Advertisement
பணம் காக்கும் பூதங்களா "டாஸ்மாக்' ஊழியர்கள்?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2013
00:29
பதிவு செய்த நாள்
ஏப் 06,2013 23:48

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு சம்பாதித்து கொடுக்கும், "டாஸ்மாக்' கடைகள், தற்போது திருடர்களின் இலக்காக மாறி வருகின்றன. ஒரு பக்கம், தங்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக ஏங்கி நிற்கும் "டாஸ்மாக்' ஊழியர்கள், சமீப காலமாக, வசூல் பணத்தை பாதுகாத்து வங்கியில் செலுத்தும் வரை, உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, "டாஸ்மாக்' கடைகளில், தினமும் வசூலாகும் பணத்தை பாதுகாப்பதற்கு, பல வழிமுறைகளை, கடைகளின் மேற்பார்வையாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

திணறல்:



குறிப்பாக, புறநகர் பகுதிகளில், "லாக்கரோடு' பணத்தை, பூமிக்கடியில் புதைத்து வைத்து, பாதுகாக்கின்றனர் மேற்பார்வையாளர்கள். இதற்காக அவர்கள் தினமும் படாதபாடு படுகின்றனர்.நெடுஞ்சாலையில், ஊர் பகுதியில் உள்ள "டாஸ்மாக்' கடைகளிலேயே எளிதாக திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. தற்போது பல்வேறு பிரச்னைகளால் ஊருக்கு வெளியே, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எல்லாம், கடைகள் திறக்கப்படுகின்றன. அங்கெல்லாம் பணத்தை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.இதுகுறித்து, செங்குன்றம் பகுதியை சேர்ந்த "டாஸ்மாக்' கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், ""கடையில் முதல் நாளில் வசூலாகும் பணத்தை மறுநாள் பகலில் வங்கியில் செலுத்தி விடுகிறோம். அதற்கு பின் வசூலாகும் பணத்தை லாக்கரில் வைத்து பாதுகாக்கிறோம். இரும்பு கதவின் கீழ் மைய பகுதியில் பூட்டு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். லாக்கர் புதைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் பணம் திருடு அல்லது கொள்ளை அடிக்கப்பட்டால், இன்சூரன்ஸ் கிடைக்கும். அப்படியில்லாத நிலையில் இழப்பு ஏற்பட்டால், நாங்களே பொறுப்பு ஏற்க வேண்டி உள்ளது,'' என்றார்.அதேநேரம் சென்னையின் பிரதான பகுதிகளில், புறநகர் பகுதிகளை போன்ற திருட்டு பயம் இல்லை என்றாலும், வேறு விதமாக இந்த பிரச்னைகள் கையாளப்படுகின்றன.

அடிக்கடி மாற்றுவோம்:



இதுகுறித்து, கொடுங்கையூர், "டாஸ்மாக்' கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், ""முந்தைய நாள் வசூலை மறுநாள் கண்காணிப்பாளரே நேரில் வந்து பெற்று கொள்வார். இங்கு ஒரு நாளுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை வசூலாகும். பணத்தை வைக்க தனியே "லாக்கர்' வசதி இருக்கிறது,'' என்றார்.மேலும் அவர் கூறுகையில், ""இருந்தாலும், அதை அப்படியே வெளியே வைக்க மாட்டோம். பலருக்கு "டாஸ்மாக்'கில் பணம் திருடு போனது மட்டுமே தெரிகிறது. ஆனால் எத்தனை கடைகளில், திருடர்கள் புகுந்து வெறும் கையுடன் திரும்பினர் என்பது எங்களுக்கு தான் தெரியும். அந்தளவுக்கு பணத்தை பாதுகாத்து வைக்க வேண்டியுள்ளது,'' என்றார்.

பெயர் கூற விரும்பாத எம்.கே.பி., நகர் "டாஸ்மாக்' கடை பணியாளர் ஒருவர் கூறுகையில், ""வசூல் பணத்தை ஒரே இடத்தில் வைக்க மாட்டோம். அடிக்கடி மாற்றி விடுவோம். சென்னையை பொறுத்தவரை ஒரு சில பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பாதுகாப்புக்கு பிரச்னை இல்லை,'' என்றார்.

இருப்பினும், "டாஸ்மாக்' கடைகளுக்கு தொடர்ந்து திருட்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தினமும் பணம் வங்கியில் செலுத்தப்படும் முறை மாற்றப்பட வேண்டும் என்கிறார்,

"டாஸ்மாக்' பணியாளர் சி.ஐ.டி.யு., சங்க காஞ்சி மாவட்ட துணை தலைவர் நீலகண்டன். இதுகுறித்து, அவர் கூறுகையில்,""டாஸ்மாக்கில் தினமும் வசூலாகும் பணத்தை ஒரு இரவு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். முதல் நாள் வசூலான பணத்தை, மறுநாள் மதியம், 1:00 மணிக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஊழியர்கள், கடைக்கே வந்து பெற்று கொள்கின்றனர். இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்,'' என்றார்.

ஊழியர்களுக்கு அடி, உதை?



வங்கியில் இருந்து மாலை, 5:00 முதல் இரவு 7:00 மணிக்குள் வந்து பணத்தை பெற்று கொண்டால், அன்றைய தினம் வசூலாகும், 70 சதவீத பணம் பாதுகாப்பாக வங்கிக்கு சென்று விடும். இரவு, 7:00 மணிக்கு மேல் வசூலாகும், 30 சதவீத பணத்தை பாதுகாப்பதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்பது அவரது கருத்து.மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 296 கடைகளில் 175 கடைகளுக்கு மட்டுமே ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பணத்தை கடைக்கே சென்று வசூலிக்கிறது.மீதமுள்ள, 121 கடைகளில் ஊழியர்கள் தான் வங்கிக்கு சென்று பணம் செலுத்துகின்றனர். அதனால் பணம் இடையில் வழிப்பறி போவதற்கு வாய்ப்பிருக்கிறது.போலீசில் சென்று வழிப்பறி என, புகார் கொடுத்தாலும் அவர்கள் புகாரை ஏற்று கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. "நீயே பணத்தை எடுத்து கொண்டு வழிப்பறி நாடகமாடுகிறாயா?' என்று போலீசார் கூறுவதாக, புகாரும் எழுந்துள்ளது.அடி, உதை தாங்க முடியாமல், பல ஊழியர்கள், தங்கள் சொந்த பணத்தை கட்டும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறும், நீலகண்டன், வங்கியில் பணம் கட்டும் முறையை மாற்றி அமைத்தால், இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார்.அரசு இதை பரிசீலித்து, தங்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் என்பதே, "டாஸ்மாக்' ஊழியர்களின் எதிர்பார்ப்பு.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
08-ஏப்-201311:04:53 IST Report Abuse
mirudan டாஸ்மாக் ஊழியர்கள் வருமான வரி கட்டாத லட்சாதிபதிகள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
K.Baskar - Tiruvallur,இந்தியா
07-ஏப்-201315:15:19 IST Report Abuse
K.Baskar டாஸ்மாக்கை நவீனமயப்படுட்ட வேண்டும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தலாம். ஏன் என்றால் தமிழகத்தின் கருவூலமே டாஸ்மாக்தான்.
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஏப்-201315:07:47 IST Report Abuse
g.s,rajan பேசாம பேங்க் அக்கௌண்ட் இருக்குறவங்க மட்டும் தான் மது குடிக்கணும் அப்படின்னு சட்டம் கொண்டு வந்துரலாம் குடிக்கிறவங்க "செக்" கொடுத்து மது வாங்கிக்கட்டும் .பணமா வாங்கறதுதானே திருட்டு , உள்ளிட்ட பிரச்சனைக்கு வழி வகுக்குது . அரசு கவனிக்குமா ?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
arivu - Ras al khaimah,இந்தியா
07-ஏப்-201314:53:23 IST Report Abuse
arivu நம்ம பணம்..நாம எடுக்கறோம்..இது எப்படி திருடாகும்??
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
K.Baskar - Tiruvallur,இந்தியா
07-ஏப்-201314:35:48 IST Report Abuse
K.Baskar கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் சரக்கு சப்ளை செய்தால் பணம் கையாளுவதை தவிர்க்கலாம். அட்வான்ஸ் சிஸ்டம் டாஸ்மாக்கில் வரக்கூடாத என்ன? இது பாதுகாப்பான முறை.
Rate this:
1 members
1 members
2 members
Share this comment
Cancel
balasubramanian - chennai,இந்தியா
07-ஏப்-201311:17:31 IST Report Abuse
balasubramanian ஒரு பாட்டிலுக்கு 5 ருபாய் எக்ஸ்ட்ரா மேலும் தண்ணீர் கலந்து விற்று ஒரு நாளைக்கு 5 ஆயிரம் இல்லாமல் வீட்டுக்கு செல்வதில்லை .ஒவ்வொரு டாஸ்மாக் விற்பனையாலருடைய வருமானம் டாஸ்மாக் இன் அரசின் வருமானத்துக்கு சமம்.
Rate this:
1 members
1 members
6 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07-ஏப்-201311:15:30 IST Report Abuse
kumaresan.m " இனி அடுத்த மாதம் முதல் நம் அரசாங்கம் ஒரு மது கடைக்கு ஒரு காவலர் என்று நியமித்தாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை " ஏனெனில் அரசாங்கத்தின் கற்பக விருட்சம் மற்றும் அமுத சுரபி டாஸ்மாக் கடைகள் ......டாஸ்மாக் கடை பணம் திருடு போவதை பற்றி கவலை படும் ஊழியர்கள் .....குடிமகன்களின் பணம் திருடுபோவதை பற்றி வாய் திறக்க வில்லை? (that mean கு .மு மற்றும் கு .பி ) வாடிக்கையாளர்களை காப்பது அரசு மற்றும் ஊழியர்களின் வேலை அல்லவா ?
Rate this:
0 members
1 members
6 members
Share this comment
Cancel
balasubramanian - chennai,இந்தியா
07-ஏப்-201310:58:04 IST Report Abuse
balasubramanian டாஸ்மாக் ஊழியர்களுக்கு இன்னைய தேதிக்கு அரசாங்க ஊழியர்களுக்கு ஏன் CEOLLECTOR I விட அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள் .சம்பளம் எல்லாம் அவர்களுக்கு ஒரு மேட்டரே இல்ல.ஒரு பாட்டிலுக்கு 5 ருபாய் எக்ஸ்ட்ரா அண்ட் வாட்டர் மிக்ஸ்யங் என்று சம குத்துதான் .
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
07-ஏப்-201309:17:02 IST Report Abuse
Samy Chinnathambi பணம் இருக்கிற இடத்தில தானேங்க திருட முடியும். இன்னைய தேதிக்கு நிறைய திருடணும்னா ஒன்னு டாஸ்மாக் கடைக்கு போகணும் இல்ல சிஐடி நகர், ராஜா அண்ணாமலைபுரம், சிறுதாவூர், கொடநாடு போன்ற இடங்களுக்கு போக வேண்டும்....திருடர்களுக்கே ரிஸ்க் தான். ஏன்னா திருடன் கிட்டே கூட திருடும் கூட்டங்கள் அங்கே இருக்கு............
Rate this:
0 members
1 members
22 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
07-ஏப்-201301:42:49 IST Report Abuse
Thangairaja படித்த இளைஞர்களை சாராயம் விற்க அனுப்பியபோதே இவர்கள் வண்டவாளம் புரிந்து விட்டது...இதை யார் ஆதரித்தாலும் அவர்களும் அதே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான்........
Rate this:
0 members
1 members
10 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
07-ஏப்-201305:34:55 IST Report Abuse
S.Govindarajan.முதன் முதலில்குடியை அறிமுகப் படுத்திய கூட்டமும் இதில் அடங்கும்....
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.