E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நெல்லையில் 18 நாள் விடுமுறைக்கு பின் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
07:08

திருநெல்வேலி:நெல்லையில் 18 நாள் விடுமுறைக்கு பின் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த விடுமுறை நாட்களை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளிலும் கல்லூரிகள் செயல்படும் என தெரிகிறது.இலங்கை தமிழ் இனபடுகொலை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 15ம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது. நெல்லை பல்கலை., துறைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 18ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வு நேரம் நெருங்கி விட்டதால், கல்லூரிகள் எப்போது திறக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் ஏப்ரல் 3ம் தேதி (நேற்று) கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், நெல்லை பல்கலை., துறைகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. மாணவர்கள், விடுதி மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.தொடர்ந்து 18 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டாதல், வரும் நாட்களில் விடுமுறை தினங்களிலும் வகுப்புகளை நடந்த கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன. அப்போதுதான், குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நடத்த முடியும் என கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்வுக்கான அட்டவணை ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், விடுமுறை தினங்களிலும் கல்லூரிகள் செயல்படும் என கூறப்படுகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.