Advertisement
எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க புதிய கருவி சிவகாசி பிஎஸ்ஆர் பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
07:08

தூத்துக்குடி : மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க சிவகாசி பிஎஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.மாணவர்கள் ராஜேந்திர பிரசாத், முனியசாமி, முருகேசன், நாகராஜ், நிவாஸ்குமார், ராஜேந்திர தினேஸ்கண்ணன் ஆகியோர் இணைந்து மீனவர்கள் அடுத்த நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் போது எச்சரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை கப்பல் அல்லது படகில் பொருத்திய பின்பு நமது கடல் எல்லை முடிய 100 மீட்டருக்கு முன்பு நமக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும். அப்போதும் படகு நமது எல்லைக்குள் வரவில்லை என்றால் படகு தானாகவே இரண்டு நிமிடம் நின்று மீண்டும் செல்லும். இதனால் எக்காரணத்தை கொண்டும் படகு நமது எல்லையை தாண்ட முடியாது. இதுகுறித்து மாணவர்கள் கüறியதாவது, ஆர்.பி.டிரான்ஸ்மீட்டர் எனப்படும் சிக்னல் டிரான்ஸ்மீட்டரை கடற்கரையில் பொருத்த வேண்டும். இந்த டிரான்ஸ்மீட்டரை அனைத்து கப்பல்களுக்கும் சிக்னல் கொண்டு செல்லும் ஒவ்வொரு கப்பலிலும் ஒரு ரிசீவர் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்பீக்கர் மூலம் எச்சரிக்கை மணி ஒலிக்கும். இதன் மூலம் தேவையில்லாமல் நமது மீனவர்கள் நமது கடல் எல்லையை தாண்டி செல்வது தவிர்க்கப்படும். இந்த கருவி ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு பெற்றுள்ளது என்றனர். மாணவர்களை கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர்கள் அருண், சுந்தர், முதல்வர் திருப்பரங்கிரிராஜன் ஆகியோர் பாராட்டினர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.