E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பரமக்குடியில் ஜனத்தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் தேவை: போலீஸ் பற்றாக்குறையால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
02:04

பரமக்குடி : பரமக்குடியில் போலீசார் பற்றாக்குறையால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் இரவு நேர ரோந்து பெயரளவில் உள்ளதால் திருட்டு அதிகரித்துள்ளது.
பரமக்குடி டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் பரமக்குடி, பரமக்குடி தாலுகா, எமனேஸ்வரம், நயினார்கோவில், சத்திரக்குடி, பார்த்திபனூர், அபிராமம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜனத்தொகைக்கு ஏற்ப நியமிக்கப்பட்ட போலீசாரே இப்போதும் உள்ளனர்.
இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் 227 போலீசார் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 192 பேர் மட்டுமே உள்ளனர். பரமக்குடி டவுன் 44க்கு 35, எமனேஸ்வரம் 27க்கு 22, பரமக்குடி தாலுகா 48க்கு 32, நயினார்கோவில் 20க்கு 16, பார்த்திபனூர் 26க்கு 23, அபிராமம் 29க்கு 21, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் 15க்கு 12, பரமக்குடி போக்குவரத்து பிரிவில் 15க்கு 14 போலீசாரே உள்ளனர்.
இருக்கும் போலீசாரும் அந்தந்த ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் பணியில் உள்ளார்களாக என்றால், கேள்விக்குறியே. காரணம் டி.ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி., மற்ற ஸ்டேஷன் அலுவல்களில் பல போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர கோர்ட், தபால் பணிக்கும் அனுப்பப்படுகின்றனர்.
மேலும் ஆண்டின் பாதி நாட்களில் மாவட்டம், இதர மாவட்ட விழாக்கள், பிரச்னை காரணமாக பாதுகாப்பு பணிக்கு சென்று விடுகின்றனர். பரமக்குடியில் இரவு நேர ரோந்து பணியில் மூன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பட்ட நிலையில், தற்போது ஒரு போலீஸ், ஊர்க்காவல் படை என ஒரு குழு மட்டுமே உள்ளது.
இவர்களும் ஐந்துமுனை ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஆற்றுப்பாலம் என குறிப்பிட்ட இடத்தில் மட்டும், ரோந்து சுற்றி சென்று விடுகின்றனர். பரமக்குடியில் பட்டப்பகலில் கொள்ளை, கொலை நடந்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டும். இதற்கு எஸ்.பி.,மயில்வாகனன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.