E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
600 பக்க அறிக்கை : ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்கும் கூட்டு குழு தயாரிக்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
23:55

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்த, 600 பக்க அறிக்கையை, பார்லிமென்ட் கூட்டுக் குழு, முழு வீச்சில் தயாரித்து வருகிறது. இந்த வரைவு அறிக்கை, பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில், தாக்கல் செய்யப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழு, பல முறை கூடி ஆலோசனை செய்து விட்டது.

அழைக்க வேண்டும்:



"பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமும் விசாரிக்க வேண்டும். இருவரையும் கூட்டுக் குழுவுக்கு வரும்படி அழைக்க வேண்டும்' என, பா.ஜ., தீவிரமாக வலியுறுத்தியது. மற்றொரு புறம், தன்னை நேரில் அழைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என, தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர், ராஜாவும் கோரிக்கை விடுத்தார்.ஆனால், இந்த இரு கோரிக்கைகளையும், கூட்டுக் குழுவின் தலைவரான சாக்கோ, கிட்டத்தட்ட நிராகரித்து விட்டார்.அதனால், மன்மோகன் சிங்,சிதம்பரம், ராஜாவை அழைத்து, கூட்டுக் குழு விசாரிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றேநம்பப்படுகிறது.அதேநேரத்தில், கூட்டுக் குழு, தன் இறுதி கட்ட பணியில் இறங்கி யுள்ளது.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை யின் இறுதி கட்டத்தை, கூட்டுக் குழு அடைந்து விட்டதாகவே தெரிகிறது. பா.ஜ.,வும், - தி.மு.க.,வும், என்னதான் கோரிக்கைகளை முன்வைத்தாலும், அவை ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறிப்பாக, இனிமேல் புதியசாட்சிகள் எவரையும் அழைக்க கூடாது என்பதில், கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோ உறுதியாக உள்ளார்.எனவே, வரைவு அறிக்கை தயார் செய்யும் பணிகளை, முடுக்கி விட்டுள்ளார். அதன்படி, 600பக்கங்களைக் கொண்ட வரைவு அறிக்கை ஒன்று, தயாராகிவருகிறது. பார்லிமென்டின், இரண்டாம் கட்ட பட்ஜெட்கூட்டத் தொடர், வரும், 22ம் தேதி துவங்க உள்ளது. அப்போது,கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோ, வரைவு அறிக்கையை தாக்கல் செய்வார் என, தெரிகிறது.ஆனாலும், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, பெரிய அளவில் பரபரப்புகிளம்பலாம் என, தெரிகிறது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்,பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்திற்கு தொடர்புகள் இருப்பது போல, அவர்கள் மீது சந்தேகங்களை பா.ஜ.,வும், ராஜாவும் எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். அதனால், வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, அது ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமாஎன்பது தெரியவில்லை.இருந்தாலும், அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நேரத்தில், அதை கூட்டுக் குழுவில்,ஓட்டெடுப்புக்கு விட வாய்ப்பு உள்ளது.

புரியாத புதிர் :



கூட்டுக் குழுவின் தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள, 30 உறுப்பினர்களில், காங்கிரஸ் 11, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி 1, தேசியவாத காங்கிரஸ் 1 என, அரசை ஆதரிப்பவர்கள், 15 பேர் உள்ளனர். எதிர்தரப்பிலும் பா.ஜ., 6, தி.மு.க., 2, அ.தி.மு.க., 1,திரிணமுல் காங்கிரஸ் 1, ஐக்கிய ஜனதாதளம் 2, பிஜு ஜனதா தளம் 1, இடதுசாரிகள், 2 என, 15 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே,ஓட்டெடுப்பு நடந்தால், முடிவு எப்படி இருக்கும் என்பதும்புதிராக உள்ளது.இருப்பினும், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளைசரிகட்டி, ஓட்டெடுப்பில் பங்கெடுக்க விடாமல் செய்வதன் மூலம், பெரும்பான்மையை, காங்கிரஸ் நிரூபிக்க முயலும். அ.தி.மு.க,வின் முடிவு என்னஎன்பது, இதுவரை தெளிவாக இல்லை.யார் யாரை சாட்சிகளாக அழைக்கலாம் என்பதை, கூட்டுக் குழுவே முடிவு செய்யும் என்றாலும், தலைவர் சாக்கோ, தன்அதிகாரத்தை பயன்படுத்தி அந்த முடிவை மாற்றலாம்.பி.ஏ.சி., எனப்படும் பார்லிமென்ட் பொது கணக்கு குழு கூட, இதே ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வருகிறது."பிரதமரை சாட்சியாக அழைக்கலாம்' என, அக்குழு முடிவெடுத்த போது, "அது தேவையில்லை' என, அக்குழுவின் தலைவர்முரளி மனோகர் ஜோஷி முடிவெடுத்தார். அதையே உதாரணமாக்கி, கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோவும் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கலாம்.

ரகளைக்கு வாய்ப்பு:



பி.ஏ.சி., தலைவர் முரளிமனோகர் ஜோஷி, கடந்த ஆண்டு ஒரு அறிக்கை தயார் செய்து, அதை தாக்கல் செய்ய முயன்றபோது, காங்கிரஸ் மிகப்பெரிய கலாட்டாவில் இறங்கியது. சைபுதீன் சோஸ் திடீர் தலைவராக ஆன கூத்தும், நடந்தது. ஒருவழியாக, அந்த அறிக்கையை சபாநாயகர் மீராகுமாருக்கு, முரளி மனோகர் ஜோஷி அனுப்பி வைத்தார்.ஆனாலும், உறுப்பினர்களின் கையெழுத்து இல்லை என கூறி, அதை மீராகுமார் நிராகரித்தார். ஆக, மிக முக்கியமான ஊழல் இது என்பதால், அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, மிகப்பெரிய ரகளை ஏற்படவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-201317:54:02 IST Report Abuse
Pugazh V குற்றம் சாட்டப்பட்டவரை விசாஇக்காமலும் அவரது விளக்கத்தைக் கேட்காமலும் ஒருதலைப்பட்சமாக ஒரு அறிக்கை தயாராகிறது. நியாயம் தானா இது? அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதாலா? இதே போல கெலிகாப்டர் ஊழலுக்கும் குழு அமைப்பார்களா? 17000 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்தியதாக சி ஏ ஜி சொல்லும் மோடி பற்றியும் விசாரிக்க குழு அமைக்கப்படுமா? சத்தமே வராதே, இதெல்லாம் கேட்டால் சும்மா உள்ளே போடுங்க, நொங்கு எடுங்க என்றால் காவல் துறையும் நீதித் துறையும் பனையேறிகளா, அவர்களை அவமதிக்காதீர்கள்.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
07-ஏப்-201315:43:24 IST Report Abuse
Raja இதில் ஒருத்தர் மேல மொத்தமாக குற்றம் சாட்டிவிட்டு மற்றவர் எல்லாம் யோக்கியவான்கள் போல் நடப்பதற்குத்தான் இந்த நாடகம் எல்லாம்....இதற்கு அதிமுக வும் காங்கிரஸ் க்கு ஆதரவாக சேர்ந்துவிடும் இப்போ கூட்டணி வேற இல்லை கேட்கவா வேணும் நடத்துங்க ...என்னைய இது ஜனநாயகம் ... ராஜா ....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
S K RAM - Chennai,இந்தியா
07-ஏப்-201314:51:01 IST Report Abuse
S K RAM ஆமா எல்லாரையும் வெளிய விட்டுடுங்க .. அப்புறம் 600 என்ன 6000 பக்கம் குடுத்தா கூட ஒரு பிரயோஜனமும் கிடையாது. போங்கடா .....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201317:39:31 IST Report Abuse
சு கனகராஜ் என்னய்யா பண்றீங்க சாமனிய மனுஷன் ஒரு தப்பு பண்ண உடனே தூக்கி உள்ள போட்டு நைய புடிக்கிறீங்க அரசியவாதிகள மட்டும் வெளிய விட்டு மலை மரியாதையோடு பகட்டா ஆலயுறாங்க 2 ஜி ல எல்லாரையும் தூக்கி உள்ள போட்டு நொங்கு எடுங்க ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-201313:46:38 IST Report Abuse
Pugazh V 30 இல் 15 உறுப்பினர்கள் எதிர் அணியைச் சேர்ந்தவர்கள். இருந்தும் இந்தக் குழு டுபாக்கூர் என்றால், அனைத்துக் கட்சிகளுமே டுபாக்கூர், ஒரு அறிவும் தெளிவும் இல்லாத கட்சிகள் என்றாகிறது. சரிதானே? குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமலே ஒரு அறிக்கை , என்ன அநியாயம், கொடுமை. எலிமெண்டரி ஸ்கூலில் கூட ஒரு பையன் கிள்ளறான் சார், என்று சொன்னால், அந்த பையனிடம், கிள்ளினியா என்று விசாரிப்பார்கள். இங்கே சட்டத்தையும் குழுவின் அதிகாரங்களையும் மதித்து, தன்னிலை விளக்கம் அளிக்க விரும்பும் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்படுவது நியாயமே அன்று. பலரும் இங்கு சொன்னது போல இந்தக் குழுவின் அறிக்கை ஒரு தலைப்பட்சமானது. ஆனால், இதே போல, அரசுக்கு 17000 கோடி இழப்பு ஏற்ப்படுத்தியதாக சி ஏ ஜி யால் குற்றம் சாட்டப்பட்ட மோடி பற்றியும் ஒரு குழு அமைக்கப்படுமா? மோடியை அழைக்காமலே அறிக்கை தயாராகுமா?
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
07-ஏப்-201310:34:28 IST Report Abuse
Tamilan ஓப்பனிங் நல்லா தான் இருக்கு.....ஆனா பினிஷிங் சரி இல்லையே.........
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201317:46:37 IST Report Abuse
சு கனகராஜ் இந்த வழக்குல முக்கியமான சகோதர திருடர்களை இன்னும் கைது பன்னவே இல்லையே இதிலிருந்து தெரிகிறது இது ஓரவஞ்சனையான கேஸ் என்று ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
07-ஏப்-201309:45:55 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் குற்றவாளிகளையே விசாரிக்காமல் இவர்கள் யாரை வைத்து இந்த வழக்கினை விசாரித்தனர் ??? அதுவும் திருடனே , தான் திருடிய வழக்கினை விசாரித்தால் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாதா ??? தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை இழந்தவுடன், எதிர்வரும் அரசு , சிபிஐ மூலம் இந்த வழக்கினை மறு ஆய்வு செய்து திரும்ப நடத்த வேண்டும் அப்போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.. அதுவரை நடப்பதெல்லாம் நாடகங்கள் என்றே எண்ண தோன்றுகிறது... லேசான சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது , திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது.. திருடனை கடுமையாக அடக்கி , ஒடுக்க விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
Rate this:
20 members
1 members
5 members
Share this comment
Thanjaithamilar - Qatar,இந்தியா
07-ஏப்-201310:41:34 IST Report Abuse
Thanjaithamilarநல்ல யோசனை... நண்பரே.......
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201317:47:33 IST Report Abuse
சு கனகராஜ் கண்டிப்பாக அடுத்த ஆட்சியில் 2 ஜி கேஸ் மூலம் பல பெரும் புள்ளிகள் கைதாவார்கள் ...
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஏப்-201309:40:05 IST Report Abuse
g.s,rajan இலங்கைத்தீர்மானம் போல இதுவும் நிச்சயம் நீர்த்துத்தான் போகும் ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201317:48:25 IST Report Abuse
சு கனகராஜ் ஆதரவாளர்கள் 15 பெரும் மற்றும் சிலரை சில கோடி செலவு செய்தால் சேதாரமில்லாமல் குற்றவாளிகள் தப்ப வாய்ப்பிருக்கு ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
07-ஏப்-201309:27:55 IST Report Abuse
Krish Sami சரிதான், 150 சீட்டு இருப்பவங்கள அனுப்பிவிட்டு, 23 சீட்டு உள்ளவங்கள ஆள சொல்லலாம். தி மு க வுக்கு மைனாரிட்டி அரசாங்கம் நடத்தி பழக்கம் உண்டே காலாகாலத்துல கல்லா கட்டலாம்.
Rate this:
75 members
0 members
9 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07-ஏப்-201309:20:30 IST Report Abuse
kumaresan.m " ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்த, 600 பக்க அறிக்கையை, பார்லிமென்ட் கூட்டுக் குழு தயாரித்து வருகிறது .....அப்படி என்றால் என்ன அர்த்தம் ....முடிவு என்னவாக இருக்கும் ? ... இச் செய்தியின் மூலம் விளங்குவது என்ன வென்றால் காங்கிரஸ் கட்சி ...இதனை எவ்வளவுக்கு எவ்வளவு மூடி மறைக்க முடியுமோ ..மறைக்க முயற்சி செய்கிறது"
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-ஏப்-201317:49:57 IST Report Abuse
சு கனகராஜ் "நிதி" யை கூடுதலாக ஒதுக்கி ஒரு "நிதி" யின் பேரன் "நிதி" இன்னும் கைது கூட செய்யவே இல்லையே ...
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
07-ஏப்-201309:10:29 IST Report Abuse
JALRA JAYRAMAN மத்திய உழல்கள் தான் பெரிதுபடுதபடுகின்றன மாநிலங்களில் உழல் என்பது கிடையாதா. வருவாய் இழப்பு உழல் என்கின்றனர் அப்போது மோடி ஆட்சியில் வருவாய் இழப்பு உழல் இல்லை என்பது இரட்டை நிலை இல்லையா?
Rate this:
2 members
0 members
34 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.