Former DMK minister in temple function | திருச்சி உக்கிரமாகாளியம்மன் திருவிழா: மாஜி நேரு "பரவசம்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருச்சி உக்கிரமாகாளியம்மன் திருவிழா: மாஜி நேரு "பரவசம்'

Added : ஏப் 04, 2013 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Former DMK minister in temple function

திருச்சி: உக்கிரமாகாளியம்மன் கோவில், "குட்டி குடித்தல்' திருவிழாவில் பங்கேற்ற, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, பயபக்தியுடன் அம்மனை வணங்கி, விபூதி பூசினார்.
திருச்சி, தென்னூர், உக்கிரமாகாளியம்மன் கோவில், பங்குனித்தேர் திருவிழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. கோவில் காவல் தெய்வமான சந்தனக் கருப்புக்கு, "குட்டி குடித்தல்' திருவிழா, அவ்வூர் மந்தையில் நேற்று நடந்தது. பலி கொடுக்கப்பட்ட ஆடுகளின் ரத்தத்தை, மருளாளி உறிஞ்சி குடித்தது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. திருவிழாவில் பங்கேற்க, தென்னூர் பகுதியில் உள்ள, தி.மு.க.,வினர், தி.மு.க., மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவுக்கு அழைப்பு விடுத்தனர்; ப்ளக்ஸ் பேனர், போஸ்டர் ஒட்டி வரவேற்பு அளித்தனர். காலை, 9:50 மணியளவில், தென்னூர் மந்தைக்கு, நேரு வந்தார். தென்னம் ஓலை, வெட்டிவேர் வேய்ந்த தேரில், மந்தையில் எழுந்தருளி, அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சில நிமிடங்கள் கண்களை மூடி நேரு, கைக்கூப்பி அம்மனை வழிபட்டார். அவருக்கு கோவில் பூசாரிகள், விபூதி பிரசாதம் அளித்தனர்; தலையில் விபூதியால் ஆசிர்வதித்து, நெற்றியிலும் பட்டையாக பூசினர். அதன்பின், நேரு, தன்கையிலிருந்த விபூதியையும் பூசி, அங்கிருந்து கிளம்பினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஏப்-201315:44:06 IST Report Abuse
தமிழ்வேல் தவறு செய்பவர்களுக்கு பக்தி அதிகம்.. அதனால் பக்தி உள்ளவர்களெல்லாம் தவறு செய்தவர்களாகாது... வியாதி வந்து அனைத்து ஆஸ்பத்திரிகளும் மருத்துவர்களும் கைவிட்டபின் மந்திர வாதி போல எதையும் நம்புவது சகஜமான ஒன்று. யாகம், விதவை திருமணம், மதிய உணவு என்று அரசு காசில் செய்வதும் இதே வகைதான்... கடவுளை நம்புபவர்களும் நம்பாதவர்களும் செய்வதுதான் .....
Rate this:
Share this comment
Cancel
Muthurasu - Singapore ,சிங்கப்பூர்
05-ஏப்-201314:49:05 IST Report Abuse
Muthurasu எப்படியோ, அந்த ஆண்டவன் தீமுக காரனுக்கு நல்ல புத்தி கொடுத்தல் தமிழகர்துக்கு நன்றே.
Rate this:
Share this comment
Cancel
Muthu Ramachandran - Coimbatore,இந்தியா
05-ஏப்-201314:04:04 IST Report Abuse
Muthu Ramachandran முன்னாள் அமைச்சர் திருநீர் பூசியது கட்சிக்கு தெரிந்தால் உறுப்பினர் பொறுப்புக்கும் ஆபத்து
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-ஏப்-201313:22:05 IST Report Abuse
Nallavan Nallavan கத்தரி எதிர்காலத்துக்கு நல்லது ....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-ஏப்-201313:21:35 IST Report Abuse
Nallavan Nallavan எதிர்காலம் நன்றாக இருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
ramram - Pondicherry,பிரான்ஸ்
05-ஏப்-201312:31:48 IST Report Abuse
ramram ஆத்தா செஞ்ச பாவங்கள் எல்லாம் தொலைஞ்சு fresh ஆகா பாவங்கள் செய்ய அருள் புரியவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
05-ஏப்-201312:15:20 IST Report Abuse
Rangarajan Pg கோவில்களில் ஆடு பலியிடப்பட்டு அதன் ரத்தத்தை உறுஞ்சி குடிக்கும் நிகழ்வு எந்த வகையில் சேர்த்தியோ தெரியவில்லை. இதை போன்ற பலியிடுதல் போன்றவை பக்தியை காட்டவில்லை. பக்தர்கள் என்று கூறி கொள்ளும் சிலரின் மனதில் இருக்கும் ரத்த வெறியை தான் காட்டுகிறது. இதற்கு நேரு சென்றார் காந்தி சென்றார் என்று பரப்புரை வேறு. இங்கு பலியிடப்பட்டு ரத்தம் உறிஞ்சப்பட்ட ஆடுகளை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது. என்ன கொடூரம் இது? இப்படி செய்பவர்கள் எல்லாம் மனிதர்களா?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
05-ஏப்-201311:40:37 IST Report Abuse
sundaram சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைப்பிரச்சினை ( அது தனி ஈழமா அல்லது தமிழ் ஈழமா என்று எனக்கு தெரியாது ) யின் போது தினமலர் "அன்றும் இன்றும்" என்று இரண்டு புகைப்படங்களை பிரசுரித்திருந்தது. ஒரு படத்தில் இலங்கை அதிபர் ராஜபக்செயிடமிருந்து மலர்ந்த முகத்துடன் ஒரு பிரபலம் ஜோடியாக பரிசு பெறும் காட்சியும் மறுபடத்தில் ராஜபக்சே கொலைகாரன் என்று குரல் எழுப்பும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அதுபோல, 2011 மே மாதம் அமைச்சர் குடியிருப்பை காலி செய்துவிட்டு வரும்போது அதுகாறும் பூஜை அறையில் இருந்த கடவுளர் ( திருப்பதி பெருமாள் படம் ) படங்களை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்த அமைச்சர் நேருவின் ( வீட்டின் ) படம் இதே தினமலரில் வெளியாகியிருந்தது. இப்போது சென்ற வாரம் ஒரு கோவிலில் பூஜை வழிபாடு, இந்த வாரம் ஒரு கோவிலில் வழிபாடு என்று வாராவாரம் செய்திகளுடன் புகைப்படங்களும் நேருவைப்பற்றி வெளியாகின்றன. இதனையும் தினமலர் அன்றும் இன்றும் என்று தொகுத்து வெளியிடலாமே. ( அது சரி, முன்னாள் அமைச்சர் நேரு கோவில் கோவிலாக அலைவது அவருக்கும் அவரது குடும்பத்துக்குமா அல்லது தலைவருக்கும் அவரது குடும்பங்களுக்குமா? )
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
05-ஏப்-201311:20:34 IST Report Abuse
s.maria alphonse pandian ஒரு உக்கிர மாகாளியின் ஆட்டத்தை தடுக்க இன்னொரு உக்கிர மாகாளியின் உதவியை தேடினாரோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
05-ஏப்-201311:18:11 IST Report Abuse
MJA Mayuram பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைத்து மதத்தினரையும் மதித்து நடப்பதுதான் சரி....நோன்பு கஞ்சி குடிக்க அனைத்து கட்சியினரும் குல்லா போடுகின்றனர் அல்லது முக்காடு போட்டு கையேந்தி ( பிச்சை கேட்பது போல் ) போஸ் கொடுக்கின்றனர்...அப்படி இருக்கும்போது இது தவறில்லையே...நேரு வழி நேர்மையின் வழி ( நே வுக்கு நே போட்டு எழுதிட்டேன் ) யாரும் கொதிக்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை