E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அவங்களே பேசறாங்கப்பா... எதிர்க்கட்சியினர் ஆதங்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 ஏப்
2013
02:11
பதிவு செய்த நாள்
ஏப் 06,2013 23:50

விவாதங்களில், எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுகின்றனர். இவற்றுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். இந்த விவாதங்களில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை பேச விடாமல், அமைச்சர்களே, முழு நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர் என, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

20 நிமிடம் :



மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசுவதற்கு, சபாநாயகரிடம், பல எம்.எல்.ஏ.,க்கள் அனுமதி கோருகின்றனர். சபையின், நேரத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு கட்சிக்கு ஒருவருக்கு, சபாநாயகர் அனுமதி அளிக்கிறார். ஒரு கட்சி சார்பில் பேசும் எம்.எல்.ஏ., 20 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்படுகிறார்.

இதுகுறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., ஒருவர் கூறுகையில், ""20 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்படுகிறோம். ஒரு கருத்தை சொல்லிவிட்டால், அமைச்சர் பதிலளிக்க எழுந்து விடுகிறார். அவர் பேசி முடியும் வரை, எம்.எல்.ஏ., பேச முடியாது. எங்களுக்கு, ஒதுக்கப்படும், 20 நிமிடத்தில், 10 நிமிடத்துக்கு மேல், அமைச்சர்களே ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால், முழு கருத்தையும் சொல்ல நேரம் கிடைப்பதில்லை,'' என்றார்.

அமைச்சர்கள் விவாதத்தின் போது, எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்களுக்கு, உடனுக்குடன் பதில் அளிக்கும் அமைச்சர்கள், விவாதம் முடிந்து, அவர்களது பதிலுரையிலும் பல மணி நேரம் பேசுகின்றனர். உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை மீது, அமைச்சர் முனுசாமி இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பதிலுரையாகப் பேசினார். சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் மோகன், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, 1:30 மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியுள்ளார். உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், ஒரு மணி நேரம் பதிலுரை வழங்கினார்.ஒரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் பதிலுரைக்கு ஒதுக்கப்படும், குறைந்த பட்ச நேரமான, 3 மணி நேரத்தில், 2 மணி நேரத்துக்கும் மேலாக, அமைச்சர்களே பேசுகின்றனர் என, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.

துணை கேள்வி :



இதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ஒருவர் கூறுகையில், ""கேள்வி நேரத்தின் போது, கேள்விகளை குறைத்துக் கொண்டு, துணை கேள்விகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஒரு முதன்மை கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு, 5 முதல் 10 துணைக் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவர். தற்போது, முதன்மை கேள்விக்கு, ஒரு துணை கேள்வியைக் கேட்கவே அனுமதிக்கப்படுகிறோம். இதனால், தொகுதி மற்றும் பொது பிரச்னைகள் பற்றி, அரசின் கவனத்தை ஈர்க்க போதிய வாய்ப்பு இல்லை,'' என்றார்.

பொறுப்பு அதிகம் :



எதிர்க்கட்சிகளின் ஆதங்கம் பற்றி, அ.தி.மு.க., மூத்த எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: எதிர்க்கட்சியினர், ஒரு பிரச்னை பற்றி நேர்மையான கேள்விகளை கேட்க வேண்டும். அவர்கள், உள்நோக்கத்துடன், அரசின் மீது குற்றம் சுமத்தும் வகையில், கேள்விகளை கேட்கின்றனர். இதற்கு, உடனடியாக பதில் அளிக்க வேண்டிய கட்டாயம், அமைச்சர்களுக்கு ஏற்படுகிறது. இதனால், கூடுதல் பொறுப்பு அமைச்சர்களுக்கு இருக்கிறது. அமைச்சர்கள் கூடுதல் நேரம் பேசுகின்றனர் என, கூறுவதில் அர்த்தமில்லை. எந்த கட்சியாக இருந்தாலும், அதன் எம்.எல்.ஏ.,க்களுக்கு, போதிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆதங்கப்படுவதற்கு ஒன்றுமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (38)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
10-ஏப்-201303:57:16 IST Report Abuse
Skv இதற்க்கு தீர்வு நம்மகைலேதான் இருக்கு . தேர்தலில் ஓட்டு போடறச்ச திமுக அதிமுக ரெண்டுக்கும் பொடக்கூடாது. மனதில் தீர்மானம் செஞ்சுண்டு இந்த தரம் நிச்சயம் இந்த ரெண்டு க்கும் ஓட்டு போடமாட்டோம்னு போகணும். அபொத்தான் நமக்கு தீர்வு கிடைக்கும் .எவன் ஓசிலே எதை தந்தாலும் வாங்காதிங்க கைநீட்டி வாங்கினால்தானே குத்த உணர்ச்சி வரும் வாங்காதிங்க ,காங்கிரெஸ் பணம் பண்ணும் பெருச்சாளிகளே ஒரு புது கச்சிய கொண்டுவாங்க நிச்சயம் விமோசனம் கிட்டும் மக்களாகிய நம்மகைலே இருக்கு ,வேலை இல்லாத இளைய சமுதாயம் டாஸ்மாக் போகாதின்ங்க ஒன்றாக சேர்ந்து நாட்டின் நலனே என்று ஒரு கொள்கையுடன் செயல் படுங்கள் 60+எல்லாம் மந்திரி ஆனால் நோ யூச் பிகாஸ் வயோதிகம் வந்துருதுங்கோ . 70+ எல்லாம் ரெஸ்ட் எடுக்கவே லாயக்கு , அனால் நம்பால் தேசத்துலே கிசடுகளுக்கே முக்கியம் தராக பிகாஸ் அதுகள் தன சம்பளம் வாங்கினு உலகம் சுத்துராக இளையவர்களே நீங்க நெறைய படிக்கிரீக ஒரு தரமான ஆபிசையே நிர்வாகம் செய்யும் திறனும் இருக்கு அதனால் நீங்கள் பதவிக்கு வந்தால் நிச்சயம் நாடு உருப்பட்டு நல்லநிலைக்கு வரும் என்பதுலே சந்தேகமே இல்லே ஆல் தி பெஸ்ட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamilan - Bangalore,இந்தியா
07-ஏப்-201314:56:20 IST Report Abuse
Tamilan பாராட்றது மாதிரியே மக்களுடைய பிரச்சினையை எடுத்து சொல்லுங்க.
Rate this:
2 members
1 members
6 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201316:52:10 IST Report Abuse
சு கனகராஜ் பழைய காலத்துல புலவர்கள் பாட்டு பாடி பரிசு தொகை வசூலித்து கொண்டு போயிதான் அன்றைய உணவை உண்பார்கள் அது போல செய்ய சொல்கிறீர்களா ?...
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஏப்-201314:55:35 IST Report Abuse
g.s,rajan நீங்க போன ஆட்சியில எதிர்க்கட்சிகளை ,மக்களின் பிரச்சனைகளை சட்ட சபையில் பாராளுமன்றத்தில் பேச விட்டீங்களா ?இல்லையே எல்லாத்தையும் வெளிய துரத்தி விட்டீங்களே உங்களுக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா ? ஜி/எஸ்/ராஜன் சென்னை .
Rate this:
14 members
1 members
6 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201316:53:20 IST Report Abuse
சு கனகராஜ் அந்தந்த தொகுதி நிலவரத்தை வஞ்ச புகழ்ச்சி அணி பாடல் மூலம் பாடி முதல்வருக்கு தெரிய படுத்தலாமே ஒரே லட்ட ரெண்டு பெரும் சாப்பிடலாமே கண்ணா ...
Rate this:
2 members
1 members
3 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
07-ஏப்-201314:23:51 IST Report Abuse
amukkusaamy டிவி சீரியல்களை விட சட்டசபை நிகழ்ச்சிகளை என்று மக்கள் ஆர்வத்துடன் பார்கின்றனரோ, அன்று இந்த நிலைமை மாறும். ஆனாலும், அதீத பெரும்பான்மை அதிமுக வை தன் நிலை மறந்து ஆடவைக்கிறதாகத்தான் தோனுகிறது. ஆளும் கட்சி அடக்கி வாசிக்க வேண்டும். அம்மாவிற்கு இதை சொல்லப்போவது யார்?
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-201313:55:04 IST Report Abuse
Pugazh V அதே தான் இங்கேயும் என்றால் அவர்களே பரவாயில்லையே, இவர்களை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? அவர்கள் ஆட்சியாவது நன்றாக இருந்தது. கரண்ட் கட்டே இல்லை.
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201317:02:41 IST Report Abuse
சு கனகராஜ் கடந்த திமுகவில் கரண்ட் கட் இல்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மரிக்காதீர்கள் முதலி கட் ஐ அறிமுக படுத்திவர் ஆற்காட்டார் தான் அதனால் தான் தேர்தலில் கூட நிற்காமல் பயந்து ஒதுங்கினார் ...
Rate this:
8 members
2 members
3 members
Share this comment
Cancel
Suhail .. - trichy,இந்தியா
07-ஏப்-201312:26:04 IST Report Abuse
Suhail .. இன்னும் முனு வருஷம் எப்டியாச்சும் நாக்க கடிச்சுட்டு ஓடிட போதும் , அதுக்கு அப்புறம் நமக்கு விடுதல கிடைச்சுடும்
Rate this:
2 members
0 members
28 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07-ஏப்-201311:23:11 IST Report Abuse
kumaresan.m " இதை அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாதுங்க .....நீண்ட நேரம் பேச்சு என்பது அரசியல்வாதிகளின் பழக்க தோஷம் " சட்ட சபையை அரசியல் மேடை என்று நினைத்தால் இப்படிதான் ஆகும் "
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201317:04:41 IST Report Abuse
சு கனகராஜ் எல்லா ஆளுங்கட்சிதான் அதிக நேரம் பேசுவார்கள் இது எப்போதும் எல்லா காலத்திலும் நடப்பது தானே கடந்த ஆட்சி மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் இப்படிதான் நடக்கும் ...
Rate this:
6 members
0 members
1 members
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
07-ஏப்-201311:18:11 IST Report Abuse
KMP தனிப் பெரும்பான்மையின் தீமை தான் இது ....
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201316:50:56 IST Report Abuse
சு கனகராஜ் அப்படியானால் எப்பொழுதும் மைனாரிட்டி திமுகவை போல ஆள வேண்டும் என்று சொல்கிறீர்களா ?...
Rate this:
10 members
0 members
0 members
Share this comment
KMP - SIVAKASI ,இந்தியா
08-ஏப்-201310:25:01 IST Report Abuse
KMPஇல்லை,,, தனிப் பெரும்பான்மையின் தீமை இது ... அடுத்தவர்களுக்கு சபையில் பேச வாய்ப்பு இல்லை என்கிறார்களே அதனால் அப்படி சொன்னேன் ,,...
Rate this:
10 members
0 members
0 members
Share this comment
Cancel
R.Angappan - chennai,இந்தியா
07-ஏப்-201310:11:53 IST Report Abuse
R.Angappan நாம் தொகுதியல் ஒரு ஐ ஐ இடி ஸ்டுடென்ட் அல்லது நேர்மியான எம் எல் எ வை யா செலக்ட் பண்ணினோம் இந்திய நாடு என்றைக்கு ஜனநாயகத்திற்கு வாக்களிகிறதோ அன்று தான் நீ நினைக்கும் ஆட்சி நடக்கும் அதற்கு இன்னும் ஒருவரும் பிரரக்கமலா இருப்பார் பார்க்கலாம் .,,
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Amal Anandan - chennai,இந்தியா
07-ஏப்-201311:46:05 IST Report Abuse
Amal Anandanஐ ஐ ஐ டி மாணவர்கள் எல்லோரும் நல்லவர்கள் நல்லதே செய்வார்கள் என்பதும் சரியல்ல என்பது என் கருத்து....
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
07-ஏப்-201309:28:07 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இதை ஒன்றும் செய்ய முடியாது... திமுக ஆட்சியிலும் இப்படி தான் நடந்தது.. அதிமுக ஆட்சியிலும் இப்படி தான் நடக்கிறது.. தேமுதிக MLA சரளமாக பேச மாட்டேன் என்கின்றனர் , அது ஏன் என்றே தெரியவில்லை, பார்லியில் வைகோ பேச்சினை பார்த்திருந்தால் நன்கு தெரியும்.. இடைவெளி விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினையை அடுக்கி கொண்டே பேசிக்கொண்டு இருக்க வேண்டும்.. அப்போது தான் ஆளுங்கட்சி குறுக்கிட முடியாது.. தேமுதிக MLA -க்கள் இங்கே ஒரு வார்த்தை பேசினால் 20 நொடிகள் கழித்து தான் அடுத்த வார்த்தையையே பேசுகின்றனர்.. இது கட்சி பொது கூட்டம் அல்ல , சட்டமன்றம்.. குறிப்பிட்ட நேரத்தில் நமது அனைத்து பிரச்சினைகளையும் பதிவு செய்தாக வேண்டும்... அதற்கு நேர மேலாண்மை முக்கியம்.. சின்ன சின்ன சாதுர்யங்களும் மிக முக்கியம்.. பேசவிட வில்லை , பேசவிடவில்லை என்று சொல்ல கூடாது... உனது உரிமையை நீ தான் தட்டி கேட்டு பெற வேண்டும்.. எதுவுமே போராடினால் தான் கிடைக்கும்.. :)
Rate this:
72 members
3 members
31 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஏப்-201312:28:32 IST Report Abuse
தமிழ்வேல் // இதை ஒன்றும் செய்ய முடியாது... திமுக ஆட்சியிலும் இப்படி தான் நடந்தது.. அதிமுக ஆட்சியிலும் இப்படி தான் நடக்கிறது.. // அப்போ பரவா இல்லைன்னு சொல்றீங்களா ? எதிர்கட்சியினர் சரளமாக பேசாவிட்டாலும் குறுக்கிடக்கூடாது.. சாபாநாயகர்ன்னு ஒருத்தர் எதுக்கு இருக்கார் ?...
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
07-ஏப்-201315:23:35 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போட தான்.... அன்று ஆவுடையப்பன் செய்ததை இன்று தனபால் செய்கிறார் அவ்ளோதான் தோழரே.. சபாநாயகரை என்று கட்சி சார்பில்லாமல் நியமிக்கிறோமோ , அன்று தான் இதற்கு ஒரு வழி பிறக்கும்.....
Rate this:
12 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.