ஓட்டு போடாதவங்களுக்கு கேள்வி கேட்க உரிமையில்லை'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆமதாபாத் :"" ஓட்டுப் போடுவது, நம் ஜனநாயக கடமை. ஓட்டளிக்காதவர்களுக்கு, சமூகத்தில் நிகழும் குறைபாடுகள் குறித்து, கேள்வி கேட்பதற்கு, உரிமை இல்லை,'' என, விண்வெளி வீராங்கனை, சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சுனிதா வில்லியம்ஸ், 47. இவரது தந்தை, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். சுனிதா, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, "நாசா' வில், விண்வெளி வீராங்கனையாக உள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ், தற்போது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள, தொழில் நுட்ப பல்கலை கழகம், சுனிதா வில்லியம்சுக்கு, நேற்று, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இந்த விழாவில், சுனிதா வில்லியம்ஸ் பேசியதாவது:ஜனநாயக நாட்டில்,தேர்தலுக்கு முக்கிய பங்கு உண்டு. தேர்தலில், ஓட்டளிக்க வேண்டியது, ஒவ்வொரு வரின் ஜனநாயக கடமை. ஜனநாயகத்தில், நாமும் பங்கேற்கிறோம் என்பதை, ஓட்டளிப்பதன் மூலமே, வெளிப்படுத்த முடியும்.ஓட்டளிக்காதவர்களுக்கு, சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் குறித்து, கேள்வி கேட்பதற்கோ, புகார் தெரிவிப்பதற்கோ, உரிமை இல்லை. ஜனநாயக அமைப்பின் மீது, கூறப்படும், ஒரே குறைபாடு, தாமதம் தான்.ஜனநாயக அமைப்பில், எந்த மாற்றமும், தாமதமாகத் தான், ஏற்படும். ஒரு வகையில் பார்த்தால், இந்த தாமதம், ஆரோக்கியமானதே. ஒரே இரவில் ஏற்படும் மாற்றங்கள், மிகவும் அபாயகரமானவை. கடுமையாக உழைத்தால், எந்த விஷயத்திலும், வெற்றியை அடையலாம்.இவ்வாறு, சுனிதா வில்லியம்ஸ் பேசினார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
10-ஏப்-201318:12:57 IST Report Abuse
LAX ஜூ.... ஜூ.... மாரி. சுனிதா வில்லியம்ஸின் சூடான சூடு. பொறுப்பிலிருப்பவர்களின் இரு துருவ கருத்துக்கள். வாழ்த்துக்கள் சுனிதாஜி.
Rate this:
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
07-ஏப்-201315:29:59 IST Report Abuse
vaaithaa vampan நீங்க சொல்லுவது வேற ஊருக்கா எங்க ஊருக்கா. எங்க ஊரில் ஓட்டு போட்டவனும் கேட்கமாட்டான், ஓட்டு போடாதவனும் கேட்டாக மாட்டான் இங்க தான் இலவசத்தில் மதி இழந்து, மிடாஸ் சரக்கால் நினைவிழந்து கிடக்கானே அப்புறம் எப்படி கேள்வி கேப்பான். மிடாஸ் சகோதரிகள் வாழ்க.....................
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
07-ஏப்-201314:12:19 IST Report Abuse
amukkusaamy வாக்களிக்க விருப்பம் இல்லாதவன் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்.
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
07-ஏப்-201313:24:44 IST Report Abuse
R.சுதாகர் இந்தியாவில் ஒரே இரவில் ஜனநாயக அமைப்பே இல்லாமல் இல்லாமல் போய்விட்டால்? பிறகு வருந்திப் பிரயோஜனம் இல்லை. மாற்றம் என்பது முன்னேற்றமாக இருந்தால் இவர் சொல்வது சரி. ஆனால் ஒவ்வொரு நாளும் நிலைமை மிக மிக மோசமாகிக்கொண்டே வந்தால்...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஏப்-201313:17:53 IST Report Abuse
g.s,rajan அது சரி ஒட்டுப்போட்டவங்க கேள்வி கேட்டா எதாவது காரணத்தை காட்டி உள்ளே புடிச்சு போட்டுற மாட்டீங்களே மேலும் கேள்வியும் கேட்டு அவர்களே அதற்கு பதிலும் அவர்களே சொன்னா ஏதும் தண்டனை தர சட்டத்தில் இடம் இருக்கா ?கேள்வி கேட்கத்தான் ஒருவருக்கு உரிமை உள்ளதா ?பதில் சொல்ல உரிமை இல்லையா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை ?
Rate this:
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
07-ஏப்-201311:52:29 IST Report Abuse
யமதர்மன் வரி கட்டாதவர்கள் அரசியலில் பதவி ஏற்கும் போது வரி கட்டும் ஒட்டு போடாதவர்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
07-ஏப்-201310:46:39 IST Report Abuse
தமிழ் குடிமகன் மார்கண்டேய கட்ஜுவ மனசுல வச்சு சொல்லலியே .
Rate this:
Share this comment
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
07-ஏப்-201318:58:07 IST Report Abuse
Rangiem N Annamalaiநானும் அதை நினைத்தேன் ...
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
07-ஏப்-201310:37:29 IST Report Abuse
Ambaiyaar@raja சுனிதா அவர்களே நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் நம் மக்கள் ஒரு போதும் நல்லவர்களை தெரிவு செய்வதே இல்லை எப்போதும் நம் வாக்காளர்கள் சூழ்நிலைகளின் படி தான் வாக்கு அளிப்பார்கள் சரியான சூழ்நிலை கைதிகள் இவர்கள். யார் நல்லது செய்வார்கள் என்பதை எல்லாம் இவர்கள் பார்க்கமாட்டார்கள் அப்படி பார்த்து இருந்தால் நல்லது செய்த காமராஜ் அவர்களை தோற்கடிதிருபார்களா? வோட்டு மட்டும் போடாமல் கேள்வி மட்டும் கேட்பான் நம் ஆளுங்க. இலவசம் கொடுத்தா அங்கு கும்பலா சென்று சண்டை செய்து அதை வாங்கிகொள்வான். பணம் கொடுத்தாலும் அதையும் வாங்கி கொள்வான் அவளவு உத்தமர்கள் நம்மவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
07-ஏப்-201310:27:54 IST Report Abuse
Kavee யோக்கியதையே இல்லாத வேட்பாளர்களுக்கு மனசாட்சி இல்லாமல் எப்படியம்மா ஒட்டு போட முடியும் ... எங்க நிலைமை புரியாமல் நீங்க மேல உக்காந்து கிட்டு ஏதாச்சும் சொல்லிட்டு போயிடுங்க ....
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஏப்-201309:57:18 IST Report Abuse
Jeyaseelan ஒட்டு போடாதவர்களை விடுங்கள். ஒட்டு போட்டவர்கள் கேட்கும் கேள்விக்காவது நமது ஆட்சியாளர்கள் பதில் சொல்வார்களா.......... ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்