Advertisement
கூட்டுறவு சங்க தேர்தல்: சில இடங்களில் சலசலப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 ஏப்
2013
01:07
பதிவு செய்த நாள்
ஏப் 06,2013 00:00

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக, 410 கூட்டுறவு சங்கங்களுக்கு நேற்று நடந்த தேர்தலில் சில இடங்களை தவிர, மற்ற இடங்களில் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்து. திருவள்ளூரில் அ.தி.மு.க.,வினர் இடையே கோஷ்டி மோதலும், தேனியில் ஓட்டுப்பெட்டியில் மை ஊற்றிய சம்பவமும் நடந்தன.

தமிழகத்தில், 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்களுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் இதில்,4,325 சங்கங்களில் போட்டியில்லை. இதனால், இந்த சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வகையில், 45,253 நிர்வாக குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும், முதல் கட்டமாக, 410 சங்கங்களுக்கு தேர்தல் நேற்று நடந்தது. இச்சங்கங்களுக்கு, 3,979 நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவிக்கு, 8,002 பேர் போட்டியிட்டனர். சென்னையில் மட்டும், 12 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்தது. மொத்த ஓட்டுப்பதிவு குறித்து நேற்று இரவு, 10 மணி வரை அறிவிக்கப்படவில்லை.

கோஷ்டி மோதல்:



திருவள்ளூர் மாவட்டம், பெத்தராமாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் இரு கோஷ்டியாக, 24 பேர் போட்டியிட்டனர் . காலை ஓட்டுப்பதிவு துவங்கிய போது, பெரியராமாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க.,வினர், சின்ன நாகபூண்டியை சேர்ந்த வாக்காளர்களை ஓட்டுப்போடவிடாமல் தடுத்ததால், மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. சின்னநாகபூண்டியை சேர்ந்த வாக்காளர்கள், சோளிங்கர்-சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மை ஊற்றி ரகளை:



தேனியில் நடந்த அச்சக சேவை தொழிற்கூட்டுறவு சங்க தேர்தலில், அ.தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஓட்டுப்பதிவு நடந்தபோது, தேனி நகராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் அங்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். வேட்பாளர் ஐயப்பன், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மையை ஓட்டுப்பெட்டிக்குள் ஊற்றினார். போலீசார் ஐயப்பனை பிடித்து சென்றனர். மை ஊற்றப்பட்ட ஓட்டுப்பெட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குறைந்த அளவு மை மட்டுமே உள்ளே கொட்டியது தெரிய வந்ததால், ஓட்டுகள் பாதிக்காது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம்:



விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் ,11 இயக்குனர் பதவிக்கு, 48 பேர் கடந்த, 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன் தினம் இரவு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த, 11 பேர் தேர்வு செய்யப்பட்டதாக நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேட்பாளர்கள், 35 பேரும், பொதுமக்களும் கூட்டுறவு வங்கி முன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

202 பேர் கைது:



கோவை மாவட்ட, பெண்கள் ஆடை தயாரிப்பாளர் கூட்டுறவு குடிசைத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.,வினரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ஏழு பேர் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவின் போது, ஓட்டு இல்லாதவர்கள் பலர் சட்டவிரோதமாக ஓட்டுபோட அனுமதிக்கப்படுவதாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். ஓட்டுப் பதிவை நிறுத்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட சென்றனர். 202 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ள ஓட்டு புகார்:



நாகை மாவட்டம், ராமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு, 22 பேர் போட்யிட்டனர். நேற்று ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. மதியம், 12:00 மணியளவில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும், 11 வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஓட்டுச் சாவடியில் ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதாகவும், போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் கூறி, கீவளூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-நமது நிருபர் குழு-



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
06-ஏப்-201314:43:50 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் "கூட்டுறவே நாட்டுயர்வு ..நாட்டுயர்வே நம்முயர்வு "..ஸ்கூலில் படிச்சிருக்கிறேன்..அது இதுதானுங்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Saravana Kumar Guru Mohana - Kabul,ஆப்கானிஸ்தான்
06-ஏப்-201313:06:27 IST Report Abuse
Saravana Kumar Guru Mohana நல்லா அடிசிகிட்டு சாகட்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-ஏப்-201310:02:54 IST Report Abuse
kumaresan.m " பெயரில் மட்டுமே கூட்டுறவு ஆனால் வெளியில் நடப்பதோ ...அடி தடி உறவு ...ஆஹா பிரமாதம் ....ஏற்கனவே இந்த துறையின் கீழ் செயல்பட்ட பல பஞ்சு ஆலைகள் நிர்வாக திறமையின்மையால் மூடப்பட்டுள்ளது .....எனவே சங்க நிர்வாகிகள் இது போன்ற செயல்களை தவிர்த்து ....முன்னேற்றம் காண உழைக்க வேண்டும் "
Rate this:
0 members
15 members
2 members
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
06-ஏப்-201309:38:30 IST Report Abuse
saeikkilaar சில இடத்தில இல்லை பல இடத்தில காண முடிகிறது எதிர் கட்சிகளை ஒழித்து கட்டும் நடவடிக்கை தான் இது
Rate this:
2 members
0 members
55 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
06-ஏப்-201301:02:35 IST Report Abuse
Thangairaja எதிர்கட்சியினரோ மாற்றுகட்சியினரோ எட்டிக்கூட பார்க்காத தேர்தலில் அதிமுகவினர் இந்த சலசலப்பை காட்டும் போது எதிர்கட்சியினரின் புறக்கணிப்பு முடிவு நியாயமானது என்பதைமக்கள் உணர்ந்து பொதுத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும்.
Rate this:
14 members
0 members
112 members
Share this comment
raghu - bangalore,இந்தியா
06-ஏப்-201309:51:34 IST Report Abuse
raghuமிக சரியான கருத்து .ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஈடுபட்டலாதனே பிரச்னை....
Rate this:
0 members
0 members
61 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.