Prevez Musharraf's nomination papers accepted from third seat | இரு தொகுதியில் தள்ளுபடி; ஒன்றில் வேட்புமனு ஏற்பு: முஷாரப்பிற்கு நிம்மதி| Dinamalar

இரு தொகுதியில் தள்ளுபடி; ஒன்றில் வேட்புமனு ஏற்பு: முஷாரப்பிற்கு நிம்மதி

Updated : ஏப் 07, 2013 | Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இரு தொகுதியில் தள்ளுபடி; ஒன்றில் வேட்புமனு ஏற்பு: முஷாரப்பிற்கு நிம்மதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இரண்டாவது முறையாக கராச்சி தொகுதியிலும் முன்னாள் அதிபர் முஷாரப்பின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மூன்றாவதாக சித்ரால் தொகுதியில் வேட்புமனு ஏற்கப்பட்டது.

பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு மே 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் முஷாரப் போட்டியிட முடிவு செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் தாய்நாடு திரும்பினார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி சார்பில், கராச்சி, கசூர், இஸ்லாமாபாத், சித்ரால் உள்ளிட்ட நான்கு தொகுதிகளல் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த வெள்ளியன்று கசூர் தொகுதியில் வேட்பு மனு தள்ளுபடியானது. இதையடுத்து கராச்சி தொகுதியிலும் இவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தானின் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மூன்று முறை மீறினார் என ஜமாத்-இ- இஸ்மாயில் தலைவர் ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். இதையடுத்து அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது தொகுதியில் ஏற்பு

இந்நிலையில் கைபர் பக்துன்வாலா மாகாணத்தில் சித்ரால் தொகுதியில் அவரது வேட்புமனு‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் முஷாரப்பிற்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு தொகுதியில் இவரது வேட்பு மனு தாக்கல் குறித்த நிலவரம் தெரியவில்லை. இதற்கிடையே முஷாரப் மீதான வழக்கின் விசா‌ரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUGA - Bangalore,இந்தியா
07-ஏப்-201319:01:25 IST Report Abuse
SUGA வாழ்த்துக்கள்..........
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
07-ஏப்-201315:10:13 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் என்ன அம்மாவைப்போல நாலு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தாரா? இங்கு பாத்திமா பீவி பலி கடா போல அங்கு யார் பலி கடாவோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை