கலெக்டரின் அறிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்| Dinamalar

கலெக்டரின் அறிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

Added : ஏப் 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: பஞ்சாபில், இளம் பெண் ஒருவரும், அவரது தந்தையும் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த, மாவட்ட கலெக்டரின் விசாரணை அறிக்கையை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. "இது குப்பையில் வீசியெறிய வேண்டிய வெற்று பேப்பர்' என, நீதிபதிகள் காட்டமாக கூறினர்.
பஞ்சாப், தரண் தரண் மாவட்டத்தை சேர்ந்தவர் காஷ்மீர் சிங். இவரது மகள் ஹர்பிந்தர் கவுர். இருவரையும், போலீசார், சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம், "டிவி' செய்தி சேனல்களில் ஒளிபரப்பானதால், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தாவேந்தர் சிங் மற்றும் சரஜ் சிங் ஆகிய இருவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா வாதிடுகையில், ""இச்சம்பவத்திற்கு காரணமான போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார். கோர்ட்டுக்கு உதவ, நியமிக்கப்பட்ட வழக்கறிஞரான, ஹரிஷ் சால்வே நடந்த சம்பவத்தை எடுத்துரைத்து கூறுகையில், ""இதுகுறித்து நடத்தப்பட்ட மாவட்ட கலெக்டர் விசாரணை அறிக்கையில், பல முரண்பாடுகள் உள்ளன,'' என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதிகள் கூறியதாவது: இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் விசாரணை அறிக்கையை பார்த்தோம். அதை குப்பைக்கு செல்ல வேண்டிய, பழைய பேப்பராகவே பார்க்கிறோம். இந்த சம்பவம், "டிவி'களில் அடிக்கடி ஒளிபரப்பானதை பார்த்த, பஞ்சாப் உயர் போலீஸ் அதிகாரிகள் என்ன செய்தனர். இந்த வழக்கு குறித்த, அடுத்த விசாரணையின் போது, பஞ்சாப் உயர்போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பு பற்றி பரிசீலிக்க உள்ளோம். இது தொடர்பான அடுத்த விசாரணை வரும், 11ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை