நடிகை ரேவதி விவாகரத்து வழக்கில் 22ம் தேதி தீர்ப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகை ரேவதி விவாகரத்து வழக்கில் 22ம் தேதி தீர்ப்பு

Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி, நடிகை ரேவதி, அவரது கணவர் சுரேஷ் மேனன் தாக்கல் செய்த வழக்கில், இம்மாதம், 22ம் தேதி, சென்னை, குடும்ப நல கோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.
"மண் வாசனை' படத்தின் மூலம், தமிழ் திரை உலகில், அறிமுகமானவர், நடிகை ரேவதி. அதன்பின், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். ஒருமுறை, தேர்தலிலும் போட்டியிட்டார். சமூகப் பிரச்னைகளில் அக்கறை காட்டி வருபவர். இவருக்கும், கேமராமேன் சுரேஷ் மேனன் என்பவருக்கும், 1986 ல், திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து, ஒரு படத்தில் நடித்துள்ளனர்.
பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில், கடந்த ஆண்டு, அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர்.
விவாகரத்து வழக்கின் மீதான தீர்ப்பை, இம்மாதம், 22ம் தேதிக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் தள்ளி வைத்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
07-ஏப்-201306:52:53 IST Report Abuse
ஆரூர் ரங aanaaa onnaave kampeni nadathuraanga
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை