தயாநிதி பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

தமிழ்நாடு

தயாநிதி பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

Added : ஏப் 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை : தி.மு.க., முன்னாள் மத்தியமைச்சர் அழகிரி மகன் தயாநிதி பாஸ்போர்ட்டை, ஒப்படைக்க கீழ்கோர்ட்டிற்கு, உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட் கிளை, அவர் 2 லட்சம் ரூபாய் பிணைய பத்திரம் தாக்கல் செய்ய, நிபந்தனை விதித்தது.
தயாநிதி தாக்கல் செய்த மனு:
கிரானைட் வழக்கில், டிச.,10 ல் ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கியது. ஐகோர்ட் நிபந்தனைப்படி, மேலூர் கோர்ட்டில் பாஸ்பார்ட்டை ஒப்படைத்தேன். சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். பல தொழில்கள் தொடர்பாக, அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு பாஸ்போர்ட் அவசியம்.
விசாரணைக்கு அழைக்கும் போது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கத் தயார். வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வேன் என, அச்சப்படத் தேவையில்லை. பாஸ்போர்ட் இல்லாவிடில், வியாபார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படும். மேலூர் கோர்ட் வசம் உள்ள பாஸ்போர்ட்டை, திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும், என்றார்.
நீதிபதி கே.பி.கே.வாசுகி உத்தரவு: இக்கோர்ட் முன்ஜாமின் வழங்கிய போது, மனுதாரர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை; மனுதாரர், அவரது நம்பகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வெளிநாடு செல்லும் போதும், திரும்பும்போதும் முன்கூட்டியே, மேலூர் கோர்ட்டிற்கு தகவல் தெரிவிப்பதாக, உறுதியளித்துள்ளார்.
அதன்படி, சான்றொப்பம் பெறப்பட்ட பாஸ்போர்ட் நகலை, மேலூர் கோர்ட்டில், சமர்ப்பிக்க வேண்டும். 2 லட்சம் ரூபாய்க்கு பிணைய பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பின், மேலூர் கோர்ட் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம்.
கோர்ட் எப்போதெல்லாம் கோருகிறதோ, அப்போது பாஸ்போர்ட்டை மனுதாரர் ஒப்படைக்க வேண்டும். மனுதாரர் வெளிநாடு செல்லும்போதும், திரும்பும்போதும், 10 நாட்களுக்கு முன் பயண விபரத்தை வக்கீல் மூலம், மேலூர் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை