Rs. 1 lakh cash prize announced who found missed dog | நாயை கண்டுபிடித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு: வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட எஜமானர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாயை கண்டுபிடித்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு: வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட எஜமானர்

Added : ஏப் 04, 2013 | கருத்துகள் (11)
Advertisement
Rs. 1 lakh cash prize announced who found missed dog

சென்னை: ஆசை ஆசையாக வளர்த்த நாயை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என, வங்கி அதிகாரி ஒருவர் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி. வங்கி அதிகாரி. இவர் மிகவும் பாசமாக, "சிவா' என்ற நாயை வளர்த்து வந்தார். அலுவலகம் செல்லும் போதும், நாயை கூடவே அழைத்து செல்வார்.

அப்படி என்ன பாசம்? கடந்த மார்ச் 4ம் தேதியன்று வழக்கம் போல் நாயை, தனது அலுவலத்திற்கு அழைத்து வந்தார். அன்று மதியம், 2:30 மணிக்கு திடீரென நாயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மிகவும் துவண்டு போனார் சந்திரமவுலி. "என் சிவாவை கண்டுபிடித்து கொடுத்தால், 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, துண்டு பிரசுரங்களை அச்சடித்து, சென்னை முழுவதும் வினியோகித்து வருகிறார்.

"சிவா மீது அப்படி என்ன பாசம்?' என்ற கேள்விக்கு சந்திரமவுலி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை நேரத்தில் தான் சிவாவை சந்தித்தேன். அப்போது அவன் உடம்பெல்லாம் காயமாக இருந்தது. கல்லடி பட்டு ரத்தம் சிந்தியது. அவனை வீட்டிற்கு அழைத்து சென்று, காயங்களுக்கு மருந்து போட்டேன். ஸ்பெஷல் சோப் வாங்கி போட்டு குளிப்பாட்டியதும், பளிச்சென மாறிவிட்டான். ரேஷன் கார்டில் சேராத, குடும்ப உறுப்பினராக இருந்தான். நான் எப்போதும் சிவநாமத்தையே உச்சரிப்பேன். அதன்படி, "சிவா' என, பெயரிட்டேன். என், மகன் போல அவனை பாவித்தேன். நான் வங்கி செல்லும் முன், எனக்கு முன்பாக காரில் ஏறி கொள்வான். இருவரும் சேர்ந்தே வங்கி செல்வோம்.

எப்படி இருக்கிறானோ? மதிய உணவுக்கு பின் "வாக்கிங்' செல்வோம். இந்த நிலையில், யார் கண் பட்டதோ, மார்ச் 4ம் தேதி, நான் வங்கியில் இருந்து திரும்பும் போது, சென்னை அருங்காட்சியகம் அருகே நண்பரை பார்க்க போனேன். திரும்பி வருவதற்குள் காணாமல் போய் விட்டான். ஒரு மாதமாக தேடியும் கிடைக்கவில்லை. எப்படி இருக்கிறான், சாப்பிட்டானா, பசியோடு திரிகிறானா என்றும் தெரியவில்லை. குடும்பத்தில் ஒருவரை பிரிந்தது போல, என் மனம் வலிக்கிறது. எனவேதான், 1 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளேன். யார் மூலமாவது சிவா எனக்கு கிடைப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, சிவா பற்றி பேசியவர், தவறியும் கூட, "நாய்' என்று ஒரு முறை கூட சொல்லவில்லை. மனி தாபிமானமிக்க இவரின் சிவாவை யாராவது பார்த்தால், 98842 63713, 99628 89460 என்ற, அலைபேசி எண்களில் தெரிவித்து உதவலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
07-ஏப்-201304:24:16 IST Report Abuse
arabuthamilan காணாமல் போன தாய்க்கு (வீட்டிற்குப் போக வழிதெரியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கும்) சன்மானம் தராதவர்கள் மத்தியில் ) காணாமல் போன ஒரு நாய்க்கு இவ்வளவு சன்மானம் தருகிறார்கள் என்றால் நம் நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-201313:01:32 IST Report Abuse
S.RAJA சிலர் பிரானிகள் மேல அதி்கம் பிரியம்மா இருக்க காரனம். சக மனிதர்கள் மிது .வெறுப்பு -நம்பிக்கை இல்லாமைதான் -அடுத்து இதுங்ககிட்ட பழகின நம்ம கிட்டருந்து எதையிம் எதி்ர்பார்க்காது. ஆனா நம்ம- பழகின மறு நாளே அவசரம்மா கெஞ்சம் பணம் வேனும்ன்னு கேட்பாங்க- இதனாலயே சிலர் இப்படி, நாய் பூணைன்னு இதுங்க மேல அளவுக்கு அதி்கம்மா பாசம் வைக்கிறாங்க;;
Rate this:
Share this comment
Cancel
Mrs. Vijayalakshmi manikandan - Chennai,இந்தியா
05-ஏப்-201312:23:41 IST Report Abuse
Mrs. Vijayalakshmi manikandan Mr. Chandramouli Sir, Pls S it Our Shiva Photo.
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
05-ஏப்-201311:25:34 IST Report Abuse
S Rama(samy)murthy இவருடைய மன வலி எனக்கு புரிகிறது . ஒரு வருடம் முன் எனது மகன் போல் இருந்த ராஜபாளையம் இறந்த அன்று நான் பட்ட வேதனை எனக்கு தெரியும் .சில நாட்கள் முன் "மெர்லி அண்ட் மீ " என்ற ஆங்கில படம் பார்த்தேன் .அதில் செல்ல நன்றி உள்ள பிராணி இறந்து விடுகிறது . அன்று இரவு நான் தூங்கவில்லை .எனது ராஜபாளையம் நினைவு வந்துவிட்டது .சுப ராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
05-ஏப்-201310:58:26 IST Report Abuse
BLACK CAT நாய் busy ya இருக்க வேண்டிய நேரத்தில் இவர் வண்டியில் அழைத்து சென்று இம்சை கொடுக்கலாமா ...?
Rate this:
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
05-ஏப்-201309:22:54 IST Report Abuse
Babu. M பண திமிர்
Rate this:
Share this comment
S.Sriram - Kumbakonam,இந்தியா
08-ஏப்-201302:08:39 IST Report Abuse
S.Sriramஅந்த நல்ல மனிதர் மற்ற ஜீவன்களிடத்திலும் காடும் அன்பை இப்படி தரம் தாழ்ந்து பேசி கொச்சைப் படுத்தாதீர்கள். ஜீவா காருண்யம் என்றால் என்ன என்பது தெரியுமா உங்களுக்கு. மனிதர்களிடத்தில் மட்டும் தான் அன்பு காட்ட வேண்டும் என்றில்லை. அவர் தன் ஒரு லட்ச ருபாய் பணத்தை விட அந்த நாயை பெரிதாக கருதுகிறார். அதனால் தன் இப்படி பெரிய தொகையை பரிசாக அறிவித்து, அதை தேடிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு அதை புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும், இப்படி எழுதாதீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
samy - kalavai  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-201308:40:29 IST Report Abuse
samy உங்கள் சிவா உங்களுக்கு கிடைப்பான்
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
05-ஏப்-201308:36:56 IST Report Abuse
பி.டி.முருகன்    சிவாவை பிரிந்து வாடும் இவரது துக்கத்தில் நாமும் பங்கு கொள்வோம்.சீக்கிரம் சிவா வீடு திரும்ப பிரார்த்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
05-ஏப்-201307:57:10 IST Report Abuse
kumaresan.m " அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ...சான்றோர்களின் பொன் மொழி ....இந்த வாயில்லா ஜீவனுக்கு காட்டும் அன்பை அவரை சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கு காட்டுவாரா என்பது.....????
Rate this:
Share this comment
S.Sriram - Kumbakonam,இந்தியா
08-ஏப்-201301:57:43 IST Report Abuse
S.Sriramஇதில் அவர் என்ன அளவை மீறி விட்டார். மனிதனை தவிர மற்ற ஜீவன்களின் மீது அதிகமான அன்பு கட்டுவது தவறு இல்லை. இன்றைய உலகில் நாய்களிடத்தில் இருக்கும் நன்றி உணர்வு பெர்ம்பாலனா மனிதர்களிடத்தில் இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை