பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு| Dinamalar

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய உயர்நிலைப்பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் 1930ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் உள்ள முதல் கட்டடம் மகாத்மா காந்தி அடிகளால் அடிக்கல் நாட்டிய பெருமை பெற்றது. இங்குள்ள வித்யாலய உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1944 முதல் 1997 வரை படித்த நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களின் சந்திப்பு கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அப்போது பள்ளியை நிர்வகித்து வந்து 95 வயதாகும் மூத்த துறவி சுவாமி சோமானந்தர் தலைமை வகித்தார். துடியலூர் வேலுமணி இன்ஜினியரிங் நிறுவன தலைவர் சோமசுந்தரம், அருப்புக்கோட்டை ஸ்ரீ ராமலிங்கா மில்ஸ் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 1943ல் இப்பள்ளியில் படித்த அய்யாசாமி, 44ல் படித்த சோமசுந்தரம், 50களில் படித்த தினகரன், 60களில் படித்த மசானிக் மருத்துவமனை டாக்டர் ராமசாமி உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாணவர்கள், "அவிநாசிலிங்கம் ஐயா, மாணவர்களிடையே வகுப்பறை தூய்மை, வளாகத் தூய்மை, ஆலயத்தில் சேவை உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்தார் '' என்றனர்.

மூத்த துறவி சுவாமி சோமானந்தர் பேசுகையில், "சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த தினத்தையொட்டி, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் ஏற்பாடு செய்துள்ள சுவாமி விவேகானந்தர் ரதம் ஏப்., 13 புறப்பட்டு, 2014 ஜன., வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. இதற்கு அனைத்து பகுதியில் வசிப்பவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்றார்.
பள்ளியின் செயலாளர் சுவாமி தத்பிரபானந்தர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X