தண்ணீருக்காக அணையில் சிறுநீர் கழிக்கவா முடியும்? அஜித் பவார் கருத்துக்கு எதிர்கட்சிகள் கண்டனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புனே: மகாராஷ்டிராவில் அணைகளில் தண்ணீர் இல்லை. தண்ணீர் திறந்து விடுவதற்கு நாம் சிறுநீர் கழிக்கவா முடியும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளதற்கு, எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனையடுத்து ஐ.பி.எல்., போட்டிகளை மும்பையில் நடத்துவதற்கு அம்மாநில எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், விவசாயி ஒருவர், பயிரிடப்பட்டுள்ள தனது நிலத்திற்க்கு தண்ணீர் தேவை என்றும், இதற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், விவசாயி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், சோலாபூர் பகுதியில், விவசாயி ஒருவர் தண்ணீர் கேட்டு 55 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் நாம் எங்கிருந்து தண்ணீர் பெற முடியும். அணையில் நாம் சிறுநீர் கழிக்கவா முடியும். குடிக்க போதிய அளவு தண்ணீர் இல்லாததால், எளிதாக சிறுநீர் கூட கழிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

அஜித் பவார், தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், இவர் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மின்வெட்டு குறித்து பேசிய அஜித் பவார், மகாராஷ்டிராவில் மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் தொகை அதிகரிக்கிறது. நான் காலையிலேயே மது அருந்தியுள்ளேன் என நீங்கள் நினைக்கிறீர்கள் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

எதிர்கட்சிகள் கண்டனம்: அஜித் பவாரின் கருத்துக்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில எதிர்கட்சிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பா.ஜ., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அஜித் பவார் உடனடியாக பதவி விலக வேண்டும். உரிய நாகரீகமின்றி கருத்துக்களை அஜித் பவார் வெளியிட்டுள்ளார். ஆனால் பொது மக்களுடன் சேர்ந்து இருப்பேன் என கூறிக்கொண்டு இது போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் கீழ்த்தரமானதாக உள்ளது என கூறியுள்ளது.

சிவசேனா கட்சி கூறுகையில், அஜித் பவார் பதவி விலக வேண்டும் என்பது குறைந்த பட்ச கோரிக்கை. அவருக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தை பார்லிமென்டிலும், மாநில சட்டசபையிலும் எழுப்புவோம் என கூறியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் ஆதரவு: தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர் , அஜித் பவார் கருத்து குறித்து தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், அஜித் பவார் பொறுப்பானவர். விவசாயிகளுக்காக நிறைய பணிகள் செய்துள்ளார். அஜித் பவாரின் கருத்து நகைச்சுவையானது என கூறியுள்ளார்.

மன்னிப்பு கோரினார்: எதிர்கட்சிகளின் கண்டனத்தை தொடர்ந்து அஜித் பவார், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவில் கொண்டு தாம் அவ்வாறு கூறவில்லை எனவும், தனது பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
09-ஏப்-201319:13:13 IST Report Abuse
amukkusaamy மூச்சா போற எடத்துல பபிள் கம் வச்சு ஒட்டிட்டா என்ன பண்ணுவியாம் ...
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
08-ஏப்-201310:04:22 IST Report Abuse
சு கனகராஜ் இப்படி ஒரு தரம் கேட்ட அரசியல்வாதியை பற்றி மற்ற அரசியல்வாதிகள் யாரும் எதிர்த்து குரல் கொடுக்க மாட்டேன்கிறார்களே அது ஏன் தம்மை போலதான் அவரும் என்று நினைத்து விட்டார்களோ ?
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
08-ஏப்-201310:03:26 IST Report Abuse
சு கனகராஜ் இது போன்ற கேவலமான அரசியல் வாதிகளும் இந்தியாவில் உள்ளார்கள் என்பதற்கு எடுத்துகாட்டாக இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
jayan - Salem,இந்தியா
08-ஏப்-201309:26:27 IST Report Abuse
jayan பவார் குடும்பமே ஒரு பச்சோந்தி குடும்பம் என்பது என் போன்ற மாஜி மும்பை வாசிகளுக்கே தெரியும் மராட்டியர்கள் மூத்திரம் குடிக்கும் அளவுக்கு கேவலமானவர்கள் அல்ல
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:21:36 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் //நேற்று புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மின்வெட்டு குறித்து பேசிய அஜித் பவார், மகாராஷ்டிராவில் மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் தொகை அதிகரிக்கிறது. நான் காலையிலேயே மது அருந்தியுள்ளேன் என நீங்கள் நினைக்கிறீர்கள் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். //..எனக்கு உள்ள டவுட்டு என்னன்னா இவர் தண்ணி போட்டுட்டுதான் கூட்டத்துக்கு போனாரோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
08-ஏப்-201309:18:02 IST Report Abuse
saeikkilaar சிறுநீர் கழிக்கும் அளவக்கு ஒங்க ஊருல தண்ணீர் இருக்கா இங்க முகுன்னா கூட முடியலை ஹாய் ஹாய் ஹாய்
Rate this:
Share this comment
Cancel
08-ஏப்-201305:06:48 IST Report Abuse
நாசிர் உசைன் - தமிழன்டா நீ சிறுநீர் கழிக்க வேண்டிய இடம் ipl விளையாட்டு மைதானம். என்ன இதற்கு மானிய விலையில் தண்ணீர் ipl 'க்கு தருகிறாய். திராவிட நாடு அழிவது உங்களை போன்ற பண பேய்களால் தான். மனிதனை நேசி மனிதம் வளரும்.
Rate this:
Share this comment
Cancel
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201300:53:30 IST Report Abuse
MRSaminathan - Thirumangalam ஐய்யா எங்களுக்கு வருங்கால பிரதமர் மற்றும் திட்ட கமிஷன் தலைவர் கிடைத்துவிட்டார். இவரை போல தலைவர் இந்தியாவில் யாருமே இல்லை. இப்போ சிறுநீர் மலம் என்று பேசும் இவர் பிரதமரானால் விவசாயிகளுக்கு ரொம்ப நன்மை செய்வார். அய்யா வல்லபாய் பட்டேல் அவர்களே எதற்கு நீங்கள் இந்தியாவை ஒன்று சேர்த்து விட்டு போய்விட்டீர்கள். இந்த மாதிரி படுபாவிகளைஎல்லாம் நாங்கள் சுமக்க வேண்டுமா என்ன? எமக்கு சேரன் சோழன் பாண்டியன் ஆளுமை போதுமே.
Rate this:
Share this comment
Cancel
Murali Krishnan M - Arni  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-201300:17:38 IST Report Abuse
Murali Krishnan M நல்ல அரசியல்வாதி்கள் இன்னும் என்னென்ன கேக்கணூம் என்று நம் தலையில் எழதி்யிருக்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்