ராடியா டேப் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

ராடியா டேப் அதிகாரிகள் ஆய்வு

Added : ஏப் 04, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : அரசியல் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பேசிய, டெலிபோன் உரையாடல்களின் பதிவுகளை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுடன் பேசிய, டெலிபோன் உரையாடல்கள், வருமான வரித் துறை அதிகாரிகளால், ரகசியாக ஒட்டு கேட்கப்பட்டது. இதில், சில உரையாடல்களின் பதிவுகள், மீடியாக்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், உரையாடல் பதிவுகளில், குற்ற நோக்கத்துடன் கூடிய விஷயங்கள் எதுவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி, உத்தரவிட்டது.இதையடுத்து, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய, ஆறு பேர் குழு, உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்யும் பணியை துவக்கியுள்ளது. இந்த ஆய்வை, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடித்து, இந்த குழுவினர், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
04-ஏப்-201310:34:17 IST Report Abuse
Sandru மனித புற்று நோய்க்கு விரைவில் மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் . AIDS க்கு விரைவில் மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் . ஆனால், நீரா ராடியா டெலிபோன் உரையாடல்களை , மக்கள் வரி பணத்தை செலவு செய்து இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு ஆராய்ச்சி செய்வார்கள். முடிவில் உரித்த வெங்காயத்தை போல ஒன்றும் இல்லை என அறிக்கை கொடுப்பார்கள். இதுதான் இன்றைய இந்திய ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசின் நிலை.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
04-ஏப்-201308:21:38 IST Report Abuse
K.Balasubramanian இரண்டு நிமிடங்களில் உலகாவிய செய்திகளில் அறியப்பட்ட உண்மைகளை தற்போது பூதகண்ணாடி கொண்டு ஆய என்ன தேவையோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை