ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 6 பேரிடம் குறுக்கு விசாரணை - Jayalalitha | Dinamalar

ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 6 பேரிடம் குறுக்கு விசாரணை

Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழக முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், நேற்று, ஆறு பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், "நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழுக்கு, ஆயுள் சந்தா கட்டியதாக சாட்சியமளித்த, திருவாரூர் வழக்கறிஞர் சாமிநாதன், வாடிப்பட்டி வழக்கறிஞர் ராஜேந்திரன், மதுரை வழக்கறிஞர் தமிழ் செல்வன், கம்பம் சுதாகரன், பழனி முருகேசன், சிவகங்கை வைரமணி ஆகியோரிடம், அரசு வக்கீல் பவானி சிங், குறுக்கு விசாரணை செய்தார். தமிழ் செல்வனிடம் நடந்த குறுக்கு விசாரணை விவரம்: அரசு வக்கீல்: "நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழில் ஆயுள் சந்தா அறிமுகப்படுத்தியிருப்பது போன்று, "தினமலர்' நாளிதழில் அறிமுகப்படுத்தியுள்ளனரா? தமிழ் செல்வன்: தெரியவில்லை. சாட்சி வைரமணி: தினமலர் இதழ், ஆயுள் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை, நீதிபதி, பாலகிருஷ்ணா, ஒத்திவைத்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை