Advertisement
யானைமலையில் சிற்பக்கலை நகர் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:மதுரை அருகே ஒத்தக்கடை யானைமலையில், சிற்பக்கலைநகர் அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் பெருந்தச்சர் அவையத்தின் ஸ்தபதி அரசு தாக்கல் செய்த மனு: மதுரை அருகே ஒத்தக்கடை யானைமலையை குடைந்து சிற்பக்கலை நகர் அமைக்க வேண்டும். லேசர் கதிர்களை பயன்படுத்தி சிற்பங்களை உருவாக்கலாம். இதனால், மலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதை வலியுறுத்தி பிரதமர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தொல்லியல்துறை கமிஷனரிடம் மனு அளித்தேன்.இதன் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய, தமிழக அரசு 2009 ல் ஒரு குழு அமைத்தது. இக்குழுவின் கூட்டம் கூடவில்லை. மக்கள் எதிர்ப்பால், அந்த உத்தரவை தமிழக அரசு 2010 ல் திரும்பப் பெற்றது. திட்டத்தின் மதிப்பு 2000 கோடி ரூபாய். மலையை குடைவதால் கிடைக்கும் கிரானைட் கற்கள் மூலம், தமிழக அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கும். மலையைச் சுற்றியுள்ள மக்கள் இடம் பெயர்ந்தால், அவர்களின் நலவாழ்விற்கு 1000 கோடி ரூபாய் செலவிடலாம். 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மலையின் இயற்கைவடிவம் மாறாது. சிற்பக்கலை நகராக மாற்றினால், உலக அதிசயங்களின் பட்டியலில் யானைமலை இடம் பெறும். மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாறும். சிற்பக்கலை நகராக உருவாக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஒத்தக்கடையை சேர்ந்த இளங்குமரன் தன்னையும், ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க தாக்கல் செய்த மனு: யானைமலை ஒரு இயற்கை தெய்வம். அதை புனிதமாக கருதுகிறோம். மலையைச் சுற்றி 25 கிராமங்கள் உள்ளன. மலை மீது உள்ள பற்றால், குழந்தைகளுக்கு "மலையான்' என பெயர் சூட்டுகிறோம். சிற்பக்கலை நகர் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வக்கீல் அழகாத்தேவன், இளங்குமரன் சார்பில் வக்கீல் மதுசூதனன் ஆஜராகினர். நீதிபதிகள்: மனுதாரரே ஆஜராகி, திட்டம் பற்றி நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றார். இதை ஏற்க வேண்டும் என்பதில், எவ்வித நியாயமும் இல்லை என கருதுகிறோம். சிற்பக்கலை நகர் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி, முடிவு செய்ய வேண்டியது தமிழக அரசுதான்.சிற்பக்கலை நகர் உருவாக்கும் சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் தலையிடுவதில், எவ்வித நியாயமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.