E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சட்டசபையில் பேச தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் போட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 ஏப்
2013
00:38
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 23:43

சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்து பேசுவதில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இவர்களை சமரசம் செய்ய முடியாமல், கட்சி தலைமை தவித்து வருகிறது.
சட்டசபையில், 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட், கடந்த மாதம், 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை, பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. 28ம்தேதி, பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை இடம் பெற்றது.


அதிருப்தியாளர்கள்: விஜயகாந்தை தவிர்த்து, 23 தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், பட்ஜெட் தாக்கலின் போது, சட்டசபைக்கு வந்திருந்தனர். உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., தமிழழகனை தவிர்த்து, மீதமுள்ள, நான்கு பேரும் பங்கேற்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்ற போது, தமிழழகனுடன், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். சட்டசபை உரிமைக் குழு விசாரணையில் இருந்த, இந்த விவகாரத்தில், சந்திரக்குமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, செந்தில்குமார், அருட்செல்வன், முருகேசன் ஆகிய, ஆறு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் இருந்து, ஓராண்டுக்கு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். கடந்த, 25ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பங்கேற்க வந்தபோது, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், பட்ஜெட் பொது விவாதத்தை புறக்கணிப்பதாக, விஜயகாந்த் அறிவித்தார்.


தண்டனை குறைப்பு: அதே நேரத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தலால் எம்.எல்.ஏ.,க்களின் சஸ்பெண்ட் காலம், ஆறு மாதமாக குறைக்கபட்டது. கடந்த, 1ம் தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. ஆறு, "சஸ்பெண்ட்' எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், விஜயகாந்த் ஆகியோரை தவிர்த்து மீதமுள்ள, 17 பேர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று வருகின்றனர். முதல்வரை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் புகழ்வதால், சட்டசபைக்கு வருவது பிடிக்கவில்லை என, சென்னையில் நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில், விஜயகாந்த் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரனை தவிர்த்து, மீதமுள்ள அனைவரும் சட்டசபைக்கு புதியவர்கள் என்பதால், கடந்த, இரு ஆண்டுகளாக, சட்டசபை விவாதங்களில் பங்கேற்று பேசுவதில், திணறி வந்தனர். கட்சி தலைமை கேட்டபோது, "மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்' எனக்கூறி, பலரும் நழுவினர்.


புகழ் பெற ஆசை: இந்நிலையில், சட்டசபை விவாதத்தில் பங்கெடுத்து பேசி, பிரபலம் அடைய வேண்டும், மக்கள் மத்தியில் பெயர் எடுக்கவேண்டும் என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தற்போது விரும்பு கின்றனர். இதன் விளைவாக, மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்து பேசுவதில், அவர்களுக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது. முக்கிய துறைகளின் மீதான விவாதங்களில் பங்கேற்று பேசுவதற்கு மட்டுமே, பலரும் ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சுகாதாரம், உயர்கல்வி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, நெடுஞ்சாலை, வருவாய், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளின் மானியகோரிக்கை விவாதத்தில் பங்கேற்பதை, அவர்கள் விரும்புவதாக தெரிகிறது. வேளாண்துறை விவாதத்தில் பேசுவதில், இரண்டு பெண், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


போர்க்கொடி: முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு துறைகளில், கடந்த கூட்டத் தொடர்களில், பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கெடுத்து பேசி வந்துள்ளார். ஆனால், இந்த முறை தங்களுக்கு, அந்த துறை குறித்து பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளதாக தெரிகிறது. இதேபோல, பலரும் முக்கிய துறைகளை கேட்பதால், அவர்களை சமரசம் செய்ய முடியாமல், தே.மு.தி.க., தலைமை திணறி வருகிறது. மேலும், எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே, கோஷ்டிகள் உருவாகுமா என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பஞ்சாயத்தும், தற்போது கட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது.


- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
05-ஏப்-201316:26:35 IST Report Abuse
T.C.MAHENDRAN சட்டசபையில் பேச மட்டுமா தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் போட்டி போடுகிறார்கள் ?. அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக்கொள்ளவும் தான் இந்த போட்டா போட்டி .
Rate this:
7 members
0 members
23 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-ஏப்-201315:28:57 IST Report Abuse
Nallavan Nallavan நல்ல விஷயம் தானே?
Rate this:
2 members
0 members
11 members
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
05-ஏப்-201312:43:31 IST Report Abuse
Peria Samy கட்சி நடத்துவதிலயே இவ்வளவு குழப்பமாக இருக்கும் விஜயகாந்த்திடம் தமிழக அரசு நிர்வாகத்தை எப்படி நம்பி ஒப்படைப்பது? இது தான் இன்று மக்கள் மனதில் நிலவும் தலையாய கேள்வி. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. அடுத்த மாற்று பா,ஜ.க. மட்டுமே. அவர்களாவது இந்த வாய்ப்பை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும். அடுத்த தேர்தலில் மோடி பிரதமரானால் தமிழகத்தில் பா.ஜ.க. தழைக்கும்..
Rate this:
11 members
1 members
3 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
05-ஏப்-201312:37:01 IST Report Abuse
Rangarajan Pg கட்சிக்குள் எந்த பிரச்சினையானாலும் சரி அதன் தலைவரான வறுமை ஒழிப்பு நாயகர் கேப்டன் விஜயகாந்த் சரி செய்து விடுவார். அந்த நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது. விஜயகாந்துக்கு இல்லாத திறமையா, எவ்வளவு திரைப்படங்களில் தீவிரவாதிகளை துவைத்து காய போட்டிருக்கிறார். எத்தனை அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு வாஷிங் மெஷினை... சாரி சாரி.... கப்பல் காப்டனை சாதாரணமாக நினைத்து விட முடியாது. எல்லா பிரச்சினைகளையும் ஒரே வசனத்தில் சரி செய்து விடுவார்
Rate this:
9 members
0 members
25 members
Share this comment
Cancel
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-201311:38:27 IST Report Abuse
samy அம்மா அல்லது செல்வி மலர் என்று பெயர் மாற்றலாம்.
Rate this:
19 members
1 members
23 members
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
05-ஏப்-201311:02:12 IST Report Abuse
Chenduraan MLA சட்டசபையிலே பேசத்தான் வேண்டும். தனிநபர் துதிபாடுவதற்கு சட்டசபை தேவை இல்லை. MLA கள் இப்போதுதான் தங்கள் கடமைகளை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். பாராட்ட வேண்டும்.
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
tmsaravanai - CHENNAI,இந்தியா
05-ஏப்-201310:56:41 IST Report Abuse
tmsaravanai பேசாமல் பொண்டாட்டி இடம் கட்சி பொறுப்பை கொடுத்து விட்டு சும்மா வீட்டில் இருந்து தண்ணீர் அடித்து விட்டு படு . நீ நாக்கை மடிக்கிறதெல்லாம் சினிமாவுக்கு தான லாயக்கு. சினிமா புள்ளி விபரம் எல்லாம் வாழ்க்கையில் பயன்படாது. உன்னை நம்பி முதல் போட்டவன் பணத்தையெல்லாம் கோவிந்தா ஆக்காதே
Rate this:
8 members
0 members
34 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
05-ஏப்-201310:42:04 IST Report Abuse
R.Saminathan வாழ்க தே.மு.தி.க. நல்ல முடிவினை எடுக்க வேண்டும் தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள். தே.மு.தி.க.எம்.எல்.எக்கள்.,.,.மக்கள் பிரச்சனையை சட்டசபையில் விரிவாக காண்பிக்க வேண்டும்,.மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும்,., தினமலருக்கு எனது நன்றிகள்.
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
05-ஏப்-201309:58:36 IST Report Abuse
T.Indran எதுக்கு சட்ட சபையிலே போட்டி போட்டு எம். எல். ஏ க்கள் பேசணும். அதனாலே என்ன நடந்திட போகுது. பேசாமல் 'கட்சி விற்பனைக்கு' ன்னு ஒரு போர்டை மாட்டி விட்டு வீட்டிலே படுத்து தூங்க வேண்டியது தானே.
Rate this:
11 members
0 members
20 members
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
05-ஏப்-201309:51:51 IST Report Abuse
Rajesh இவர்களுக்கு வாக்களித்து சட்டசபைகு அனுப்பி வைத்து மக்கள் தேவைகள் பத்தி பேச சொன்னால் கருப்பு சட்டை அணிந்து கட்சி பத்தி பேசினால் வீனா தான் போவர்கள்...
Rate this:
4 members
0 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.