முதல் கட்ட கூட்டுறவு தேர்தலில் 171 சங்கங்களுக்கு போட்டியின்றி தேர்வு| Dinamalar

தமிழ்நாடு

முதல் கட்ட கூட்டுறவு தேர்தலில் 171 சங்கங்களுக்கு போட்டியின்றி தேர்வு

Added : ஏப் 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நடந்த முதல் கட்ட கூட்டுறவு தேர்தலில் 171 சங்கங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 12 கூட்டுறவு சங்க தேர்தலில் 65 சதவீத ஓட்டுப்பதிவானது.
முதல் கட்ட தேர்தலில் 183 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் இணைப்பதிவாளர் குருமூர்த்தி கட்டுப்பாட்டில் உள்ள 64 தொடக்க கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் சிக்கன நாணய சங்கங்களில், 11 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 53 கூட்டுறவு சங்கங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதர பால் கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி கூட்டுறவு, வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் 119ல் 118 சங்கங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றனர். 12 சங்கங்களுக்கு நடத்தப்பட்ட ஓட்டுப்பதிவில் 65 சதவீதம் பதிவானது. 171 சங்கங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மூன்று இடங்களில் நேற்று நடந்த முதல் கட்ட கூட்டுறவு சங்க தேர்தலில், 437 பேர் வாக்களித்தனர்.
ராஜபாளையம் தாலுகாவில் முதல் கட்டமாக 25 கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில், 22 இடங்களில் போட்டியின்றிதேர்வு நடந்தது. மீதமுள்ள மூன்று இடங்களில் நேற்று தேர்தல் நடந்தன.
இதில், சத்திரப்பட்டி திருவேங்கடசாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் 11 இயக்குனர்களுக்கு 15 பேர் போட்டியிட்டனர். இங்கு மொத்த ஓட்டுகள் 619, இதில் 352 பதிவாகின. ராஜபாளையம் நகராட்சி உயர்தர அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 11 இயக்குனர்களுக்கு 26 பேர் போட்டியிட்டனர். இங்கு உள்ள 77 மொத்த ஓட்டுகளில், 74 பதிவாகின. ராஜபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் 11 இயக்குனர்களுக்கு 22 பேர் போட்டியிட்டனர். தேர்தலுக்கு முன் சமரசமானதின்படி 11 பேர் மட்டும் நேற்று மாலை 4.30 மணிக்கு வாக்களித்தனர். இங்கு மொத்த ஓட்டுகள் 4575.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை