E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
7 கருணை மனுக்களின் மீது ஜனாதிபதி முடிவு: 5 வழக்கில் தூக்கு உறுதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
11:14
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 08:10

புதுடில்லி : பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 7 கருணை மனுக்களின் மீதும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தீர்வை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் 5 வழக்குகளில் தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முடிவு :



பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 5 பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர்களில் தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது. சட்டப்பிரிவு 72 ன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி, பலமுறை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 9 பேர் தாக்கல் செய்த 7 கருணை மனுக்களின் மீதான தனது முடிவை அறிவித்துள்ளார். தற்போது ஜனாதிபதியிடம் எந்தவொரு கருணை மனுவும் நிலுவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சகம் பரிந்துரை :



தாக்கல் செய்யப்பட்ட அனைத்து கருணை மனுக்களையும் தள்ளுபடி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் 5 வழக்குகளில் 2 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஒப்புதல் பெறப்பட்ட புதிய சட்ட மசோதாவின் படி இனி ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகளோ அல்லது 14 ஆண்டுகளோ இருக்காது. ஆயுள் தண்டனை என்பது குற்றவாளி தனது ஆயுள் காலம் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்பதாகும்.

நிராகரிப்பிற்கான காரணம் :



நிலுவையில் இருந்த கருணை மனுக்கள் அனைத்தையும் நிராகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ததற்கு முக்கியமான காரணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து, பின் ஜாமீனில் வெளியே வந்த அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரையும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதில் அதிக காலம் நிலுவையில் இருந்தது உத்திர பிரதேசத்தை சேர்ந்த குர்மீத் சிங் என்பவர் 1986ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை கொலை செய்த வழக்காகும்.

குற்றவாளிகள் விபரம் :



உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் ராம்ஜி ஆகியோர் சகோதரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கிலும், அரியானாவைச் சேர்ந்த தரம்பால் என்பவர் 1993ம் ஆண்டு தான் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கிலும் சிறை தண்டனை பெற்று வந்தவர்கள் ஆவர். 2001ம் ஆண்டு அரியானா எம்.எல்.ஏ.,வின் மகள் சோனியா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் ஆகிய இருவரும் போதையில் தனது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 8 பேரை கொலை செய்த வழக்கிலும், 1989ம் ஆண்டு உத்திரகாண்டை சேர்ந்த சுந்தர் சிங் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கிலும், 2002ம் ஆண்டு உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஜாஃபர் அலி என்பவர் தனது மனைவி மற்றும் 5 மகள்களையும் கொலை செய்த வழக்கிலும், 1994ம் ஆண்டு கர்நாடகத்தை சேர்ந்த பிரவீன்குமார் தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை கொலை செய்த வழக்கிலும் தண்டனை பெற்று வருகின்றனர்.

நிராகரிப்பு மனுக்கள் :



கடந்த 3 மாதங்களுக்கு முன் அஜ்மல் கசாப் மற்றும் அப்சல்குரு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார். கர்நாடகாவைச் சேர்ந்த நின்கப்பா நடிகர், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் ஞானபிரகாஷ், சீமோன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோரின் கருணை மனுக்களை சமீபத்தில் ஜனாதிபதி நிராகரித்தார். டில்லியை சேர்ந்த அட்பீர் என்பவரின் கருணை மனு மீது முடிவு செய்த ஜனாதிபதி, ஆயுள் தண்டனைக்கு பரிந்துரை செய்தார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rao - Doha,கத்தார்
05-ஏப்-201309:21:22 IST Report Abuse
Rao மொத்தத்தில் நம் நாட்டில் எந்த குற்றம் செய்தாலும் தண்டனையில் இருந்து எளிதாக தப்பிதுகொள்ள்ளலாம் என்ற மனப்போக்கு மக்களிடம் மாறும் படியாக தண்டனைகள் மிக மிக கடுமை ஆக்கவேண்டும்... மற்றும் காலம் தாழ்தாமல் தண்டனைகள் நிறைவேற்றுவது மிக அவசியம்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
05-ஏப்-201304:54:20 IST Report Abuse
Mohandhas எல்லாம் சரி ,,ஆனா நீங்க துக்குதண்டனன்னு சொல்றிங்க.. அப்புறம் எங்க ஊரு கோர்ட் அத செல்லாதுன்னு நிறுத்திவைக்குது.. கேட்டா கி.மு க்கு முன்னால இந்த மாதிரியான கேசுக்கு தூக்குதண்டன கொடுக்கல,,அதனால கி,பி யிலும் நாம அததான் கடைபிடிக்கணும்-ன்னு வக்கில்கள் சொல்றாங்க...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
selva - singapore  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-201319:06:27 IST Report Abuse
selva i agree sir ....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Mynuddeen Ibrahim - Madurai,இந்தியா
04-ஏப்-201315:00:26 IST Report Abuse
Mynuddeen Ibrahim தூக்கு தண்டனை கைதிகளை வரிசையாக தூக்கிலிடுங்கள் ராஜீவ், வீரப்பன் கூட்டாளிகள் போல் காலம் தாழ்த்தாதீர்கள்
Rate this:
4 members
0 members
19 members
Share this comment
Cancel
PRPmayapandi - MADURAI,இந்தியா
04-ஏப்-201314:50:47 IST Report Abuse
PRPmayapandi ஒரு நல்ல சுறுசுறுப்பான ஆள ஜனாதிபதி ஆக்கி விட்டு, ஒரு பொம்மைய பிரதமர் ஆக்கிட்டாங்க. பிரணாப் சொன்ன சொல்லுக்கு தலை ஆட்ட மாட்டாருன்னு நல்லா தெரியும். அதே சமயம் பிரணாப் பிரதமர் ஆகி இருந்தால் நாடு முன்னேற்ற பாதைக்கு சென்றிருக்கும்.
Rate this:
6 members
3 members
28 members
Share this comment
Cancel
deva - nambiyur  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-201314:25:06 IST Report Abuse
deva good dicision
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
S.Dinakaran - Thanjavur,இந்தியா
04-ஏப்-201314:20:56 IST Report Abuse
S.Dinakaran வெரி குட். இந்தியா போன்ற நாடுகளில் அட்லீஸ்ட் தண்டனை கடுமையாக இருந்தால்தான் ஓரளவாவது குற்றங்களை கண்ட்ரோல் செய்ய முடியும். தவிர போகிற வருகிறவன்களுக்கு எல்லாம் தூக்குதண்டனை விதிப்பதில்லை. இந்த உலகில் வசிக்க லாயக்கற்ற மனித உருவில் இருக்கும் மிருகங்களுக்கு மட்டுமே தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. கீழ்கோர்ட், மேல்கோர்ட், சுப்ரீம் கோர்ட், அதற்கு மேல் பெஞ்ச் என்று ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸை கடந்துதான் தூக்குதண்டனை, மரணதண்டனை வழங்கப்படுகிறது. அந்த தீர்ப்பை அலட்சியம் செய்வது போல உள்ளது இந்த கருணை மனு அக்கப்போர்கள். அதே மாதிரி தூக்குதண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வேளாவேலைக்கு சோறு போட்டு மக்கள் பணத்தை வீணடிக்காமல் தண்ட்னையை உடனே நிறைவேற்ற வேண்டும்.
Rate this:
0 members
0 members
38 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஏப்-201313:16:52 IST Report Abuse
Pugazh V உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையினைக் கண் மூடித் தனமாக ஏற்காமல், நீங்கள் அனுமானித்து முடிவெடுத்து, அதை நிறைவேற்ற ஆணை பிறப்பித்ததால் உங்கள் மீதும், இந்திய ஜனாதிபதி பதவி மீதும் மதிப்பு கூடுகிறது. நன்றி.
Rate this:
2 members
0 members
39 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஏப்-201313:15:25 IST Report Abuse
Pugazh V Appreciations to the fast decision making President of India. Sir, we rellay now only feel proud of the Indian President's post. Though the Ministry recommed rejection of all mercy petitions, you analised and took your decision and boldly ordered the same for implementation is really commable. Thank you sir.
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
ayyappan - Salalah,ஓமன்
04-ஏப்-201313:05:31 IST Report Abuse
ayyappan அய்யா உங்கள் கடமை குற்றவாளியை துக்கில் ஏற்றுங்கள்
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.