E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"என் கருத்தில் மாற்றமில்லை':அடித்துச் சொல்கிறார் திக்விஜய்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
02:05
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 02:04

புதுடில்லி : ""ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், இரண்டு அதிகார மையங்கள் செயல்படுவது, சரியாக இருக்காது என்ற, என் கருத்தில், எந்த மாற்றமும் இல்லை. அதில், உறுதியாக இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில், காங்கிரஸ் மேலிடம், என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவேன்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறினார்.


பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் பொதுச் செயலர், திக்விஜய் சிங், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். கட்சியின் துணை தலைவர், ராகுலின், தீவிர விசுவாசி. "அடுத்த லோக்சபா தேர்தலில், ராகுலை, காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, நீண்ட நாட்களாக வலியுறுத்திவருகிறார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டியில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், இரண்டு அதிகார மையங்கள் செயல்படுவது, சரியாக இருக்காது. அதிகாரம், ஒருவரிடம் இருந்தால் தான், எந்த ஒரு செயலிலும், பலன் கிடைக்கும். அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளராக, ராகுலை அறிவித்தால், கட்சிக்கு பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிடைக்கும்' என்றார்.


காங்கிரசில், பிரதமர், மன்மோகன் சிங், கட்சித் தலைவர் சோனியா என, இரண்டு அதிகார மையங்களில், மன்மோகன் ஒரு அதிகார மையமாக செயல்படுவதை விமர்சிக்கும் வகையில், திக்விஜய் சிங், இவ்வாறு பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு, காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்தது. கட்சியின் செய்தி தொடர்பாளர், ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:


பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்., தலைவர் சோனியாவும், அவரவர் பணிகளை, சிறப்பாகவே செய்து வருகின்றனர். இரண்டு அதிகார மையங்கள் என்பது, வழக்கமாக இருக்கும் விஷயம் தான்.இவ்வாறு, ஜனார்த்தன் திவிவேதி கூறினார்.மாற்றமில்லைஇதற்கு, திக்விஜய் சிங், நேற்று அளித்த பதில்: இரண்டு அதிகார மையங்களின் செயல்பாடு, சரியாக இருக்காது என, நான் கூறியது, முற்றிலும் உண்மை; நான் தெரிவித்த கருத்தில், உறுதியாக உள்ளேன். அதில், எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், இந்த விஷயத்தில், காங்கிரஸ் மேலிடத்தின் கருத்து தான், இறுதியானது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன். இவ்வாறு, திக்விஜய் சிங் பேசினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
05-ஏப்-201312:01:50 IST Report Abuse
Sundeli Siththar ராகுல் பிரதமர் வேட்பாளர் என்றால் இரண்டு அதிகார மையம் இருக்கக்கூடாது. ராகுல், சோனியாவை தவிர வெரி யாராக இருந்தாலும் பெயருக்கு இரண்டு அதிகார மையம் இருக்கவேண்டும். அதில் பிரதமர் டம்மி அதிகார மையமாக இருக்கவேண்டும் என்பதே காங்கிரஸ் கொள்கை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
04-ஏப்-201316:19:43 IST Report Abuse
Seshadri Krishnan இரண்டு அதிகார மையம் இதில் அப்பிராணி மன்மோகன் அவர்களை சேர்க்கக்கூடாது. முதல் அதிகாரமையம் சோனியா அண்ட் ராகுல் இரண்டாம் அதிகாரமையம் பிரியங்கா அண்ட் வதேரா. சேஷாத்ரி கிருஷ்ணன் பெர்த் ஆஸ்திரேலியா
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
04-ஏப்-201315:23:41 IST Report Abuse
Baskaran Kasimani இது போன்ற ஆட்களை பாராளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பியதன் பலன் இதுதான்...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
04-ஏப்-201315:14:54 IST Report Abuse
K Sanckar பா ஜ க நரேந்திர மோடியை பிரதமராக அறிவிக்க போகிறார்கள் என்றவுடன் காங்கிரஸ் ஜகா வாங்குகிறது. ஏனெனில் ராகுல் மோடிக்கு சமமானவர் அல்ல. மக்கள் கருத்து கணிப்பே இப்போது மோடிக்கு சாதகமாக உள்ளது. எனவே இப்போது ஒரு தடவை ராகுல் தோற்று விட்டால் அப்புறம் தொடர்ந்து தோல்வி தான். எனவே தான் பின்புறம் வழியாக ராகுலை கொண்டு வரும் திட்டம் உருவாகி உள்ளது. மன்மோகன் சிங்க் தான் எங்கள் அடுத்த பிரதமர் என்றால் ஒரு வேளை ஒரு சதவீதம் ஜெயிக்கவும் வாய்ப்பு உண்டு. என்று காங்கிரஸ் காரர்கள் கற்பனை செய்கின்றனர். அது கூட ராகுலுக்கு கிடையாது. எனவே ஒருவேளை அவர்கள் கற்பனையாக மன்மோகன் சிங்க் வெற்றி பெற்றால் அவரை உடல் நலம் சரியல்லை என்று சொல்லி ராகுலை கொள்ளை பக்கமாக கொண்டு வருவார்கள். ஒரு இடத்தில, சோறே இல்லை என்றார்களாம் அங்கே உட்கார்ந்து இருந்த ஒருவன் இலை ஓட்டை என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருந்தானாம் என்ற பழமோதி போல, முதலில் காங்கிரஸ் வெற்றி பெறட்டும் பின்னரே யார் பிரதமர் என்று பார்க்கலாம் என்று மக்கள் கூற தொடக்கி விட்டனர்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Maya - MADURAI,இந்தியா
04-ஏப்-201315:00:08 IST Report Abuse
Maya ஒரே மையம் தான் உள்ளது. அது சோனியா(வெறும் எம்.பி ) மட்டும்தான். மன்மோகன் வெத்துவெட்டு. இவர் பொது செயலர். இனி மேலிடம் முடிவு செய்யும் னு சொல்றார். பொது செயலர் என்பது மேலிடம் இல்லையா, இவர் அரைபோதையில் உளறுகிறார்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
04-ஏப்-201314:04:22 IST Report Abuse
N.Purushothaman யோவ் திக்கு...இப்படி ஆண்ட புளுகு ஆகாச புளுகு எல்லாம் புளுக கூடாது....பிரதமருக்கு என்ன அதிகாரம் இருக்கு....அவரு எங்க செயல்பட்டாரு....அப்பறம் எப்படி ரெண்டு அதிகார மையம்????....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Ramalingam chennai - chennai,இந்தியா
04-ஏப்-201311:07:02 IST Report Abuse
Ramalingam chennai ஹஹஹ இந்த காங்கிரஸ் கருனுகளை பார்த்தாலே சிரிப்பா இருக்கு ஹய்யோ ஹையோ, இவங்க ஆட்சி நாட்டில் வளராது கேவலமா இருக்கு
Rate this:
4 members
0 members
5 members
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
04-ஏப்-201311:06:47 IST Report Abuse
Hasan Abdullah 3ம் முறையும் திரு. மன்மோகன் பிரதமராக போகிறார், ஒரு சில வருடங்கள் கழித்து, தனக்கு உடல் நிலை சரியில்லை, என்று திரு. ராகுல் துணை பிரதமராக்கப்பட்டு பின் படிப்படியாக பிரதமராகுவார். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சியில் அமர வாய்ப்பு உள்ளது, அப்படி தவறி போனால், தொங்கு (முலாயம் or மாயாவதி or நிதிஷ்) பாராளுமன்றம் ஏற்படும்,
Rate this:
24 members
1 members
9 members
Share this comment
KUMARAN - bangalore,இந்தியா
04-ஏப்-201317:31:32 IST Report Abuse
KUMARANஆமாம், சொல்லிடாரில்லா , முதலில் எல்லா மதத்திரரும் பிஜேபி க்கு vote போடுங்கள்...ஒரு இந்தியனாக பாருங்கள்....
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-201301:06:53 IST Report Abuse
Mujib Rahmanஏயா,,,,,,,,,,,,,,,ஜாதி வெறி புடிச்சு அலையீர ,,,,,காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் புடிக்கும் அப்புறம் பாரு...
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
04-ஏப்-201310:12:13 IST Report Abuse
Yoga Kannan இத்தாலி மையம் என்று கூறும் .........இந்தியாவில் உள்ள மண்ணின் மைந்தர்களுக்கு கிரிடத்தை வைக்க வேண்டியதுதானே ......இத்தாலி காரன் ஓட்டு போடவில்லை ..... இந்தியாகாரன் தான் ஓட்டு போடுகிறான் என்பதை இங்கு பதிவு செய்பவர்கள் மறக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன்.....
Rate this:
2 members
0 members
10 members
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
04-ஏப்-201309:50:41 IST Report Abuse
மும்பை தமிழன் கோமாளிகளின் கூடாரம்
Rate this:
2 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.