அமெரிக்காவில் செக்ஸ் குற்றச்சாட்டு ஆனந்த் ஜானுக்கு ஐந்து ஆண்டு சிறை| Dinamalar

அமெரிக்காவில் செக்ஸ் குற்றச்சாட்டு ஆனந்த் ஜானுக்கு ஐந்து ஆண்டு சிறை

Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நியூயார்க் : மாடலிங் துறையில் வாய்ப்பளிப்பதாக கூறி, இளம்பெண்ணிடம் கட்டாய உறவு கொண்ட குற்றத்துக்காக, "பேஷன் டிசைனர்' ஆனந்த் ஜானுக்கு, நியூயார்க் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்தியரான, ஆனந்த் ஜான், அமெரிக்காவில், "பேஷன் டிசைனிங்' துறையில் புகழ்பெற்று விளங்கினார். ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டனுடன் இணைந்து, "அமெரிக்காவின் அடுத்த பெரிய மாடல்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த அவர், புகழ்பெற்ற, "டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓபரா வின்பிரே, பாடகி ஜானட் ஜாக்சன் ஆகியோருக்கு ஆடை வடிவமைத்தவர். மாடலிங் துறையில் வாய்ப்பு கேட்டு வரும், இளம்பெண்களை கட்டாயப்படுத்தி, செக்ஸ் உறவு கொண்டதாக, 2007ல், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கலிபோர்னியா நீதிமன்றத்தால், 59 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், மேல் முறையீடு செய்துள்ளார். பாலியல் பலாத்காரம், போதைமருந்து பயன்படுத்தியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட, 49 குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன. இந்நிலையில், மற்றொரு வழக்கில், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி, செக்ஸ் உறவில் ஈடுபட்டதற்காக, ஆனந்த் ஜானுக்கு, நியூயார்க் நீதிமன்றம், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை