Advertisement
அவ தூறு வழக்கு விசாரணை : : ஆஜராக விஜயகாந்த்க்கு கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
00:20

திருவண்ணாமலை: அவதூறு வழக்கு விசாரணைக்கு, ஜூன், 6ம் தேதி விஜயகாந்த் ஆஜராக, திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, காந்தி சிலை அருகே, கடந்தாண்டு ஆகஸ்ட், 28ம் தேதி, தே.மு.தி.க., சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவதூறாக பேசியதாக, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், அரசு குற்ற பொது வக்கீல் அன்பழகன், ஜனவரி, 21ம் தேதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை, நேற்று முன்தினம் மாலை நடந்தது. வழக்கை ரத்து செய்ய கோரும், மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என, தே.மு.தி.க., மாவட்ட வக்கீல் பிரிவு செயலர் காளிங்கன், மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்று கொண்ட நீதிபதி டீக்காராமன், வழக்கை, வரும், ஜூன், 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம், விஜயகாந்த் தவறாமல் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.