E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கட்சி நோட்டீசுக்கு பதில் இல்லை : அழகிரி ஆதரவாளர்கள் முடிவு?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஏப்
2013
23:58

மதுரை:"மதுரையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து, கட்சி தலைமை விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் சொல்ல போவதில்லை' என்ற முடிவை அழகிரி ஆதரவாளர்கள் எடுத்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்ற கூட்டம், மார்ச் 30ல் நடந்தது. இதில், நகர் தி.மு.க., நிர்வாகிகள் அழைத்தும், அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. இதனால், அவைத் தலைவர், நகர் துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என, அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் 15 பேருக்கு, தி.மு.க., அமைப்பு செயலாளர் இளங்கோவன், விளக்கம் கேட்டு "நோட்டீஸ்' அனுப்பினார்.

மேலும், "ஒரு வாரத்திற்குள் பதில் அனுப்பாவிட்டால், உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்க கூடாது' என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.நோட்டீஸ் பெற்ற மறுநாள், 15 ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர் அழகிரியை சந்தித்தனர். அப்போது ""உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லுங்கள்,'' என்று கூறினார். இதன் பின், சில முக்கிய நிர்வாகிகளை அழகிரி அழைத்து பேசியபோது, ""கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு யாரும் பதில் சொல்ல வேண்டாம். என்னிடம் கேட்கட்டும் நான் சொல்லிக்கிறேன்,'' என்று அவர் கூறியதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால், நோட்டீசுக்கு பதில் கூறி, விளக்க கடிதம் அனுப்ப போவதில்லை என்று, அவரது ஆதரவாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

"நோட்டீஸ்' பெற்ற ஒரு மூத்த நிர்வாகி மட்டும் தலைமைக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில், ""அரசியல் ரீதியாக பல்வேறு இடையூறுகளை கட்சி சந்திக்கிற நேரத்தில் இதுபோன்ற "நோட்டீஸ்' (ஒருவருக்கு ஆதரவாக, ஒருவருக்கு எதிராகவும்) தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இருவரையும் அழைத்து பேசி, ஒற்றுமையை ஏற்படுத்த தலைமை முயற்சிக்கவேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (61)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anwar ali - havana,கியூபா
06-ஏப்-201318:22:35 IST Report Abuse
Anwar ali சரியான போட்டி
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
06-ஏப்-201317:37:04 IST Report Abuse
Rangarajan Pg கட்ட பஞ்சாயத்து செய்யும் ஒரு கட்சியின் பிரச்சினையில் பஞ்சாயத்து செய்வதற்கு யாரும் இல்லாதது மிக வருத்ததிற்குரியது.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
badhrudeen - Madurai,இந்தியா
06-ஏப்-201315:44:57 IST Report Abuse
badhrudeen ஸ்டாலின் பிறந்த நாள் அவர் வீட்டால் கொண்டாடும் பிரச்சனை , இதில் அண்ணன் அழகிரியை சம்பத்தப்பட வைக்காதிர்கள் .
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06-ஏப்-201317:45:08 IST Report Abuse
சு கனகராஜ் அறுபது வருசமா ரெண்டு பெரும் பிறந்தநாள் கொண்டாடுநீங்க எப்ப்போவாசி பிரச்சினை வந்ததா இப்போ மட்டும் ஏண்டா முட்டிக்கிறீங்க ?...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-201315:34:20 IST Report Abuse
Balaji Natarajan இதே போல நோட்டீஸ் அழகிரி க்கு சென்றிருகிறதா.... இல்லையா ...கட்சியில் இன்னும் தென் மண்டல அமைப்பு செயலாளர் தானே ..... திருமங்கல தொகுதி வெற்றி என்றால் அதற்கு காரணம் அஞ்சா நெஞ்சன் .....அதற்கு ஒரு கட்சி பதவி ..... ஆனால் இன்று நோட்டீஸ் மட்டும் அவர் ஆதரவாளர்களுக்கு, நல்லா இருக்கு உங்க கட்சி விவகாரம் ....
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
06-ஏப்-201315:19:19 IST Report Abuse
amukkusaamy இது அவர்களின் உட்கட்சி விவகாரம் எந்த கட்சியில் இல்லாமல் இல்லை. ஆனாலும் அண்ணனும் தம்பியும் அடித்துக்கொள்வதால் தி(ரு) மு. க. வுக்குத்தான் பெரும் நஷ்டம். மற்றவரை திமுகவினர் குறை சொல்வதற்கு முன் தன் முதுகை பார்ப்பது நல்லது.
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
Cancel
P.N. Alagarasu - Chennai,இந்தியா
06-ஏப்-201314:40:20 IST Report Abuse
P.N. Alagarasu நாளைக்கே ரெண்டுபேரும் ஒன்னாயிடுவாங்க கருணாவுக்கு நெஞ்சம் நெகிழும். முரசொலியில் உடன்பிறப்புக்கு கடிதம் எழுதிவிடுவார். கட்சிதொண்டன் மறுபடியும் முட்டாளாவான்.
Rate this:
0 members
0 members
25 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06-ஏப்-201317:48:06 IST Report Abuse
சு கனகராஜ் அவரு மக்களை ரொம்பநாளா முட்டாளாக்கி கொண்டுதான் இருக்கிறார் ...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
06-ஏப்-201314:37:33 IST Report Abuse
Rangarajan Pg ஹலோ அழகிரி ஆதரவாளர்களே, சும்மா அந்த விழாவுக்கு வந்து தளபதிக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு போய் இருந்தால் ஏன் இவ்வளவு தொல்லை. பாவம் தலைமை உங்களுக்கு நோட்டீஸ் எல்லாம் கொடுக்கிறது. நீங்கள் எல்லோரும் அந்த விழாவுக்கு போய் இருந்தால் என்ன கெட்டு இருக்க போகிறது? நீங்கள் திமுகவினர் தானே, மானம் இருந்தால் மானம் போய் விடும் என்று பயப்படலாம் அல்லது தயங்கலாம். ஆனால் நீங்கள் திமுகவினர் தானே, இதற்கெல்லாம் யோசிக்கலாமா. விழாவுக்கு போனோமா, வணக்கம் வைத்தோமா, தின்று விட்டு வந்தோமா என்று இருக்க வேண்டியது தானே.. நீங்கள் திமுகவினர் தானே, உங்களுக்கு இதெல்லாம் கூடவா சொல்லி தர வேண்டும்? கட்சியின் பேரை கேடுக்கிரீர்கலே... உங்களையும் மனிதர்கள் என்று நினைத்து இந்த கட்சியும் நோட்டீஸ் எல்லாம் அனுப்புகிறது. ஒரே தமாஷ் தான்.
Rate this:
16 members
2 members
20 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06-ஏப்-201317:51:49 IST Report Abuse
சு கனகராஜ் ரங்கராஜன் உங்க கருத்தை படித்து ரசித்து சிரித்தேன் ...
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
S..Santhanaraghavan - Kerala,இந்தியா
06-ஏப்-201314:10:56 IST Report Abuse
S..Santhanaraghavan நடந்தது கட்சி விழா அல்ல. ஸ்டாலினின் பிறந்த நாள் விழா. இதில் பங்கேற்பதும் பங்கேற்காததும் தனிப்பட்டவர்களின் விருப்பம். இதற்காக ஒரு நோட்டிசா? இதிலிருந்து ஒன்று தெரிகிறது. கட்சி கருணாநிதி குடும்பத்தில் சங்கமித்துவிட்டது. கருணாநிதி வீட்டில் காது குத்து முதல் எல்லா விழாக்களுக்கும் கட்சி காரர்கள் வரவேண்டும் இல்லையேல் நோடீஸ்தான்
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06-ஏப்-201317:52:57 IST Report Abuse
சு கனகராஜ் அந்த 16 பெரும் அன்பளிப்பயாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும் அன்று வந்த உண்டியலில் உங்களது பெயர்கள் மிஸ்ஸிங் அதாங்க நோட்டீசு விட்டாங்க ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
06-ஏப்-201313:27:16 IST Report Abuse
Rangarajan Pg தமிழகத்தில் அமைதி நிலவ அரசு ஆவன செய்ய வேண்டும் என்று வேறு ஒரு அறிக்கையில் கருணா கேட்டு கொண்டார். குடும்பத்தில் அமைதி நிலவ ஆவன செய்ய இந்த கருணா யாரை கேட்டு கொள்ள போகிறார். அஞ்சா நெஞ்சனையா, தளபதியையா? இருவரும் தங்கள் பரிவாரங்களுடன் போர் களத்தில் எதிரெதிரே நிற்கிறார்கள். அஞ்சா நெஞ்சன் எதற்கும் அஞ்ச போவதில்லை என்ற முடிவுடன் இருக்கிறார்.., தளபதி போருக்கு தயாராகி வெகு நாட்களாகி விட்டது. தோள்கள் தினவெடுத்து இருக்கிறார். இவர்களிடம் போர் களத்தில் சென்று கருணா மண்டியிட்டு சமாதான பிச்சை கேட்க கை ஏந்தி நிற்கிறார். அவர்கள் இருவரும் சமாதானமானார்களா,, போர் CANCEL ஆகியதா? கருணா இவர்களை சமாதானபடுத்தி விட்டு முழுதாக வீடு திரும்பினாரா,, பொறுத்திருந்து அடுத்த அறிக்கையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
06-ஏப்-201313:08:34 IST Report Abuse
LAX அண்ணனுக்கு பொறந்தநாள்னா மட்டும் யாரும் போகாம, பொய் சாக்கு சொல்லிக்கிட்டு டில்லில போயி ஒளிஞ்சுக்கறது. அப்புறம், கட்சித்தலைவர் பொறுப்பையும் ஓரவஞ்சமா கொடுத்ததும் இல்லாம, ஆசை சாக்லேட் குடுத்து கொண்டாடுற இவிங்க பொறந்த நாள்னா மட்டும் அவரு கலந்துக்கணுமா....? வீட்டுக்குள்ளயே இவ்வளோ பாரபட்சம்னா.... பாத்துக்கோங்க மக்களே....
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.