முன்விரோத தகராறு மூவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு மூவர் மீது வழக்கு

Added : ஏப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பண்ருட்டி:முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம், ஆர்.எஸ்.மணி நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன், 21. இவர் பங்குனி உத்திர திருவிழாவின் போது வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரது பெயரை அழித்தார்.
இதன் காரணமாக இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 5ம் தேதி சம்சுதீனிடம், சிவப்பிரகாசம் அவரது நண்பர்கள் ரகு, ஏழுமலை ஆகியோர் தகராறு செய்து ஆபாசமாக திட்டி, தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து ரகு உட்பட மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை