வறுமையில் இருப்பவர்களாக இருப்பர். இங்குள்ள பவுண்டரிகளில் அதிக சம்பளம், ஓவர்டைம் வேலை என, தேவையான அளவுக்கு வருவாய் பார்த்தனர். இதே போன்று, லேத்களில் பணியாற்ற தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். ஜவுளி தொழிலிலும் இதே நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து

வருகிறது. குறைந்த ஊதியம் வழங்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். கோவையில் மின்சாரம் எந்தநேரம் வரும், எப்போது போகும் என யாராலும் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்கும் என, எதிர்பார்க்க முடியாது. இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை மின்சாரம் விட்டு, விட்டு வருவதால் ஒரு ஷிப்ட்டில் எட்டு மணிநேர வேலை யாருக்கும் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்களோ, எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக வேலை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. ஒரு தொழிலாளி தொழிற்சாலையில் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது காத்திருந்தால் மட்டுமே எட்டு மணி நேரம் வேலை செய்ய முடியும். எட்டு மணிநேர வேலைக்காக 16 மணி நேரம் கூட காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். மின்சாரம் தடையின்றி கிடைத்தபோது, கூடுதல் பணி செய்து, ஊதியம் பெற்று வந்த தொழிலாளர்கள், தற்போது எட்டு மணி நேரம் கூட வேலையின்றி தவிக்கின்றனர். ஜெனரேட்டர் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களோ,கூடுதலாக மின்சார உற்பத்திக்காக செலவிட வேண்டியுள்ளது. எட்டு மணிநேரம் வேலை இருந்தாலும், உற்பத்தி செலவு அதிகம் என்பதால், தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத நிலையில் தொழில் நிறுவனங்கள் உள்ளன.


பவுண்டரி போன்ற தொழிற்சாலைகளில் மின்சாரம் இருந்தால் மட்டுமே பணியாற்ற முடியும்.

Advertisement

ஜெனரேட்டர் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் போதுமானதாக இருப்பதில்லை. இங்கு பீகாரில் இருந்து வந்த தொழிலாளர்கள் கூடுதல் வேலை பார்த்து நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை சம்பளம் பெற்றனர். ஆனால், தற்போது 250 ரூபாய் சம்பளம் பெறுவதே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாரம் முழுவதும் வேலை இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லாததால், பீகார் மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர், தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். ஆள் பற்றாக்குறை உள்ள நிலையில், புதியதாக படிப்பு முடிக்கும் ஐ.டி.ஐ., மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. படிப்பு முடிந்த கையோடு, வேலை பழக உதவி தொகை வழங்கவும் தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இது குறித்து, கோவை திருப்பூர் மாவட்ட சிறு, குறு ஊரக தொழில் நிறுவனங்களின் (காட்மா) தலைவர் ரவிக்குமார் கூறுகையில்,""தொழிற்சாலைகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு, மின்தடை பிரச்னையே காரணம். தொழிற்சாலைகள் முழு நேரமும் இயங்கினால் மட்டுமே தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் நஷ்டமின்றி செயல்பட முடியும். ஆள் பற்றாக்குறை பிரச்னை, இம்மண்டலத்தில் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்,'' என்றார்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-201321:13:30 IST Report Abuse
Pugazh V சேகரன், கார்த்திக், கனகராஜ் எல்லாம் எங்கப்பா காணுமே? ஒரு வேலை இதற்கும் கலைஞர் காரணமோ? சொன்னாலும் சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஏப்-201322:46:35 IST Report Abuse
Pugazh V சென்ற சட்டமன்ற தேர்தலின் போது, அதிகாலையில் காபி கூடக் குடிக்காமல் கியூவில் நின்று, எதற்கு என்றே தெரியாமல் அ தி மு க விற்கு வாக்களித்த கோவையைப் பார்த்துப் பரிதாபப் படுகிறேன். நன்றாக வேண்டும். இனியும் மறக்காமல் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். பள்ளிகளில் தரும் அல்வா உங்களுக்கும் வேண்டாமா? கலைஞரின் ஆட்சியில் நிச்சயம் இந்த நிலை இல்லை, இனியும் இந்த நிலை ஏற்ப்படாது. சொன்னால் யார் கேட்கிறார்கள்( பிரசுரிக்கிறார்கள்)? ஈடுபடுவதே இல்லை இத்தகு கருத்துக்கள். 2ஜி காய்ச்சல் பொய், இலங்கை தீர்மானக் காய்ச்சல் வந்து இப்போது அதுவும் போன பின், கோடையில் வேர்க்க விருவிருக்க அவதிப் பட்டாலும் அ தி மு க ஆட்சி பற்றி விமர்சிக்க மனம் வராமல்/ தைரியம் இல்லாமல் இருக்கும் அவல நிலை.
Rate this:
Share this comment
Cancel
moorthy - coimbatore,இந்தியா
04-ஏப்-201316:45:24 IST Report Abuse
moorthy ஜெயலலிதாவுக்கு சரி,கருணாநிதிக்கும் சரி,கோவை மட்டுமல்ல.. சென்னையைத் தவிர இதர மாவட்டங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். அவர்களுக்கு சென்னை மட்டுமே தமிழ்நாடு.
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
04-ஏப்-201315:33:17 IST Report Abuse
saeikkilaar அம்மா கில்லி , கொடுத்து இருக்கிறார்கள் இனி அள்ளி கொடுப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
HARINARAYANAN - Chennai,இந்தியா
04-ஏப்-201312:32:02 IST Report Abuse
HARINARAYANAN கோவை மக்கள் கோப மக்கள் ஆகி விட்டார்கள்...... அ தி மு க வுக்கு இனி அங்கே டெபொசிட் தொகையே திரும்ப கிடைக்காது....
Rate this:
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
04-ஏப்-201321:00:29 IST Report Abuse
Sathyamoorthyஇந்த கருத்து உண்மையாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை...
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
04-ஏப்-201310:39:52 IST Report Abuse
குடியானவன்-Ryot அதிக மக்கள் தொகை, படிப்பறிவு குறைந்த, IT, BPO போன்ற நிறுவனங்கள் இல்லாத, automobile தொழில்சாலைகள் இல்லாத பீகார் மாநிலத்தின் இன்றைய GDP 6%, ஆனால் தமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலம் ஆக்குவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தமிழகத்தின் GDP 7% இருந்து 3.5% ஆக்கியதுதான் மிச்சம்....
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
04-ஏப்-201310:23:14 IST Report Abuse
kumaresan.m "மிகப் பெரிய மின்சார பிரச்சினையை( தொழிலார்களின் வருமான இழப்பு ,தொழிசாலைகள் மூடல் மற்றும் பொருட்களின் உற்பத்தி பாதிப்பு ,வருமான இழப்பு ,) இக்கட்டுரையின் மூலம் மிகவும் நாசூக்காக ஆட்சியாளர்களுக்கு தெரியபடுத்த தினமலரை தவிர வேறுயாரும் இல்லை என்றால் மிகையல்ல"
Rate this:
Share this comment
Cancel
GURU - Coimbatore,இந்தியா
04-ஏப்-201307:28:51 IST Report Abuse
GURU கோவை மாவட்டத்தின் எல்லா சட்டமன்ற தொகுதிகளையும் அம்மாவுக்கே அள்ளி கொடுத்ததற்கு, கோவை மக்களுக்கு அம்மா கொடுக்கும் தாய் வீட்டு சீதனம் அல்லது நன்றிக்கடன் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.