Is Tamil Nadu Congress split? | தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைகிறதா? | Dinamalar
Advertisement
தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைகிறதா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

டில்லி மேலிடத்தின் பாரபட்ச நடவடிக்கை, இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் த.மா.கா.,:அப்பிரச்னைகளை மையப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை, இரண்டாக உடைக்க, மத்திய அமைச்சர் வாசனும், அவருடைய ஆதரவாளர்களும் தயாராகியுள்ளனர் என்றும், லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதம் முன், மீண்டும், த.மா.கா., உதயமாகும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆறு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் துவக்கப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுதோல்வி:


தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிலைப்படுத்தி, லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழர்களின், நல்வாழ்வு மீது, காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு, பிரதானமாக எழுந்துள்ளது. சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் அடைந்த படுதோல்வி, லோக்சபா தேர்தலிலும் தொடரும் என்ற பீதி, காங்கிரஸ் கட்சியினருக்கு உருவாகியுள்ளது.மத்திய அமைச்சர் வாசனின் தீவிர ஆதரவாளரான ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டாகியும், மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட, டில்லி மேலிடம், சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இரு முறை நடந்த, இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற யுவராஜா, "புதிய உறுப்பினர்களை சேர்க்கவில்லை. இணைய தளம் மூலம், உறுப்பினர்களை சேர்க்கவில்லை, கோஷ்டிகளை வளர்க்கிறார்' என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரது பதவி பறிக்கப்பட்டது.அவருக்கு, மீண்டும் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என, டில்லி மேலிட தலைவர்களிடம் வாசன் வலியுறுத்தியும், அவரது கோரிக்கை எடுபடவில்லை.

பலன் கிடைக்கவில்லை:


மூப்பனார் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா., இணைக்கப்பட்ட பின், வாசனுக்கு மட்டும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் அடைந்தாரே தவிர, அவரது ஆதரவாளர்களுக்கும், பெரும்பான்மையான தொண்டர்களுக்கும், எந்த பலனும் கிடைக்கவில்லை.தி.மு.க., கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி கழற்றி விடப்பட்டுள்ளதால், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டியிட்டால், ஒரு "சீட்'டில் கூட, காங்கிரஸ் வெற்றி பெறாது என்ற பரவலான பேச்சும் வாசனை, தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க வைத்துள்ளது.

சோவுடன் ஆலோசனை:


த.மா.கா., துவக்குவதற்கு பின்னணியில் செயல்பட்ட, "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமியை, நான்கு முறை வாசன் சந்தித்து பேசியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்னைக்கு, வாசன் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், அவரது அணிக்கு, தமிழக மக்களின் ஆதரவு கிடைக்கும் என, வாசன் நம்புகிறார். அதனால் தான், பிரதமர் மன்மோகன் சிங்கை, வாசன் சந்தித்து, இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வாசன் வலியுறுத்தினார்.இலங்கை விளையாட்டு வீரர்கள், தமிழகத்திற்கு வரக்கூடாது என, முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக் கூடாது என, சட்டசபையில் தீர்மானம், மத்திய அரசின் மண்ணெண்ணெய் அளவு, தமிழகத்திற்கு குறைவாக தரப்படுகிறது என, முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு ஆகிய நடவடிக்கைகளை, வாசன் வரவேற்றுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்னைக்காக, இதுவரை சோனியாவை, ஏழு முறையும், ராகுலை, நான்கு முறையும், வாசன் சந்தித்து பேசியும், தன் கோரிக்கை நிறைவேறவில்லை என்ற ஆதங்கம், வாசனுக்கு நீறு பூத்த நெருப்பாக கனன்று வருகிறது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க.,வுக்கு "செக்' :


லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றால், அ.தி.மு.க., அணியில், ம,தி.மு.க., இடம் பெறும். தே.மு.தி.க., ஓட்டு வங்கியை, ம.தி.மு.க., ஓட்டு வங்கி சமப்படுத்த முடியாது. எனவே, தமிழக காங்கிரசை, வாசன் தலைமையில் உடைக்கும் போது, நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள், ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் காமராஜர், மூப்பனார் மீது கொண்டுள்ள அபிமானிகளின் ஓட்டுக்கள், தமிழக இளைஞர் காங்கிரஸ், தமிழக மாணவர் காங்கிரசின், 80 சதவீதம் ஓட்டுக்கள், வாசன் அணிக்கு கிடைக்கும். எனவே தே.மு.தி.க., ஓட்டுக்களை சரிக்கட்ட, வாசன் அணி ஓட்டுக்கள் பயன்படும் என அ.தி.மு.க., கருதுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (111)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh M - Karur,இந்தியா
11-ஏப்-201308:00:50 IST Report Abuse
Rajesh M இன்றைய அரசியலில் நேர்மையானவர் அரிது , அரிது, அரிது, , தலைவர் ஜி . கே. வாசன் அவர்கள் வாழும் காமராஜராக இன்று அரசியலில் இருந்து வருகிறார் , தயவு செய்து அவரை புரிந்துகொள்ளாமல் விமர்சனம் எழுதாதீர்கள் , அவரை போல் ஒரு தன்னலமில்லாத தலைவர் இன்று நமக்கு கிடைத்து இருப்பது தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு வரபிரசாதம் , அவருடன் நெருங்கி பழகி வருபவன் என்ற வகையில் உண்மையுடன் சொல்கிறேன் , தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர் , தனது ஆதரவாளர் என்பதற்காக தவறான எந்த பரிந்தரை கூட செய்திராத உன்னதமானவர் , தூய்மையான தலைவர் காமராஜர் தாம் செய்த நலத்திட்டங்களை மக்களிடம் விளம்பரம் செய்திட விரும்பவில்லை , அதனால் அவரி பற்றி மக்களுக்கு முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை , அதன் விளைவு இன்று தமிழகம் அனுபவிக்கிறது , காமராஜரை போல் தூய்மை தலைவர் ஜி.கே .வாசன் அவர்கள் , அவர்களோடு பழகி நான் கண்டதினால் சொல்கிறேன் . ப்ளீஸ் ....... அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் கருத்து பரிமாற்றம் செய்யாதிர்கள் , நல்ல தலைவரை முடிந்தால் தமிழகம் பெற்றிட உதவுங்கள் ....... நிச்சயம் எதிர்கால சந்ததிகள் நமக்கு நன்றி சொல்லும் அன்புடன் .... கரூர் எம். ராஜேஷ் முன்னால் தலைவர் - கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னால் மாநில செயலாளர் - தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னால் மாவட்ட தலைமை அமைப்பாளர் - கரூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் முன்னால் துணை தலைவர் - திருச்சி விற்பனை குழு - தமிழ்நாடு அரசு கரூர் மாவட்ட உறுப்பினர் - புதுபிக்க தக்கவல்ல எரிசக்தி துறை - இந்திய அரசு மாநில அமைப்பு செயலாளர் - தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் செல் 9486669100
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel
Anwar ali - havana,கியூபா
08-ஏப்-201318:44:32 IST Report Abuse
Anwar ali தமிழகத்தில் முதலில் காங்கிரஸ் இருக்கிறதா ? இல்லாத ஒன்னு உடஞ்சா என்ன இருந்தா என்ன ?
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
itashokkumar - Trichy,இந்தியா
10-ஏப்-201314:01:11 IST Report Abuse
itashokkumarகாங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் யா ஆதரிக்கும் மக்களும் இருக்கிறார்கள், காங்கிரஸ் தலைவர்கள் தான் இல்லை....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
08-ஏப்-201316:57:08 IST Report Abuse
Raju Rangaraj ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் ஒரு கூட்டம் காங்கிரசில் இருக்கிறதுஅவர் கண் அசைத்தால் வாசனைவிட பலமான ஒரு கூட்டம் வெளியேற காத்திருக்கிறது என்று கேள்வி பட்டேன் யுவராசுக்காக இன்றும் மேலிடத்தை கேட்டு கொண்டே இருக்கிறார்பலன் இல்லை அந்த கோபத்தில் இன்னும் உறுமிக்கொண்டு இருக்கிறார்காலம் கனிந்தால் பெரியாரின் பேரன் கருணாநிதியின் மடியில் தலை வைத்து படுக்கும் காலம் வரபோகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Anand - Madurai,இந்தியா
08-ஏப்-201300:08:41 IST Report Abuse
Anand காங்கிரஸ் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டே தமிழ் மாநில காங்கிரசை உருவாக்க நினைக்குது. வாசன் தமிழ்நாடுக்குனு என்ன தான் பண்ணி இருகார்???
Rate this:
2 members
2 members
2 members
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
07-ஏப்-201318:55:52 IST Report Abuse
Sri Gugan // இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் 180 - 190 தொகுதிகள் காங்கிரஸ் மட்டும் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது// அட இங்கேயும் ஒரு பேனிபிரசாத்வர்மா
Rate this:
4 members
0 members
21 members
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
07-ஏப்-201318:43:41 IST Report Abuse
Sri Gugan டிரௌசர்தாஸ் எல்லாம் யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லும்போது,அதிமுக மட்டும் தனியாளாக தேர்தலை சந்திக்க பயப்படுவதேன்?
Rate this:
5 members
0 members
48 members
Share this comment
Cancel
lpmuthukumar - Jakartha,இந்தோனேசியா
07-ஏப்-201317:51:52 IST Report Abuse
lpmuthukumar அனைத்து தமிழனும் சொல்லும் ஒரே வார்த்தை கடந்த தேர்தலில் திரு. வைகோ தோல்வி அடைய செய்த மக்களை மன்னிக்க விரும்பவில்லை .....
Rate this:
47 members
0 members
32 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-201314:18:40 IST Report Abuse
Pugazh V கலைஞர் கழட்டி விட்டு விட்டார். ஒன்றிரண்டு எம் பி சீட்டுகளாவது தேறுமா என்று பார்க்கத் தான் இப்படி பிரிந்து வந்து சோ மூலம் அ தி மு க வுடன் ஒட்டிக் கொள்ளப் பார்க்கிறார், பாவம். மோசமான ஆட்சியால் பலவீனப்பட்ட அ தி மு க விற்கும் வாசன் அணி கொஞ்சம் பலம் சேர்க்கும். போன முறை விஜயகாந்த் கட்சியால் அ தி மு க விற்கு கொஞ்சம் பலம் சேர்ந்தது போல.வாசன் காங். வாக்குகளைப் பிரிப்பார். அ தி மு க விற்கு சாதகம் ஆகலாமே.
Rate this:
15 members
54 members
20 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
07-ஏப்-201314:05:50 IST Report Abuse
Pannadai Pandian இந்த வாசன் தஞ்சாவூர் தண்ணிய குடிச்ச ஆளு தஞ்சை மண்ணுக்கே உரிய இன்டலிஜென்ஸ், திகிடுதித்தம், சுயநலம், சுபீரியாரிடி காம்ப்ளெக்ஸ் எல்லாம் உண்டு. 2006 இல் இருந்து 2011 வரை கோபாலபுரத்திலேயே குடி கொண்டு 2009 இல் இலங்கை தமிழ் மக்களின் இன படுகொலைக்கு வெத்திலை பாக்கை மென்று கொண்டே துடையில் தாளம் போட்டு கொண்டு ரசித்து கொண்டிருந்தார். 15 நாள் முன் வரை தமிழக அரசுக்கு எதிராக அறிக்கைகள் கொடுத்து கொண்டிருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் களத்தில் இருக்கும் சூடு கண்டு அச்சம் வந்துவிட்டது. எனவே உருவத்தை மாற்றி மக்களை ஏமாற்ற திட்டம் போடுகின்றனர். அது தமிழ் மாநில காங்கிரசாகவும் தமிழக ஜனநாயக பேரவையாகவும் உருவெடுக்கலாம். அதாவது இது OLD WINE IN NEW BOTTLE . இது எல்லாம் காங்கிரஸ் மேலிடத்து ஏர்ப்பாட்டுடன் நடக்கிறது. காங்கிரஸ் லேபிளில் போட்டி இட்டால் உரு தேறாது என்று வெள்ளைக்கார கூட்டம் வேற வேற உருவம் எடுத்து தேர்தலில் ஜெயிச்ச பின் மறுபடியும் வந்து சேர்ந்துடுங்க என்று திட்டம் போட்டு அனுப்பி இருக்கு. தமிழ்நாட்டு மக்கள் தற்போது எல்லா சரக்கையும் டாஸ்மாக் மூலம் நல்லா அடிச்சு இது புதுசா பழசா என்பதை நல்லா புரிஞ்சு வைச்சுருக்காங்க. எந்த ரூபத்தில் வந்தாலும் தோற்கடிப்பார்கள். இந்த கொலையாளிகளை அதிமுக சேர்க்க கூடாது. சேர்த்தால் மாணவர்களின், தமிழ் உணர்வாளர்களின் இளம் வாக்காளர்களின் வாக்குகள் கிடைக்காது. எனவே கவனம் அதிமுகவுக்கு நன்கு தேவை. கெட்டப்பெயர் தற்போது வாங்கினால் கூடிய விரைவில் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் பேரடி விழும், ஜாக்கிரதை.
Rate this:
8 members
121 members
90 members
Share this comment
itashokkumar - Trichy,இந்தியா
10-ஏப்-201314:14:01 IST Report Abuse
itashokkumarவாசன் என்றால் யாரு.?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sampath kumar - jeddah,சவுதி அரேபியா
07-ஏப்-201313:54:48 IST Report Abuse
sampath kumar காங்கிரஸ் ஒரு முடிந்துபோன ஒரு விஷயம் ..காந்தி சொன்னபோது நேரு காங்கிரஸ் கட்சியை ..சுதந்திரம் வாங்கியவுடன் கலைத்து இருக்கணும் ..50 வருஷம் காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவை ஆண்டது ..என்ன கிழிச்சு இருக்கு ..எங்கேயோ கிடந்த இத்தாலி காரி இப்போ இந்தியாவின் தலைவி வெக்ககேடு
Rate this:
23 members
1 members
50 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்