E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
என் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் பா.ஜ., செயல்பாடு இல்லை: அத்வானி பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
23:57

புதுடில்லி:"" இன்றைய பா.ஜ.,வின் செயல்பாடுகளுக்கும், என் சிந்தனைகளுக்கும், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. அயோத்தி விவகாரத்துக்காக, யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி பேசினார்.

ஆண்டு விழா:பா.ஜ., கட்சி நிறுவப்பட்டதன், 33 வது ஆண்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் மூத்த தலைவர், அத்வானி பேசியதாவது:சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், என்னை பாராட்டி பேசியதாக, பலரும் கூறுகின்றனர். இது, பெரிய விஷயமில்லை. எந்த ஒரு விஷயத்தையும், சரியாக பேச வேண்டும். அப்படி பேசினால், உலகம், நம் பேச்சை, அங்கீகரிக்கும்; பாராட்டும்.உண்மையை பேசுவதற்கு, எப்போதும் தயங்க கூடாது. தாழ்வு மனப்பான்மையுடன், எந்த சிந்தனையையும் மேற்கொள்ளக் கூடாது. எந்த சூழ்நிலையிலும், உங்களுக்குள், தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடாமல், பார்த்துக் கொள்ளுங்கள்.அயோத்தி பிரச்னைக்காக, யாரிடமும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அதற்காக, பெருமைப்பட வேண்டுமே தவிர, மன்னிப்பு கேட்க கூடாது. "ராமர் கோவில் மற்றும் அயோத்தி விவகாரங்களால் தான், பா.ஜ., வளர்ச்சி அடைந்தது' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் எங்களுக்கு, எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கலாசார அமைப்பு:



இதற்காக நாங்கள், பெருமைப்படுகிறோம். பா.ஜ., என்பது, ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல; கலாசார அமைப்பும் கூட. பா.ஜ., தொண்டர்கள், ஊழலை ஒழிப்பதற்காக, கடுமையாக பாடுபட வேண்டும்."பா.ஜ., வேறுபட்ட கருத்துக்களை உடைய கட்சி' என, சிலர் விமர்சிக்கின்றனர். ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம், அவர்களின் குற்றச்சாட்டுகளை, பொய் என, நிரூபித்து காட்ட வேண்டும். இன்றைய பா.ஜ.,வின் செயல்பாடுகள், என் சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லை. கட்சியின் இன்றைய செயல்பாடுகளுக்கும், என் கருத்துக்களுக்கும், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.இவ்வாறு, அத்வானி பேசினார்.

அதிகார பகிர்வு:



பா.ஜ., தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் பேசியதாவது:அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், அனைத்து மாநிலங் களுக்கும், அதிகாரங்கள், பகிர்ந்தளிக்கப்படும். பா.ஜ., ஆளும் மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் போன்ற, மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களையும், பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தே.ஜ., கூட்டணியிலிருந்து, சில கட்சிகள், வெளியேறப் போவதாக, காங்., கட்சியினர், பொய் பிரசாரம் செய்கின்றனர். அவர்களின் கனவு, பலிக்காது. ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகித்த, திரிணமுல் காங்., தி.மு.க., போன்ற கட்சிகள், அதிலிருந்து வெளியேறியதை, நினைவு படுத்த விரும்புகிறோம்.இந்தியாவில், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார். அவரை, வேறு யாரும், முறியடிக்க முடியாது. இதில், யாருக்கும், மாற்று கருத்து இருக்க முடியாது.அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, தனிப்பட்ட யாரும் முடிவு செய்ய முடியாது. கட்சியின், பார்லிமென்ட் குழு தான், இதை முடிவு செய்யும்.

நாட்டுக்காக பாடுபட்ட:



"இந்தியாவின் பிரச்னைகளை தீர்த்து வைக்க, எந்த தலைவரும், குதிரையில் வரப் போவது இல்லை' என, சிலர், பேசியுள்ளனர். அடுத்து, மத்தியில் ஆட்சியில் அமரப் போகும், பா.ஜ., தலைவர், கண்டிப்பாக, குதிரையில் வர மாட்டார்.கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டுக்காக பாடுபட்ட ஒருவர் தான், பிரதமராவார். பிரிட்டனிலோ, இத்தாலியிலோ, அமெரிக்காவிலோ படித்து விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, பா.ஜ., தலைவர்கள்.இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், காங்., துணை தலைவர், ராகுல் பேசியதற்கு பதிலடியாக, ராஜ்நாத் சிங், இவ்வாறு பேசியுள்ளது, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அத்வானியே அடுத்த பிரதமர்':



அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிப்பதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், விஜய் கோயல், நேற்று அளித்த பேட்டி:அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அத்வானி தான், பிரதமர். இதில், எந்த மாற்றமும் இல்லை. கட்சி, துவங்கப்பட்டது முதல், அத்வானியும், வாஜ்பாயும் தான், கட்சியை வழி நடத்துகின்றனர்.வாஜ்பாய்க்கு, உடல் நலம் சரியில்லாததால், அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. எனவே, அத்வானி தான், கட்சியை வழி நடத்த வேண்டும். அவர் தலைமையில், அடுத்த அரசு, அமைய வேண்டும்.இவ்வாறு, விஜய் கோயல் கூறினார்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (39)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
09-ஏப்-201319:02:03 IST Report Abuse
p.saravanan அத்வானி அவர்களை குறைத்து மதிப்பிட கூடாது . என்றும் மரியாதைக்குரியவர் . கடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பட்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதை தெளிவு படுதவிரும்புகிறேன் . மோடி அவர்கள் தனது திறமையால் குஜராத் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் . திறமைக்கு என்றும் நாம் தான் வாய்ப்பளிக்க வேண்டும் . மோடி அவர்கள் குருவை மிஞ்சிய சிஷ்யனாக உள்ளாரே .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajakumar - Tenkasi,இந்தியா
09-ஏப்-201311:39:29 IST Report Abuse
Rajakumar அத்வானி தான் மோடிக்கு குரு ...குரு இருக்கும் போது சிஷ்யன் அவசர படவேண்டாம் ...அடுத்து பிஜேபி கு மோடி மட்டும் தான ...இப்ப அத்வானி பிரதமாரான நல்லது ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
07-ஏப்-201319:12:52 IST Report Abuse
vandu murugan கத்மண்டு விமான கடத்தல் பற்றி உங்களுக்கு தெர்யுமா அத்வானி ஜி அவர்களே, எஇன் கெட்கிரெஇன் என்றால் நீங்கள் தான் அப்போது டெபுடி prime மினிஸ்டர் இதற்கு சரியான பதில் சொலிவிட்டு பிரதமர் கனவிற்கு ஆசை படுங்கள் இல்லை என்ன்றால் ஓரம் கட்டவும் . ஹோம் மினிஸ்டர் ஆக அப்போது இருந்திகள் இல்லையா பதில் சொல்லுங்கள் இப்படிக்கு பப்ளிக் . அது சரி உங்களுக்கு தமிழ் தெர்யுமா .............
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Cancel
Anvar-Indian - shuwaikh,குவைத்
07-ஏப்-201318:52:39 IST Report Abuse
Anvar-Indian எவனாவது இருந்து தொலைங்க மக்களை வேறுபடுத்தாமல் நிம்மதியாக வாழவிடுங்கள். மக்களுக்கு அதிக தொல்லை தருவது அரசியல் வாதிகளின் சாணக்கிய தீவிரவாதம் தான்.
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
07-ஏப்-201318:31:26 IST Report Abuse
மும்பை தமிழன் மோடி தான் சரியான தேர்வு அத்வானி
Rate this:
9 members
0 members
5 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
07-ஏப்-201318:01:29 IST Report Abuse
naagai jagathratchagan அப்போ காங்கிரசுக்கு ..வாய்ப்பே இல்லியா ....இப்போ இருக்கிற காங்கிரஸ் புலிகள் எல்லாம் வெறும் அட்டைப் புலிகளா ..அம்மாடியோவ் ...போற போக்கைப்பார்த்தால் ...விடிஞ்சா தேர்தல் வந்துடுமா ...ஏன் இப்படி அடிச்சிக்கிறாங்க ..துள்ளிவரும் ஊழலிலே குளிக்கணுமா ...எதுக்காக இப்படி பதவி வெறியிலே இருக்கீங்க ...
Rate this:
3 members
1 members
3 members
Share this comment
Cancel
Narayanan - New Jersey,யூ.எஸ்.ஏ
07-ஏப்-201317:01:28 IST Report Abuse
Narayanan எப்படி தான் மனசாட்சி இல்லாமல் இப்படி சொல்ல முடிகிறதோ "அயோத்தி விவகாரத்துக்காக, யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை".
Rate this:
6 members
1 members
17 members
Share this comment
Cancel
Ajith Kumar, Athencode. - Kuzhithurai,இந்தியா
07-ஏப்-201315:58:13 IST Report Abuse
Ajith Kumar, Athencode. அத்வானியின் பிரதமர் ஆசை அப்பபோ வெளியே வருகிறது....
Rate this:
3 members
0 members
26 members
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
07-ஏப்-201313:11:35 IST Report Abuse
MJA Mayuram என்ன ஆட்சி அத்வானிக்கு.. ஏன் இந்த திணறல்..கட்சியின் அப்பாற்பட்டு நீங்கள் இந்த தேசத்தின் தலைவராக நாங்களே பார்க்கும்போது நீங்கள் ஏன் தடுமாறுகிறீர்கள்..மத பேதமில்லாமல் பேசிவந்த நீங்கள் மறுபடியும் பழைய குருடி கதவை தெறடி என்று புலம்புவது ஏன் ? வெட்கப்படவெண்டியவைகலுக்குகூட வெட்கப்படமாட்டேன் என்று சொல்லுவதன் மூலம் பிரதமர் பதவி ஆசை யாரையும் எப்படியும் பேச வைக்கும் என்பதுபோல் உள்ளது...உணர்ச்சி வசப்பட்டு பேசும் மோடியால் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும் கட்சியினரை குசிபடுத்தமுடியும் ஒட்டு வாங்க முடியாது..வாஜ்பாய் என்ற தனிமனிதர்தான் பிரதமராய் இருந்தாரே தவிர பிஜேபி தலைவர் வாஜ்பாயிக்கு பிரதமர் பதவியை மக்கள் கொடுக்கவில்லை..உங்களைபோன்ற தலைவர்கள் கத்துகுட்டிகளின் பின்னால் போகவேண்டுமென்று நினைப்பதைவிட அவர்களை உங்களின் பின் வர முயற்ச்சி செய்வதே மேல்...பாராளுமன்றத்தில் இந்தியா செக்யுலர் கன்ட்ரி என்று மார் தட்டி பேசியவர் நீங்கள் தான் நீங்களே மசூதி இடிப்பை பெருமையாக பேசலாமா தவறில்லையா..பதவிக்காக பேசியவர்கள் சரித்திரத்தில் காணாமல் போயுள்ளார்கள் அவர்களித்தேடி பதவி வந்த்தவுடன் அவர்கள் சரித்திரத்தில் வாழ்கிறார்கள் (கர்மவீரர் காமராஜ்)...
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
07-ஏப்-201312:29:58 IST Report Abuse
Mohamed Nawaz "இந்தியாவின் பிரச்னைகளை தீர்த்து வைக்க, எந்த தலைவரும், குதிரையில் வரப் போவது இல்லை' பிரச்சினைகளை நீங்கள் உண்டாக்காமல் இருந்தாலே போதுமே.
Rate this:
9 members
0 members
21 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.