பத்தாம் வகுப்பு குளறுபடி விவகாரம் : அரசு முரண்பாடான நடவடிக்கை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (10)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டு, ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில், 63 விடைத்தாள்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த மாணவர்களுக்கு, மறுதேர்வு கிடையாது என்றும், தமிழ் முதல் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 221 ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருவதாக, கல்வி அமைச்சர் வைகை செல்வன் கூறிய கருத்து, முரண்பாடாக இருப்பதாக, தேர்வுத்துறையே கருதுகிறது.

தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறுகையில்,"செஞ்சி மாணவர்களுக்கும், மறுதேர்வு தேவையில்லை. ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களை, முதல் தாளுக்கு வழங்கிவிடலாம் என்று தான், அரசுக்கு பரிந்துரை செய்தோம். ஆனால், தற்போது, மறுதேர்வு குறித்து, பரிசீலனை செய்வதாக, அமைச்சர் தெரிவித்திருப்பது எங்களுக்குத் தெரியாது' என, தெரிவித்தன.இரு சம்பவங்களின் தன்மைகள்

வேறுபாடாக இருந்தாலும், பிரச்னையும், பாதிப்பும் ஒன்று தான். விருத்தாசலம் சம்பவத்தில், 63 விடைத்தாள்கள், முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக, அமைச்சர் கூறி உள்ளார். செஞ்சியில், 221 விடைத்தாள்கள், மாயமாகிவிட்டன. விடைத்தாள் சேதம் அடைந்தவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது; விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு, மறு தேர்வு என, அரசு கூறுவது, ஏற்கனவே நொந்துபோன மாணவர்களை, மேலும் நோகச் செய்துவிடும்.

மேலும், இருசம்பவங்களுமே, மொழிப்பாட தேர்வுகள் தான். விருத்தாசலம், தமிழ் தேர்வு சம்பந்தபட்டது. செஞ்சி சம்பவம், ஆங்கிலம் தேர்வு சம்பந்தபட்டது. இரு தேர்வுகளுமே, தலா இரு தாள்கள் கொண்ட தேர்வாகும். அப்படியிருக்கும்போது, இரு சம்பவங்களுக்கும், ஒரே தீர்வையே, அரசு அறிவிக்க வேண்டும் என்பது, எதிர்பார்ப்பாக உள்ளது.செஞ்சி மாணவர்களுக்கு, மீண்டும் நடத்தப்படும் தேர்வு, கடினமாக அமைந்தாலும், அல்லது மிக எளிதாக அமைந்தாலும், அது, சர்ச்சையைத் தான்

Advertisement

உருவாக்கும். எனவே, விருத்தாசலம் மாணவர்களுக்கு வழங்கிய நிவாரணத்தைப்போல், பாதிக்கப்பட்டுள்ள செஞ்சி மாணவர்கள், ஆங்கிலம் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களை, முதல் தாளுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது குறித்து, முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: விருத்தாசலம் சம்பவமும், செஞ்சி சம்பவமும் வெவ்வேறாக இருந்தாலும்,பாதிப்பு என்னவோ ஒன்று தான். ஒரு தரப்பிற்கு தேர்வு இல்லை என்றும், ஒரு தரப்பிற்கு தேர்வு என்றும் கூறுவது, நியாயமாக இருக்காது. ஏற்கனவே ஒரு தேர்வை சந்தித்து, விடைத்தாள் மாயமானதால், மாணவர்கள் பெரும் மன உளைச்சலில் இருப்பர். இந்த நேரத்தில், மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடத்துவது, அவர்களை பெரிதும் பாதிக்கச் செய்துவிடும்.எனவே, செஞ்சி மாணவர்களுக்கும், மறுதேர்வு கிடையாது என, அறிவிப்பதுடன், இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்களை, முதல் தாளுக்கு வழங்கி, பிரச்னைக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, தங்கம் தென்னரசு கூறினார்.

-நமது நிருபர்-
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-201321:10:54 IST Report Abuse
Pugazh V இதுவே தி மு க ஆட்சியாக இருந்திருந்தால்?? அப்பப்பா என்னவெல்லாம் போட்டு தாக்கியிருப்பார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அ தி மு க ஆட்சி என்பதால் ரொம்ப அடக்கி வாசிக்கிறார்கள். என்ன செய்வது, அவதூறு வழக்கு பாயுமே
Rate this:
Share this comment
Cancel
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-201319:21:53 IST Report Abuse
bala adapongappa yennamo padicha padippukku vela tharamari than soldringa, pasanga valiya vida pethavanga kanavu odanjathado vali yennanu melairukkravan mattumae arivan. dont worry students, unga kitta power irukku bayapadathinga..... adutha examku prepare pannunga da chellangalae.....
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
07-ஏப்-201313:11:29 IST Report Abuse
yila கல்வி அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யலாமே இதை விட வேறு பொறுப்பான வேலை அவருக்கு என்ன இருக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
cku - tpr,இந்தியா
06-ஏப்-201315:12:45 IST Report Abuse
cku பாவம் 10 ம் வகுப்பு மாணவர்கள் நேற்று கணக்கு தேர்விலும் குளறுபடி . பேப்பர் திருத்தும் வேலையாவது கொஞ்சம் நியாயமா நடக்கட்டும் .
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201318:39:02 IST Report Abuse
சு கனகராஜ் இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத படி அளவுக்கு அதிகமான குளறு படிகள் அந்த ஆண்டவன்தான் மாணவர்களை காப்பாற்ற வேண்டும் ...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201318:40:33 IST Report Abuse
சு கனகராஜ் மதிப்பெண் களையாவது ஒழுங்காக வழங்க சொல்லுங்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Priya Prabhu - Chennai,இந்தியா
06-ஏப்-201310:27:30 IST Report Abuse
Priya Prabhu ரொம்ப நல்ல இருக்கு உங்களின் இந்த செயலை யாராலும் செய்யவே முடியாது, உங்களை போல ஒரு மனிதர்களை பார்ப்பது ரொம்ப அரிது, நல்ல இருங்க பா.
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
06-ஏப்-201309:19:06 IST Report Abuse
Venkatesan Jayaraman ஆங்கிலம் முதல் தாளை விட நிறைய மாணவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் கடினமாக இருக்கும் ஒரு வேலை அந்த மாணவர்கள் ஆங்கிலம் முதல் தாள் நன்றாக எழுதிவிட்டு இரண்டாம் தாள் சரியாக எழுதாமல் 35 மதிப்பெண்ணிற்கு கீழ் எடுத்தால் கல்வி துறை அவர்களை பெயில் ஆகிவிடுமா என்பதை தெளிவு படுத்தவும் . இந்த தவறு மாணவர்களின் தவறு அல்ல கல்வி ,அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை ஆகியோரின் தவறு . எனவே கல்வித்துறை மற்றும் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடை தாள் காணமல் மற்றும் சேடம் அடைந்த மாணவ மாணவிகளுக்கு அரசு தலா 75% மதிப்பெண் கொடுத்து இந்த தவறுக்கு பரிகாரம் செய்தது போல் இருக்கும்
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
06-ஏப்-201314:50:12 IST Report Abuse
Baskaran Kasimaniஎல்லா மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் கொடுக்க வேண்டும் - அல்லது நஷ்ட ஈடாக மற்ற தாளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை இரண்டால் பெருக்கி வரும் மதிப்பெண் கொடுக்க வேண்டும் (நூறுக்கு மேல் வந்தால் 100 ஆக கொடுக்க வேண்டும்)...
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-ஏப்-201308:46:56 IST Report Abuse
kumaresan.m " இதில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது , கல்வி அமைச்சர் ஒருபுறம் மற்றும் கல்வி அதிகாரிகள் ஒருபுறம் இயங்குகிறார்கள் .....ஒரு வண்டியில் பூட்டிய இரு காளைகள் வெவ்வேறு திசையில் பயணம் செய்தால் வீடு போய் சேர முடியாது என்பதில் யாருக்கும் டௌட் இருக்க முடியாது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.