என் இனிய மூணாறு...சொல்கிறார் லோகநாதன்| Dinamalar

என் இனிய மூணாறு...சொல்கிறார் லோகநாதன்

Updated : மே 08, 2013 | Added : ஏப் 06, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் லோகநாதன். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக புகைப்படக் கலையை நேசிப்பவர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யானைகளை படம் எடுத்து வருபவர். பல ஆண்டுகாலமாக புகைப்பட பயிற்சி பள்ளி நடத்தி, இவரது பெயர் சொல்லும்படியாக பலரை உருவாக்கியுள்ளவர்.
இவருக்கு பிடித்த இடங்களில் கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறும் ஒன்றாகும்.
முத்தரப்புழா, நல்ல தண்ணி, குண்டலா ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பதால் இந்த இடத்திற்கு மூணாறு என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுவர். தேயிலை தயாரிப்பதே இங்கு பிரதான தொழில், ஆகவே எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டம்தான்.
1600 மீட்டர் உயரத்திற்கு, வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதையும், மேகம் தொட்டு கொஞ்சும் மலைமுகடுகளும், மனதிற்கு மிகவும் உற்சாகம் தரும். இங்குள்ள ஆனைமுடி சிகரம் ,மாட்டுப்பட்டி, ராஜமலையும், வரைஆடு போன்றவை உலக சுற்றுலா பயணிகளை ஈர்த்துவரும் விஷயங்களாகும்.

கேரளா மாநிலம் என்றாலும் இங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
இரண்டு நாள் கிடைத்தாலும் போதும், ஜீப்பை எடுத்துக் கொண்டு மூணாறு கிளம்பி விடுவார். மூணாறு நான் களைப்பாறவும், இளைப்பாறவும் தேர்ந்தெடுத்த அற்புதமான இடங்களில் ஒன்றாகும்.
இன்னமும் மாசு படாத, பசுமை குறையாத, குளுமையான, இனிமையான மலைப் பிரதேசங்களில் சிறப்பான இடம் வகிக்கும் மூணாறு பற்றி இவர் எடுத்துள்ள பல படங்கள் அற்புதமானவை.
கோவையில் இருந்து அதிகாலை கிளம்பி உடுமலையை தாண்டியதுமே இவருக்கும், இவரது கேமிராவிற்கும் குஷி பிறந்துவிடும். எங்கோயோ போகும் யானைகள் கூட தங்கள் வழித்தடத்தை மாற்றிக்கொண்டு, "நண்பர் லோகநாதன் வந்திருக்கிறாரோ' ! என்று ரோட்டு வழியாக வந்து, எட்டிப் பார்த்துவிட்டு செல்லுமாம், இதை உடன் செல்லும் நண்பர்கள் வேடிக்கையாக சொல்லுவார்கள், காரணம் அந்த அளவிற்கு இவர் யானைகளை நேசிக்கிறார், இவரை யானைகள் நேசிக்கின்றன.
நம்மிடம் உள்ள இயற்கையைப் போல வேறு எங்கும் இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவருக்கு வளர்பருவத்தில் இயற்கையைப் பற்றி, அதை எப்படி நேசிப்பது, எந்த இடத்தில் இருந்து மனதால் வாசிப்பது என்பதை சொல்லித்தர வேண்டும். அப்படி சொல்லித் தந்து அவர் மனதில் இயற்கை தொடர்பான விஷயங்கள் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் பதிவு செய்து விட்டால் போதும், பிறகு அவரைப்போல வீட்டையும், நாட்டையும் நேசிக்கும் நல்லவரை வேறு எங்கும் பார்க்க முடியாது.
இதற்காகவே இந்த கோடை விடுமுறையில், மாணவர்களுக்கு ஒரு கோடை கால பயிற்சி முகாமினை நடத்த எண்ணியுள்ளேன். மலையடிவாரத்தில் இயற்கையின் மடியில் நடைபெறும் இந்த முகாமில் மனநலம், உடல் நலம், இயற்கை உணவு உள்ளிட்ட பல ஆரோக்கியமான விஷயங்கள் இடம் பெறும். அத்துடன் அடிப்படை போட்டோகிராபியும் கற்றுக்கொள்ளலாம், ஒரு நாள் இயற்கை வளம் கொட்டிக்கிடக்கும் மூணாறையும் சுட்டிக்காட்டவும் எண்ணியுள்ளேன்.
அடுத்த தலைமுறையை எப்படியாவது இயற்கையின் காதலர்களாக்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்படும் இவரது எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9363210668.
முக்கிய குறிப்பு: லோகநாதன் எடுத்த மூணாறு தொடர்பான படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை "கிளிக்' செய்து பார்க்கவும்.


- எல்.முருகராஜ்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
09-மே-201312:03:11 IST Report Abuse
Hariganesan Sm நகர்ப்புற மாசு, பரபரப்புகளுக்கு இடையில் இப்படி மூனாறு மாதிரியான இடங்களுக்கு விசிட் அடிப்பது மனதுக்கு இதம் தருவது மட்டுமல்ல, லோகநாதன் சொல்லியது போல காலப்போக்கில் எல்லோரும் இயற்கையை நேசிக்கும் காதலர் ஆகா வேண்டும். அப்போது தான், வாழ்க்கையில் பரபரப்புகளுக்கு இடையில் வாழ்க்கையினை நகர்த்துவோருக்கு புத்துணர்வு ஏற்படும். ஹரி உ.palayam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை