75 pc subsidy for communication equipment for fishing boats: Jayalalithaa | மீனவர்களுக்கு உதவும் தகவல் தொடர்பு கருவிகள்: 75 சதவீத மானியம் தர அரசு முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களுக்கு உதவும் தகவல் தொடர்பு கருவிகள்: 75 சதவீத மானியம் தர அரசு முடிவு

Added : ஏப் 05, 2013 | கருத்துகள் (15)
Advertisement
மீனவர்களுக்கு உதவும் தகவல் தொடர்பு கருவிகள்: 75  சதவீத மானியம் தர அரசு முடிவு,75 pc subsidy for communication equipment for fishing boats: Jayalalithaa

சென்னை :"மீனவர்களுக்கான தகவல் தொடர்பு கருவிகளுக்கு, 75 சதவீதம் மானியம் அளிக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை:வேலைவாய்ப்பு, புரதச் சத்து உணவு பெருக்கம் மற்றும் அன்னிய செலவாணியை ஈட்டுவதில், மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத் தொழிலை மேற்கொள்ளும், தமிழக மீனவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.மீன்பிடி தடை காலங்களில், சிறப்பு நிவாரண உதவி தொகையை, 4,000 ரூபாயாக, தமிழக அரசு உயர்த்தியது உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


ரேடியோ கருவிகள்:

மாநிலத்தில், 5,600 மீன்பிடி விசை படகுகள் உள்ளன. இதில் ஒரு சில மீனவர்கள், தகவல் தொடர்பு சாதனங்களை பொருத்தி உள்ளனர். பெரும்பாலான விசை படகுகளில், இன்னும், தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை.மீனவர்களின் பாதுகாப்புக்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத விசை படகுகளுக்கு, மானிய விலையில், அதி உயர் அதிவெண் (ஙஏஊ) ரேடியோ கருவிகள் வழங்கப்படும்.இதற்காக, கடலோர பகுதிகளில், உயர் கோபுரங்கள் அமைத்து, மீனவர்கள் எளிதில் தொடர்பு கொள்ள தேவையான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். 20 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த தகவல் தொடர்பு கருவிகளுக்கு, 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.இந்த கம்பியில்லா தகவல் தொடர்பு வசதி, இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில், கரையில் உள்ள குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்களுடன் தொடர்பு கொள்ள உதவும்.


அதிக அலைவரிசை கருவி :

ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் பணிக்கான, இந்திய தேசிய மையத்திலிருந்து(Indian National centre for ocean information service), பெறும் தகவல்களை, தாமதமின்றி, மீனவர்களுக்கு உடனே அனுப்பவும், இந்த தகவல் தொடர்பு வசதி உதவிடும்.ஆழ்கடலில், ஒரு மாதத்திற்கு மேலாக தங்கி மீன் பிடிக்கும் படகுகளுக்கு, அதிக அலைவரிசை (HF) கருவிகள் தேவைப்படுகின்றன. இக்கருவிகள், 2.5 லட்சம் ரூபாய் விலை கொண்டதாகும். இந்த கருவிகள் தேவைப்படும் மீனவர்களுக்கு, 75 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.இதற்கான கட்டுப்பாட்டு அறையை நிர்வகிக்கும் பொறுப்பை, மீன் வளத்துறை ஏற்கும். இத்திட்டம், 8.5 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vandu murugan - chennai,இந்தியா
07-ஏப்-201314:20:15 IST Report Abuse
vandu murugan இதை என் வாழ் நாள் சாதனையாக நான் கருதுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
06-ஏப்-201319:03:00 IST Report Abuse
vandu murugan என் இத்தனை ஆண்டு வாழ் நாளில் மீனவர்களுக்காக இவளவு பண்ணியதில்லை இத என் வாழ் நாள் சாதனையாக நினைகிரெஇன் என் வாழ் நாளில் நான் அனைத்தையும் சாதித்து விட்டேன் என்பதில் பெருமிதம் கொல்கிரெஇன்
Rate this:
Share this comment
Cancel
JAI.RAMANAA - ILAVASA NAADU ,இந்தியா
06-ஏப்-201313:59:21 IST Report Abuse
JAI.RAMANAA இதை பார்த்தால் வோட்டுகான அறிவிப்பாகத்தான் தெரிகின்றது ?இப்போதைக்கு தமிழ் நாட்டிற்கு தேவை 24 மணி நேர மின்சாரம் .,ஏற்கனவே மாநில அரசின் 16 மணிநேர மின்வெட்டால் தமிழ் நாட்டில் பெரும்பாலான தொழில்கள் முடங்கி விட்டது .,பல சிறு குறுந்தொழில் புரிபவர்கள் கடன் சுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை சென்று விட்டனர் அவர்களுக்கு அவர்களும் நம்மவர்களே என்று எண்ணி இது போன்ற சலுகைகளை வழங்க முன்வருமா ?அல்லது 3 மாதத்தில் தருவேன் என்று சொன்ன மின்சாரம் மாவது தருவாரா ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஏப்-201313:12:48 IST Report Abuse
தமிழ்வேல் அவர்களுக்கு GPS கருவி (Global Positioning tem ) ஏற்பாடு செய்துதரலாம். இதனால் கடல் எல்லை தெரியாது இலங்கை ராணுவத்திடம் பிடிபடும் நமது மீனவர்களின் பிரச்னைக்கு முடிவுகானலாம்.. இவை 10 000 ரூபாய்க்குள் கிடைக்க வாய்ப்புள்ளது..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-ஏப்-201310:13:44 IST Report Abuse
kumaresan.m " மீன் வளத் துறை அமைச்சகம் ....மீனவர்களுக்கு இக்கருவிகளை இயக்க சிறப்பு பயிற்சிகளை வழங்கிட வேண்டும் ...ஒரு சம்பிரதாயம் திட்டமாக இல்லாமல் முனைந்து செயல் படுத்த வேண்டும் .....மீனவர்களுக்கு எல்லை கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தெளிவு படுத்த வேண்டும் ......மத்திய அரசு மூக்கின் மேல் விரலை வைத்து பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் காண வேண்டும் .... மீனவர்களின் சார்பாக தமிழக அரசுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் "
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
06-ஏப்-201310:09:50 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையிலையே கருத்து சொல்ல வருகின்றனர்.. எங்க குறை சொல்லலாம் என்றே தேடுகின்றனர் .. இதுவரை யாரும் இதுபோல தகவல் தொடர்ப்பு கருவிகள் வழங்க மானியம் தரவில்லை.. அந்த வகையில் வரவேற்கிறேன்.. பாராட்டுகிறேன்.. இருப்பினும் மீனவர்களின் பாதுகாப்பினை முழுமையாக உறுதி செய்யாத மாநில அரசினை கண்டிக்கிறேன்.. நேற்று இரவு கூட 25 மீனவர்களை சிங்கள ராணுவம் சிறை பிடித்து சென்றுள்ளது.. ஜெயா நேரிடையாக டெல்லி சென்று இதை அங்கெ பெரிய பிரச்சினையாக பண்ணாமல் இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்காது, நாம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் காங்கிரஸ் வேண்டும் என்றே இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் உள்ளது .. இதற்க்கு மேல் அறிக்கைகள் , கடிதங்கள் , சட்டமன்றத்தில் தீர்மானங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது , அதிரடியாக களத்தில் இறங்கினால் தான் வேலையாகும்.. அனைத்து MLA , MP மற்றும் முதல் அமைச்சர் நேரிடையாக டெல்லி சென்று குடியரசு தலைவர் , பிரதமரை வற்புறுத்தினால் தான் இது தேசிய பிரச்சினை என்று பலருக்கு தெரியும்.. அப்போது தான் தேசிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.. கொஞ்சமாவது இந்த பிரச்சினைக்கு நியாயம் கிடைக்கும்.. இல்லை என்றால் இது தொடர்கதை தான்..
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
06-ஏப்-201310:00:54 IST Report Abuse
Devanand Louis இந்த மாதிரி சேவை முக்கியம் மீனவர்களுக்கு எஆஎன்ட்ரால் மத்திய அரசை நம்பி ஒன்றும் ப்ரோஜனமில்லை ,கடற்படை யினால் மீனவர்களுக்கு நன்மையில்லை
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
06-ஏப்-201303:30:25 IST Report Abuse
Sekar Sekaran மாநில அரசு தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு முடிந்த வகையில் அருமையான செயல் திட்டங்களை மீனவர்களுக்காக செய்து தருவதை தாராளமாய் வரவேற்று பாராட்டலாம். பொறுமை எல்லை மீறுமே என்றால்..மத்திய அரசாங்கம் தனது கடற்படையை கொண்டு தமிழர்களும் நம் மக்களே என்று எண்ணி பாதுகாக்க தவறுமே என்றால்...இன்றைய சூழலில் அம்மாவின் எதிர்ப்பு என்பது மத்திய சர்க்கார் இதுவரை சந்திக்காத எதிர்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்..மாநில போலிஸ் துணை கொண்டு மீனவர்களுக்கு கடற்படை போல பாதுகாக்க முயலும் என்பதிலே மாற்றம் இருக்காது. அல்லது மத்தியில் மாற்றம் ஏற்ப்படும் வகையில் மாநில மக்கள் நாம்..அம்மாவிற்கே நாற்ப்பதையும் அள்ளி வழங்கினால்..பிறகு மீனவர்களின் வாழ்வில் மாற்றங்கள் நிறைய வரும்..பாதுகாப்பில் தயக்கம் மாறும்..அதற்க்கான வெளிப்பாடுதான் இதுபோன்ற மீனவர்களுக்கான திட்டங்கள்..இதுவரை மத்திய அரசோ..பிற மாநில அரசோ செய்யாத செயல் திட்டங்கள் இவை. போற்றுதலுக்குரிய அருமையான நல்வாழ்வு திட்டமிது..கலங்கரை விளக்காய் அம்மா ...
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
06-ஏப்-201303:14:28 IST Report Abuse
R.Subramanian மீனவர்களுக்கு தகவல் தொடர்பு கருவிகள் அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் காரணம் பெரும்பாலான மீனவர்கள் தொலை தொடர்பு, GPS கருவிகளை வைத்துள்ளனர், அதே போல் நம் இந்திய கடற்படையும் மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே நம் கடற்படையை தொடர்பு கொள்ள சொல்லி தெரிவித்துள்ளனர் (மதுரை நீதிமன்றத்தில் இது பற்றிய வழக்கின் போது நம் கடற்படை இதை தெரிவித்துள்ளது) இருந்தும் நம் மீனவர்கள் நம் கடற்படையை தொடர்பு கொள்வது இல்லை காரணம் நம் மீனவர்கள் எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்கள், இதனால் பாதிக்க படும் இலங்கை மீனவர்கள் நம் மீனவர்களை தாக்குகிறார்கள் அது தான் இப்போது பிரச்சனை, அதனால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண மீன் வளம் உள்ள பகுதியை நம் அரசு குத்தகைக்கு எடுப்பது தான், சும்மா இலங்கை தமிழனுக்கு ஆயிரகணக்கான பணத்தை வெட்டியா செலவிடுவதை விட நம் மீனவர் நலனுக்காக இலங்கை கடல் பகுதியில் ஒரு சிறிய இடத்தை சில காலங்களுக்கு குத்தகைக்கு எடுத்துவிட்டு, அந்த குத்தகை காலம் முடிவதற்குள் நம் இந்திய கடல் பகுதியில் மீன் வளத்தை பெருக்க வேண்டும்...இந்த பிரச்சனைக்கும் கட்ச தீவுக்கும் சம்பந்தம் இல்லை காரணம் நம் மீனவர்கள் இலங்கையின் கடல் பகுதிகளான, பேசாலை, மன்னார், நெடுந்தீவு வரை கூட சென்று மீன் பிடிக்கிறார்கள் (தமிழக ஊடகங்கள் இம்மாதிரியான விஷயங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியிடுவது இல்லை)
Rate this:
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
06-ஏப்-201311:56:03 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இப்படி பட்டவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழன் எக்காலத்திலும் முன்னேறவே முடியாது , தேர்தல் வரட்டும் காங்கிரஸ் என்ற இனதுரோகிகளுக்கு இருக்கு ஆப்பு..... ஒருஇடத்தில் கூட , நன்றாக கேட்டு கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு இடத்தில கூட ஒரு dash கூட கிடைக்காது... கிடைக்கவும் விட மாட்டோம்......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஏப்-201313:21:05 IST Report Abuse
தமிழ்வேல் உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.. மீன் கிடைக்கும் என்பதற்காக எல்லைதாண்டி சென்று மீன் பிடிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார்கள்... நீங்கள் கூறுவதுபோல் இந்திய அரசு சில பகுதியை குத்தகை எடுத்து உதவலாம்.....
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
06-ஏப்-201301:40:42 IST Report Abuse
Vettri இயற்கை சீற்றத்தை விட சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்டு பாதிப்படைந்த மீனவர்களே மிக அதிகம். இந்த திட்டத்தை வரவேற்கும் அதே வேலையில், சிங்கள ராணுவம் தாக்கினால் தற்காப்பிற்காக ஏதாவது சிறிய வகை ஆயுதங்கள் வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஏப்-201313:17:12 IST Report Abuse
தமிழ்வேல் சிறியவகை ஆயுதங்கள் ??? இதனால் நமது மீனவர்கள் சாக நேரிடும்... இலங்கை ராணுவத்தினர் அவர்களிடம் உள்ள பெரியவகை ஆயுதங்களினால் மீனவர்களை கொன்றுவிட்டு தற்காப்பிற்காக கொன்றோம் என்று கூற வாய்ப்புள்ளது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை