ஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு| Dinamalar

தமிழ்நாடு

ஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு

Added : ஏப் 06, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை : மதுரையில் ஏப்., 25ல் நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இரண்டு பருவ மழையும் பொய்த்து விட்டதால், கண்மாய்கள் மட்டுமின்றி, அணைகளும் வறண்டு விட்டன. குடிநீர் பிரச்னையைக் கூட சமாளிக்க முடியுமா என்ற நிலை உள்ளது. இந்நிலையில், ஏப்.,25ம் தேதி நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு விழாவிற்காக, தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.
பெரியாறு கிரெடிட்டில் உள்ள தண்ணீர், மதுரையின் குடிநீருக்கு மட்டுமே பயன்படும். இதன்படி ஜூன் இறுதி வரையான தேவைக்கு அங்கு தண்ணீர் உள்ளது. வைகை அணையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முறையே 2:3:7 என்ற வீதத்தில் தண்ணீர் பங்கீடு வழங்கப்படும்.
இந்நிலையில், ஏப்.,15 முதல் 4 நாட்களுக்கு, மேற்கூறிய மாவட்டங்களின் தேவைக்காக வைகையில் தண்ணீர் திறந்துவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என ஆலோசனை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தினரோ, சற்று தாமதமாக திறந்தால் தங்கள் தண்ணீர் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதினர்.
திறக்க வாய்ப்பு:
இதையடுத்து, அழகர் விழாவிற்கும், 3 மாவட்ட தண்ணீர் தேவைக்குமாக சேர்த்து, ஒரேநேரத்தில் தண்ணீர் திறக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். இதன்படி வைகை அணையில் இருந்து ஏப்., 20 முதல் 25ம் தேதி வரை 6 நாட்களுக்கு
தண்ணீர் திறக்கலாம் என அதிகாரிகள், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
வைகை அணையில்(உயரம் 71 அடி) நேற்றைய நிலவரப்படி 46 அடி நீர்மட்டம் உள்ளது. இதில் ஏப்., 20ம் தேதி நிலவரப்படி, 736 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும். இதில் ஆவியாதல் (30 மி.க.அ.,), இறுதிகட்ட ஸ்டோரேஜ் (43 மி.க.அ.,), அவசரத் தேவை (33 மி.க.அ.,) போக மீத இருப்பு 630 மி.க.அ., நீர்தான். இதில் 3 மாவட்டங்களுக்குமான விகிதாச்சாரப்படி, மதுரைக்கு 105 மி.க.அ., சிவகங்கைக்கு 157 மி.க.அ., ராமநாதபுரத்திற்கு 367 மி.க.அ., கிடைக்கும். .

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.R.Rajendran - bangalore ,இந்தியா
06-ஏப்-201310:58:50 IST Report Abuse
T.R.Rajendran ராமநாதபுரம் மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேரவேண்டுமென்றால் குறைந்தது 10 (பத்து) நாட்களாவது திறந்துவிடவேண்டும். மேலும் மானாமதுரை பரமக்குடி ஆகிய ஊர்களிலும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களும் நடைபெறுவதால் இரண்டு நாள் முன்னரே திறந்து அதாவது 18ம் தேதி திறந்து 27ம் தேதிவரை ஆற்றில் தண்ணீர் செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை