Jayalalithaa announces Satellite city in Madurai | மதுரை அருகே 586 ஏக்கரில் துணை நகரம்: 19 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை அருகே 586 ஏக்கரில் துணை நகரம்: 19 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டம்

Added : ஏப் 04, 2013 | கருத்துகள் (34)
Advertisement
Jayalalithaa announces Satellite city in Madurai

சென்னை: "மதுரையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான, 586.86 ஏக்கரில், ஒருங்கிணைந்த துணை நகரம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சாட்டிலைட் சிட்டி: சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: பெருகி வரும் வீட்டுவசதியை கருத்தில் கொண்டு, மதுரையிலிருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ள விமான நிலையம் அருகே, "துணைநகரம்' (சாட்டிலைட் சிட்டி) உருவாக்கப்படும். மதுரை - நெல்லை நான்கு வழிப் பாதையில், தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான, 586.86 ஏக்கரில், ஒருங்கிணைந்த துணை நகரம் ஏற்படுத்தப்படும். இந்த நகரத்தில், 19,500 மனைகள் உருவாக்கப்படும்.

தொழில் மனைகள்: புதிய துணை நகரத்தில், 120 கோடி ரூபாய் செலவில், சாலைகள், குடிநீர், கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பூங்காக்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், குடியேறும் மக்களின் நலனுக்காக, பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், தபால் நிலையம், ஆரம்ப சுகாதார வசதி, தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என, தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும். இந்நகரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், திண்டுக்கல், திருச்சி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில், 1,630 தனி வீடுகள் மற்றும், 2,792 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

உயர் வருவாய்: சுயநிதி திட்டத்தின் கீழ், இந்த குடியிருப்புகள், 918.45 கோடி ரூபாய்செலவில் அமைக்கப்படும். மேலும்,32 மனைகள் மேம்படுத்தப்படும். குறைந்த வருவாய் பிரிவினருக்கு-14,300 மனைகள், மத்திய வருவாய் பிரிவினருக்கு- 2,500, உயர் வருவாய் பிரிவினருக்கு-750, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு-1,950 மனைகளும் ஒதுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
06-ஏப்-201311:10:08 IST Report Abuse
Krish Sami மின்சார நிலைமை மோசம்தான். அன்று ஆட்சியாளர்கள் "மானாட, மயிலாட" பார்த்து மகிழ்ந்து இருந்ததன் பலனை இன்று அனுபவிக்கின்றோம். துவங்கும் முயற்சிகள் நடக்கின்றன. திரு. கருணாநிதியின் தடுக்கும் முயற்சிகளும்தான் கோபாலபுர கோமானுக்கு இன்னமும் ஆசை அடங்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
06-ஏப்-201311:09:06 IST Report Abuse
Krish Sami நேபாள தமிழனுக்கு ஏன் பொறாமை சிங்கப்பூர் தமிழன் மேல்? கோபம் சிங்கப்பூர் என்பதால் மட்டுமல்ல, இவர் அனுமானத்தில், அவர் பார்க்கும் தொழிலாலும் மற்றபடி துணை நகரங்கள் என்பது நல்ல முயற்சிதான். காந்திநகர் (அகமதாபாத் அருகில்), நொய்டா, குர்கான் (டெல்லி அருகில்) போன்ற நல்ல முன் மாதிரிகள் நம் நாட்டிலேயே உண்டு. இந்திய அரசாங்கத்தின் குறிப்பையும் (://tcpomud.gov.in/Divisions/MUTP/Works.html) படித்து பாருங்கள். மதுரை அழகான நகரம்தான், ஒரு காலத்தில் அதை மீட்டெடுக்க வேண்டுமென்றால் துணை நகரங்கள் போன்ற முயற்சிகளும், புராதன நகரத்துடன் அவற்றின் சாலை, மெட்ரோ இணைப்புகளும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Jai - Chicago,யூ.எஸ்.ஏ
06-ஏப்-201301:48:57 IST Report Abuse
Jai historically most of DMK votes are around chennai and ADMK votes are around Madurai.
Rate this:
Share this comment
Cancel
samraj - ulaanbaatar ,மங்கோலியா
06-ஏப்-201300:28:27 IST Report Abuse
samraj மின்சாரத்த சொன்னாமாதிரி ஜூனுக்குள்ள கொடுதிட்டிங்கன்னா அவங்க வேலை முடிஞ்சதுன்னு போயிடுவாங்க.நீங்க முடிபீன்கன்ற நம்பிக்க இருக்கு .ஏன்னா வீராணம் திட்டம்போட்டு 35 வருஷமாகியும் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரவில்லை.கமிஷன் பேரத்தில சத்யநாராயணா செத்ததா சர்க்காரியா கமிஷன்ல கூறப்பட்டதுதான் தெரியும்.ஆனா நீங்க வந்துதான் 270 நாட்களில் முடிச்சி தந்தீங்க.அதன் பலனையும் கடந்த தேர்தல்ல அனுபவிசீங்க.உங்களுடைய கடுமையான முயற்சியில எல்லாரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.மின்சாரத்தேவை உணவைவிட முக்கியமாகிவிட்டது.. இங்கு நல்லவங்க எல்லோரும் உங்கபின்னாலே.நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற. சாம்ராஜ் மொங்கோலியா.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
05-ஏப்-201312:50:43 IST Report Abuse
Rangarajan Pg துணை நகரத்தில் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுமா அல்லது விலையில்லா மெழுகுவத்திகள் கொடுக்கப்படுமா? அது சரி, மதுரையில் SATILITE சிட்டி அமைக்கிரீர்களே,, அதற்க்கு அஞ்சா நெஞ்சன் PERMISSION கொடுத்து விட்டாரா? அந்த 586.86 ஏக்கரில் 586 ஏக்கர் அவர் பெயரில் பட்டாவுடன் பக்காவாக இருக்க போகிறது. பிறகு அந்த துணை நகரம் கட்டி முடிக்கும் வரை சும்மா இருந்து விட்டு அப்படியே அவர் எடுத்து கொள்ள போகிறார். மதுரை என்றாலே இந்த கூலிப்படை ஆட்களும் அஞ்சா நெஞ்சனும் தான் நினைவுக்கு வருகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
05-ஏப்-201312:30:31 IST Report Abuse
Peria Samy எல்லாத்தையும் நல்லாத்தான் செய்யுரிங்கம்மா ,ஆனால் கரண்ட் பிரச்சினைக்கும் ஒருவழி செய்யுங்கம்மா.நல்லாத் தூங்கிக்கிட்டு இருக்கிற நடுராத்திரியில கரண்ட் போயிடுதம்மா ,புள்ள குட்டிக எல்லாம் வேக்காடுல ரொம்ப கஷ்டப்படுரோம்மா.சீக்கிரம் இதுக்கு ஒரு நல்ல வழி பண்ணுங்கம்மா,நீங்க மகராசியா இருப்பீங்க.
Rate this:
Share this comment
Cancel
L P Sivam - chennai,இந்தியா
05-ஏப்-201312:25:35 IST Report Abuse
L P Sivam இது ஒரு நல்லன் திட்டம் மேலும் நம் தமிழக அரசு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு மக்களின் சார்பாக நன்றி, மற்றும் தற்பொழுது ரியல் எஸ்டேட் துறையில் பல தனியார் போட்டி போட்டு கொண்டு நிலங்களை விற்பனை செய்கிறார்கள் இதனால் சிலர் பெரிய லாபம் பெறுகிறார்கள், சிலர் எமaட்டறம் பெறுகிறார்கள், எனவே தமிழக முதல்வர் அவர்கள் நமது அரசு சார்பாக தனியார் நிறுவனம் செய்வதை கட்டிலும் மிக சிறப்பாக, விற்பவர்களின் நிலத்தை பெற்று மனைகளாக பிரித்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யலாமே , மேலும் தற்பொழுது பல வங்கிகள் கடன் கொடுப்பதால் எல்லோரும் எளிதில் பயன் பெற முடியுமே. தமிழக முதல்வருக்கு நன்றி. வாழ்க தமிழகம். வளர்க தமிழ் நாடு.
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
05-ஏப்-201311:41:11 IST Report Abuse
Chenduraan முதலில் இருக்கிற ஊர்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஒழுகாக செய்தாலே போதும். துணைநகரம் எல்லாம் கட்சிகார்களுக்கு காசு பார்க்கும் ஒரு வழி அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
05-ஏப்-201311:18:25 IST Report Abuse
s.maria alphonse pandian இந்த இரண்டாண்டுகளில் இதுவரை எல்லாமே ஒரே அறிவிப்பு மயம்தான்...செயல் பாட்டுக்கு வந்தது இட்லி கடை மட்டுமே...புதிய மின் திட்டங்களை பொருத்தவரை இதுவரை அறிவிப்பு கூட இல்லை....எல்லாமே திமுகவின் மின் திட்டங்களை மட்டுமே நம்பிதான்....
Rate this:
Share this comment
Unmai - Bangalore,இந்தியா
05-ஏப்-201312:31:24 IST Report Abuse
UnmaiHello Mr alphonse ... go and read english paper f the many power projects inching closer to completion in the State, the Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) is now paying greater attention to three new projects, which will generate 3,300 megawatt (MW). The new projects, all coal-fired, will have five units, each with capacity of 660 megawatt (MW). Their cost will be Rs. 20,000 crore. While the Ennore Thermal Power Station (ETPS) expansion project will have one unit of 660 MW, the Ennore Special Economic Zone (SEZ) thermal power project and the Udangudi thermal power project will have two units each of similar capacity. All the projects will employ the super critical technology, associated with better heat rate, less coal firing, less CO2 emission and more environment frily functions when compared to conventional plants using sub-critical technology. On Friday, the Corporation ed technical bids received for the ETPS expansion project. A couple of leading players in the field of integrated power plant equipment manufacturing have submitted their proposals. On scrutiny of the technical bids, the Tangedco will examine, in a few months, price bids given by the players. In respect of the other two projects, the Tangedco is planning to invite ters shortly. As regards the ETPS expansion project, all approvals have been secured including environmental clearance of the Union Ministry of Environment and Forests and the Tamil Nadu Pollution Control Board’s consent for establishing the project, officials of the Tangedco say. The nod of the Expert Appraisal Committee (EAC) of the Union Ministry has been obtained for Udangudi, which was originally proposed to be taken up as a joint venture project involving the erstwhile Tamil Nadu Electricity Board (TNEB) and the Bharat Heavy Electricals Limited (BHEL). Even after the EAC’s nod, the Union Ministry took the stand that unless coal linkage was firmed up, it could not grant environmental clearance. When the project remained in limbo, Chief Minister Jayalalithaa, in February 2012, announced her government’s decision to implement it as a State sector project, ensuring the availability of the entire power generated to the State. It was decided to implement the project with imported coal. As for the Ennore SEZ Thermal Power Project, the Committee agreed to recomm it for environmental clearance subject to the receipt of a study on the presence of heavy metal in coal. The Tangedco has commissioned the study to Anna University, which is likely to submit its report soon. As imported coal is going to be used for all these projects and the Corporation has tied up with MMTC on a long term basis for supply of 10 million tonnes of coal, the Tangedco officials are hopeful that environmental clearance will be secured sooner or later. Land While the ETPS expansion project will be implemented within the premises of the existing station, the Ennore SEZ Thermal Power Project will be taken up on a portion of land, originally meant for ash dyke of the North Chennai Thermal Power Station. The authorities have reclaimed 500 acres of land where the second project is going to be uted. In respect of Udangudi, which is in Tuticorin district, the proposed plant will come up on poromboke land....
Rate this:
Share this comment
Ebenezar Sundararaj - vellore,இந்தியா
06-ஏப்-201319:06:56 IST Report Abuse
Ebenezar SundararajHello Boss, all the projects that are near completion are started five years back, can you list any new scheme started (not announced) in the last 2 years, if you are regular dinamalar e paper reader you would have noticed that not even one rupee alloted for power projects this year. last year she announce every year 1000MW will be added through Solar , what happened, come on dont be crazy...
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
05-ஏப்-201311:12:40 IST Report Abuse
ANBE VAA J.P. இப்போதைக்கு தேவை உங்களின் 16 மணிநேர செயற்கை மின்வெட்டுக்கு உடனடி தீர்வு 24 மாதமாகி யும் விடிவு இல்லை அதுவும் இந்த கோடை நடு நிசியில் நீங்கள் ஏற்படுத்தும் மின்தடையால் எங்கள் குழந்தைகள் .,முதியவர்கள் படும் அவஸ்தைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியது வரும் ஆகவே தேவை மின்சாரம் .,மின்சாரம் ...மின்சாரம் ..மின்சாரம் அதை தவிர இப்போது வேறொன்றும் தேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை