Advertisement
தமிழக காற்றாலைகளில் உற்பத்தி சரிவு: 2,224 மெகாவாட் மின் பற்றாக்குறை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
23:44

தென்மேற்கு பருவகாற்றை நம்பியுள்ள தமிழக காற்றாலைகளில், மின் உற்பத்தி குறைந்து விட்டதால், நேற்று தமிழகத்தின் மின் பற்றாக்குறை, 2,224 மெகாவாட் ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காற்றாலைகள் அதிக அளவில் உள்ளன . தமிழ்நாடு மின்கழக காற்றாலைகள் மூலம், 17.5 மெகாவாட், தனியார் காற்றாலைகள் மூலம், 7,115 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் அனைத்தும், தென்மேற்கு பருவகாற்றை நம்பியே உள்ளது. ஜூன் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவகாற்று சீசன் துவங்கி தொடர்ந்து, மூன்று மாதம் நீடிக்கும். அப்போது காற்றாலைகள் மூலம் மின்கழகத்துக்கு அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். தமிழகத்தில் மின்வெட்டு நேரமும் குறையும். இதர மாதங்களில் தென்மேற்கு பருவகாற்றின் வேகம் குறைந்து விடும் என்பதால் காற்றாலைகள் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விடும். நடப்பாண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வீசும் காற்றின் வேகத்தை விட, நடப்பாண்டு வேகம் குறைந்து விட்டது. அதற்கேற்ப தமிழக காற்றாலைகளின் மின் உற்பத்தியும் குறைந்து விட்டது. ஒரு வாரத்துக்கு முன், காற்றாலை மின் உற்பத்தி பூஜ்யமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது காற்று லேசாக வீசுவதால் நேற்று முன்தினம் காற்றாலைகளில், 229 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது நேற்று காலை, 220 மெகாவாட் ஆக மீண்டும் சரிந்தது.


நேற்று காலை, 8 மணி நிலவரப்படி அனல் மின் நிலையங்கள் மூலம் 3,145 மெகாவாட், நீர்மின் நிலையங்களில், 198 மெகாவாட், மத்திய மின்தொகுப்பில் இருந்து, 2,150 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதுதவிர தனியார் மின் உற்பத்தி அமைப்புகளிடம் இருந்தும் மின்சாரம் பெறப்பட்டது.நேற்று தமிழகத்தின் மொத்த மின் தேவை, 11,328 மெகாவாட் ஆக இருந்தது. ஆனால், 9,104 மெகாவாட் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டதால், 2,224 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. வரும் ஜூன் மாதமே காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்து, மின் பற்றாக்குறை குறையும். எனவே, வரும் மே இறுதி வரை, தமிழகத்தில் அடிக்கடி மின்பற்றாக்குறை பாதிப்பு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.


- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இரா. விஸ்வநாதன் - மதுரை,இந்தியா
17-ஏப்-201303:55:34 IST Report Abuse
இரா. விஸ்வநாதன் //. தமிழ்நாடு மின்கழக காற்றாலைகள் மூலம், 17.5 மெகாவாட், தனியார் காற்றாலைகள் மூலம், 7,115 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.// தமிழ்நாடு மின்கழக காற்றாலைகளின் உற்பத்தி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம். நிர்வாகச் சீர்கேடா அல்லது போதிய முதலீடு இல்லையா? உடனடியாக அரசு இதனை ஒழுங்குபடுத்த வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
05-ஏப்-201314:12:49 IST Report Abuse
ravi ramanujam r எல்லோரும் சென்னைக்கு குடி புகுந்து விடலாமா? அங்கு மின் தட்டுபாடு வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே. எஞ்சிய தமிழகத்தில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம். என்ன கொடுமைடா சாமி.
Rate this:
0 members
0 members
29 members
Share this comment
Cancel
K.RAMAN. - chennai,இந்தியா
05-ஏப்-201313:58:42 IST Report Abuse
K.RAMAN. abcd, தமிழவேள் நீங்க ரெண்டு பேருமே மரியா கூட்டமா. என்ன செய்யவில்லை என்று ஒரு பட்டியலை மு க அல்லது மு க இஸ் இவர்களை வெளியிட சொல். டெல்லி அரசு வேண்டாம் என்று சொன்ன மின்சாரத்தை நாங்களே கொண்டு வந்து கொள்கிறோம் என்று சொன்ன பின்னரும், தள்ளு நாற்காலி தடை போட இந்திய அரசு தர மறுத்து மிகவும் உதவும் பாக்கிற்கு கொடுத்துவிட்டது. குஜராத் தருகிறேன் என்று சொன்னால் வழி தடத்தை மரிப்பதற்கு மத்திய அமைச்சர் குழுவே வந்து தடுக்கிறது.இத்தனையும் வென்று மின் பிரச்சினையை தீர்க்கத்தான் போகிறார் அம்மா.அதுவரை பொறுங்கள்.ஐந்து ஆண்டுகளில் அழிக்கப்பட்டது இந்த ஆண்டுக்குள் சரி செய்யப்படும்.வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ rellaam pesa வேண்டாம்.
Rate this:
106 members
0 members
3 members
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
05-ஏப்-201311:58:59 IST Report Abuse
saeikkilaar காதுல பூ
Rate this:
0 members
0 members
59 members
Share this comment
Cancel
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-201311:58:24 IST Report Abuse
samy ஏன் சசிகலா குரூப் இந்த காற்றலை மூலம் மின் உற்பத்தி செய்து தனது டாஸ்மாக் பாவத்தை போக்கி கொள்ள கூடாது.
Rate this:
0 members
0 members
80 members
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
05-ஏப்-201310:27:46 IST Report Abuse
saeikkilaar ஓகே, ஓகே... ஜூன் மாதம் சூட்சுமம் இது தானா
Rate this:
0 members
0 members
86 members
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
05-ஏப்-201310:24:22 IST Report Abuse
Dhanabal தமிழ்நாட்டில் ஜூன் மாதம் காற்றடித்தால் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி பெருகும். மின் தட்டுப்பாடு நீங்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. காற்று அடித்தால்தான் இங்கு மின்சார வெட்டு தளர்வு. இல்லையேல் என்றென்றும் மின் வெட்டுதான் ...
Rate this:
0 members
0 members
93 members
Share this comment
Cancel
Suresh - Marthandam,இந்தியா
05-ஏப்-201310:02:34 IST Report Abuse
Suresh மே மாதத்துக்கு அப்புறம் அதுவே பழகிடும் ....
Rate this:
0 members
0 members
114 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
05-ஏப்-201308:57:27 IST Report Abuse
PRAKASH மின் தட்டுப்பாடு என்பது வழக்கம் தானே .. இதை ஏன் தினமும் செய்தியாக போட வேண்டும் தினமலரே.
Rate this:
2 members
1 members
86 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
05-ஏப்-201307:04:37 IST Report Abuse
Samy Chinnathambi அம்மா ஆட்சியிலே எல்லாமே சரிவுதான்....ஆனால் கடன் தொகை மட்டும் தான் உயர்வு....விலைவாசியும் கூட தான்..
Rate this:
0 members
0 members
95 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.