E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மனைவி உடன் தொடர்பு வைத்தவர் கொலை : கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் நிறுத்தம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
00:21

சென்னை: மனைவியின் கள்ளக் காதலனை, கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கணவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர், முத்து. இவரது மனைவி உடன், விஜி என்பவர், தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால், விஜியை கொலை செய்ததாகவும், முத்து மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2010, நவம்பரில், சம்பவம் நடந்தது. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. இந்த வழக்கை விசாரித்த, காஞ்சிபுரம், செஷன்ஸ் கோர்ட், முத்துவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு, அக்டோபரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட்டில், அப்பீல் மனுவை, முத்து தாக்கல் செய்தார். விசாரணை முடியும் வரை, தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமினில் விடவும் கோரினார்.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் உதயசங்கர், ""விஜியை கொலை செய்ததாக, மனைவியிடம், முத்து தெரிவித்தாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது மனைவி முதலில் அளித்த வாக்குமூலத்தை, பின்னர் மாற்றியுள்ளார். ஏற்றுக் கொள்ளத் தகாத சாட்சியத்தின் அடிப்படையில், முத்துவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள், பாஷா, தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கைப் பொருத்தவரை, மனைவியிடம், போலீசிடம், முத்து அளித்த வாக்குமூலத்தை, செஷன்ஸ் கோர்ட் கருத்தில் கொண்டுள்ளது. விஜியை கொலை செய்த பின், அதுபற்றி, தனது மனைவியிடம், முத்து கூறியதாக, போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது; ஆனால், கணவர் தன்னிடம் அவ்வாறு கூறவில்லை என, நீதிபதி முன், மனைவி மறுத்து விட்டதாக, வழக்கறிஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிறழ்சாட்சியாக மாறிய, மனைவி அளித்த வாக்குமூலத்தை, ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்றும், அதன் அடிப்படையில் தான், தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாமல், கோர்ட் உத்தரவின் அடிப்படையில், ஒருவர் சிறையில் இருப்பதாக, மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை நிறுத்தி வைக்க, இது தகுதியான வழக்கு என்பதில், நாங்கள் திருப்தியடைகிறோம். முத்துவுக்கு, ஜாமின் வழங்கப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, நிறுத்தி வைக்கப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை, ஒவ்வொரு மாதமும், முதல் வேலை நாளில், உத்திரமேரூர் கோர்ட்டில், ஆஜராக வேண்டும். இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.