Lack of good governance robs citizens of their security: President | ஜனநாயக அமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள ஊழல்: ஜனாதிபதி பிரணாப் வேதனை| Dinamalar

ஜனநாயக அமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள ஊழல்: ஜனாதிபதி பிரணாப் வேதனை

Added : ஏப் 06, 2013 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜனநாயக அமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள ஊழல்: ஜனாதிபதி பிரணாப் வேதனை,Lack of good governance robs citizens of their security: President

புதுடில்லி :""ஜனநாயக அமைப்புக்கு, பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, ஊழல் தான்,'' என, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பேசினார்.

சி.பி.ஐ., துவங்கப்பட்டதன், பொன்விழா கொண்டாட்டம், டில்லியில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் பங்கேற்ற, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறப்பாக பணியாற்றிய, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, பதக்கங்களை வழங்கினார்.


திறமையற்ற நிர்வாகம்:

இதன்பின், அவர் பேசியதாவது:திறமையற்ற நிர்வாகம் தான், சமுதாயத்தில் நிலவும், அனைத்து குறைபாடுகளுக்கும் காரணமாக உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பும், உரிமைகளும், இதனால் தான், பாதிப்புக்கு ஆளாகின்றன. டில்லியில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நிர்வாக குறைபாட்டால் தான், நடந்தது. நம் நாட்டின் ஜனநாயகத்துக்கு, மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஊழலே. இதன் காரணமாகவே, பொதுமக்களிடையே, சமத்துவத்தை ஏற்படுத்துவது, இயலாத காரியமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி, சமநிலையானதாக இருக்க வேண்டும். நம் நாட்டில், வறுமை இன்னும் உள்ளது.


சவால்கள் ஏராளம்:

சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ள மக்களை, மேம்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. நமக்கு முன், ஏராளமான சவால்கள் உள்ளன. இவற்றை, உறுதியுடன் எதிர்நோக்கி, முறியடிக்க வேண்டும். நாட்டின் வளங்களை, பொதுமக்களுக்கு, சமமாக பகிர்ந்தளிக்கும் நடைமுறையில் மாற்றம் தேவை. சிறப்பான நிர்வாகத்தின் மூலம் மட்டுமே, இதை சாத்தியமாக்க முடியும்.எந்த குற்றவாளியும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவது தான், புலனாய்வு அமைப்புகளின் கடமை. எந்த வழக்கிலும், தாமதம் இன்றி, விரைவான நீதி கிடைக்க வேண்டும்.இவ்வாறு, பிரணாப் முகர்ஜி பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
11-ஏப்-201320:23:59 IST Report Abuse
Ravi Ramanujam நீங்கள் நிதி அமைச்சராக இருந்தபோது இதே ஊழலை வளர்த்து விட்டு உங்கள் கட்சியை செல்வ செழிப்பில் மிதக்க விட்டவர்களில் நீங்களும் ஒருவர். என்பதை எண்ணி பார்ப்பது நல்லது. பல நாடுகளில் பதுக்கிய பணத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததும் நீங்கள் தான். மனசாட்சி ஒன்று இருந்தால் அதை கேட்டு பார்ப்பது நல்லது. நித்தம் நித்தம் இதோ வெளி நாட்டில் பதுக்கியவர்களின் பட்டியல் வெளிவருவதாக விட்ட அறிக்கைகள் எத்தனை? ஊழலை பற்றி நீங்கள் பேசினால் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஏப்-201317:23:19 IST Report Abuse
g.s,rajan என்ன ஆச்சு நான் நிதி மந்திரியா இருந்தேனா ?என்ன ஆச்சு ?இப்ப ஜனாதிபதி ஆயிட்டேனா ,என்ன ஆச்சு ?ஆனா அப்ப நடந்தது ,அதுக்கு முன்னாடி நடந்தது எதுவுமே நினைவுக்கு வரல என்ன ஆச்சு ?இந்தியாவிலா, ஊழலா? மொத்ததுல உங்களுக்கெல்லாம் ஏதோ ஆயிடிச்சு போல இருக்கு வெயில் ரொம்ப அதிகமோ ?,நான் நல்லாத்தான் இருக்கேன் .அது சரி உங்களுக்கு என்ன ஆச்சு / ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
V.H.SULTHAN - bodinayakanur,இந்தியா
07-ஏப்-201316:11:31 IST Report Abuse
V.H.SULTHAN அரசு நிர்வாகத்தில் ஊழல், நிர்வாக திறமையின்மை போன்றவைகள் ஒரு நாட்டிற்கு மிகப்பெரிய சவால்தான். சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் அரசில் நெடுங்காலம் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி அவர்கள், தற்போது ஜனாதிபதியாக இருந்து கொண்டு இந்த கருத்தை கூறுகின்றார். ஜனநாயக அரசில், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு, ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாகும் அரசு, தனி மெஜாரிட்டி பெரும் நிலையில், பெரும் அதிகாரத்துடன், எதிர்கட்சிகளை துச்சமாக மதிக்கிறது. அமைச்சர் பிரதானிகள் மமதையுடன் செயல்படுகிறார்கள். அதுவே ஊழலுக்கான முதல் படியாகிறது. தட்டிக்கேட்க ஆளின்றி செயல்படும்போது, தவறுகள் மேலோங்கி, அதன் கீழுள்ள அரசின் நிர்வாக அமைப்பில் பரவிவிட, நீங்காத பழுது தானாக ஏற்படுகிறது. அவ்வாறின்றி, ஒரு கட்சி, மெஜாரிட்டி இல்லாது ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், அது ஒரு மைனாரிட்டி அரசாக, அதன் கூட்டணிக்கட்சிகளின் செயல்பாடுகளில் நிலவும் ஊழல்களை தட்டிக்கேட்க துணிவிழந்து நிற்கிறது. எதிர் கட்சிகளின் பெருவாரியான எதிர்ப்பும், பத்திரிகைகளின் ஊழலுக்கு எதிரான பிரசாரங்களும், மக்கள் மத்தியில் வெளியான பிறகே, ஆளும் அரசியல் கட்சி, தனது கூட்டணிக்கட்சிக்கு எதிரான சட்ட விசாரணைகளை மேற்கொள்கிறது. அதற்குள் காலம் கடந்து விடுகிறது. ஆக, ஊழல் மற்றும், நிர்வாகத் திறமையின்மை போன்றவைகள் ஆளும் கட்சியிலும் உண்டு, கூட்டணிக்கட்சிகளிலும் உண்டு. தலைமைப் பொறுப்பிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு, அனைத்தையும் கண்காணிக்கவும் தெரியவேண்டும், சுட்டிக்காட்டவும் தயக்கமிருக்கக் கூடாது. தவறு யார் செய்தபோதும் தாட்சண்யமின்றி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அத்தகைய துணிவுதான் அரசுக்குரியது. ஆனால், பொருளாதார மேதைகள் ஆளும் நமது தேசத்தில்தான், விலைவாசி உயர்வும், பல்வேறு நிர்வாகத் திறனற்ற அமைச்சர்களின் தான்தோன்றித்தனமான பெரும் ஊழல் பூதங்களும் உலவியிருக்கின்றன. மக்கள் ஜனநாயக அரசில், உயர்ந்த பொறுப்பினை அடைந்தவர்கள் பலகீனமாக தென்படுவது ஏன்? நல்லவர்களாக, திறமை படைத்தவர்களாக இருந்தும் தங்களின் கைகளைக் கட்டிக்கொண்டு இருப்பது ஏன்? வாய்மூடி மௌனம் கொண்டது ஏன்? நீங்கள் மக்களின் அரசன் அல்லவா? சட்டத்தின் துணையுடன், இரும்புக்கரம் கொண்டு, நாட்டிற்கு வளமான திட்டங்களை செயல்படுத்துவதிலும், சரியான நீதியான அரசு நிர்வாகத்தை உருவாக்குவதிலும், ஊழலற்ற அரசியல் சூழலை உருவாக்குவதிலும் உறுதியுடன் செயல்பட வேண்டாமா? அதற்கு, முதலில் சொந்த மற்றும் கூட்டணி அரசியல் களத்தில் இருக்கும் களைகளை வேரறுத்து வீசி எறியுங்கள். ஒன்று போட்டால் பத்து எடுக்கலாம் என்று கணக்குப்போடுபவர்களை, மக்கள் போட்ட மாலையில் மந்திரியாக இருக்கிறோம் என்பதை மறந்து, அதிகார போதையில் ஆணவம் கொண்டு, ஆகாசத்தில் மிதக்கும் அதிதீவிர அரசியல்வாதிகளை, அரசியல் திசைகளிளின்று அப்புறப்படுத்துங்கள். மேம்பட்ட, துறை அறிவுள்ள, நியாயமான மனிதர்களை அமைச்சர்களாக்குங்கள். அவர்களின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் வெளிப்படையாக்குங்கள். நிர்வாகத் திறமைக்கும், நேர்மைக்கும் மட்டுமே இடமளியுங்கள். முதலில், ஆறுகளையும், குளங்களையும் சீரமையுங்கள், பின்பு, வாய்க்கால்கள் தானாகவே உருவாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-201315:18:27 IST Report Abuse
Pugazh V அப்பப்பா, உடனே தனிமனித விமர்சனங்கள் தானா, மீண்டும் மீண்டும். யார் என்ன பேசி அது செய்தியாக வந்தாலும், அந்த செய்தியை விமர்சிக்காமல் அந்த நபரை விமர்சிப்பது கேவலமான போக்கு, தமிழகத்தில் மட்டும் காணப்படுவது. ஊழல் அரசியல்வாதிகளால் அல்ல உருவானது, இந்தியப் பணக்காரர்களால் தான். தெருவோர கான்ஸ்டபில் முதல் கமிஷனர், ஆர் டி ஒ உட்பட அதிகாரிகளும். தாசில்தார் ஆபீஸ் பியூன் முதல் கலக்டர் வரையும் ஊழலும் லஞ்சமும் இல்லையா? அரசியல்வாதி மட்டுமா ஊழல் செய்கிறான்? உடனே காங்கிரஸ் ஆண்டது, நீயும் காங்கிரஸ் என்பதா? என்னய்யா, இடையே சில காலம் ஜனதா பார்ட்டி, பி ஜே பி எல்லாம் ஆளவில்லையா? லேட்டஸ்டாக மோடி 17000 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்த்யதாக, ராஜா மேல் குற்றம் சாட்டிய சி ஏ ஜி குற்றம் சாட்டியிருக்கிறது. இன்று வரை மோடியும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஊடகங்களும் வாய் கூடி மவுநிகலாகிவிட்டன. காரணம் யாமறியோம் பராபரமே.
Rate this:
Share this comment
Cancel
Raja - Doha-Qatar,இந்தியா
07-ஏப்-201314:56:23 IST Report Abuse
Raja ஏன் இப்பதான் முழிச்சிருக்காறு நினைக்கிறேன் ......போய் பல் விளக்கிட்டு சாப்பிடுங்க பாஸ் ... ராஜா
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
07-ஏப்-201313:01:31 IST Report Abuse
Sundeli Siththar 2G ஆதர்ஷ், நிலக்கரி, காமன்வெல்த் போன்ற பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்தபோது அமைச்சரவையில் முக்கிய பங்காற்றியவருக்கு இப்பொழுதுதான் ஞானம் உதிக்கிறது போலும். ஏதோ, காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்பதை மறைக்காமல் சொன்னதற்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
07-ஏப்-201312:11:50 IST Report Abuse
Wilsonsam Sp பாவம் இவர் குழம்பி போய்ட்டார் போல
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
07-ஏப்-201311:23:26 IST Report Abuse
S Rama(samy)murthy திரு அப்துல் கலாம் முன்பு - you are null & void . அடுத்த முறை அவர் ஜனாதிபதி ஆகவேண்டும் -திரு அத்வானி அல்லது மோடி பிரதமர் ஆகவேண்டும் .சுப ராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
07-ஏப்-201310:45:29 IST Report Abuse
Kavee அட நம்ம சனாதிபதி என்னவோ புதுசா கண்டு பிடிச்சி அறீக்கை விட்டு இருக்கார். யாருக்குமே தெரியாத விஷயத்தை சொல்லுராபோல இதை தானே நாங்க எல்லாம் காலம் பூரா கத்திகிட்டு இருக்கோம். அதிகாரம் உள்ள நீங்களும் இதையே வெக்கம் இல்லாமல் சொல்லிக்கிட்டு இருந்தால் அப்புறம் உங்களுக்கு எதுக்கு இந்த பதவி? ஏதாச்சும் பன்னுங்கையா ...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
07-ஏப்-201310:13:52 IST Report Abuse
தமிழ் குடிமகன் good
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை